மே நாள் - உலகத் #தொழிலாளர்_நாள் !
----------------------------
உழைக்கும் மக்கள் யாவருக்கும் 'மே நாள்' நல்வாழ்த்துகள்!
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் அவற்றை எதிர்த்துப் போராட உறுதியேற்போம்!
-------------------------
தொல்காப்பியன் திருமாவளவன் அறிக்கை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுற்றைகள் மற்றும் சுரண்டல் கொடுமைகள் உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கின்றன. அவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.
முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. சனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது.
குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது.
அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் கார்ப்பரேட் பெமுதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு வகையான தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் நான்குச் சட்டங்களாகத் தொகுத்துள்ளது. இவை நான்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த நான்கு சட்டத் தொகுப்புகளும் நவம்பர் 21, 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுமென பாஜக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் உழைக்கும் வர்க்கம் திரண்டு போராடியது.
விவசாயச் சட்டத்தை எதிர்த்து எப்படி தொடர் போராட்டங்களை நடத்தி மோடி அரசை அந்த சட்டங்களை திரும்பப் பெற வைத்து விவசாயச் சமூகம் வெற்றிக் கண்டதோ, அதேபோல் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறும் வரையில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது.
ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒடுக்கி முடக்கும் வகையில் இன்றைய பாஜக அரசு இயங்கிவருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து, நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறவைக்கவும்; இன்னபிற அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட மே நாளில் உறுதியேற்போம்!
உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம்! - ஆதிக்க
ஒடுக்குமுறை-சுரண்டலை முறியடிப்போம்!
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டிடும் விசிக காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்புச் சகோதரர் ஜோதிமணி அவர்களுக்கு குமராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தோம்.
முழுக்க முழுக்க
முஸ்லீம் தலைவர்கள் பங்கேற்ற
கோமேனி நினைவேந்தல் கூட்டத்தில்
முஸ்லீம் அல்லாத ஒரு தலைவர்
பங்கேற்றுள்ளார் என்றால்,
அவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களே!
கடந்த 22 ஆண்டுகளாக
முஸ்லீம்களோடு
இணைந்து
முஸ்லீமாகவே
இணைந்து
நோண்பு இருந்து வரும்
ஒரே முஸ்லீம் தலைவர்
இந்திய அளவில்
எழுச்சித்தமிழர் மட்டுமே!
#விடுதலைச்சிறுத்தைகள்
தேர்தல் பாதைக்கு வருவதற்கு முன்பிருந்தே
முஸ்லீம்களும்
தலித்துகளும்
அரசியல் களத்தில் மட்டுமல்ல;
சமூகக்களத்திலும்
இணைந்து களமாட வேண்டிய தேவையை உரத்து முழங்கிய ஒரே தலைவர் எழுச்சித்தமிழர் மட்டுமே!
நேற்று-
அயத்துல்லா அலி கோமேனி
நினைவேந்தல் கூட்டத்தில்
எழுச்சித்தமிழர்
ஆற்றிய உரை
அவசியம் யாவரும்
கேட்க வேண்டிய உரை.
கேளுங்கள்
தோழர்களே…
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
9.3.2026
7.3.2026 மதுரை மேலவாசலில் விசிக மண்டலத் துணைச் செயலாளர் ராம்குமார் பாண்டியன் அவர்களின் தந்தை சமையன் அவர்களின் படத்தை திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினேன் !
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில் 11ஆம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் அவர்களை பள்ளியில் வைத்தே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவனை காணொளியில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்!
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று மதுரையில் நடைபெற்ற 'காந்தியடிகளை மறவோம்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினேன்! மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன்
@mkstalin அவர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று மதுரையில் நடைபெற்ற 'காந்தியடிகளை மறவோம்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினேன்! மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன்
@mkstalin அவர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று மதுரையில் நடைபெற்ற 'காந்தியடிகளை மறவோம்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினேன்! மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன்
@mkstalin அவர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!