Hello @HardeepSPuri - recognise the room? Did your “Digital India” meetings with Epstein (who you claimed you never met one on one) take place in this boudoir? Have some shame & stop attending Cabinet meetings now at least.
இந்த மதன் கௌரி சும்மா இருக்கும் போது கிரகம் தாண்டி ஏலியன் வரைக்கும் போயி வீடியோ போடுவான்.
இன்னைக்கு தொக்கா 135 கிலோ மெத்த பெட்டமைன் சிக்கி இருக்கு. மூச்சு கூட விடாம கமுக்கமா இருக்கான்.💦
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
தனது தாயைத் தவறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் போடத் துப்பில்லாத முதல்வர் @TVKVijayHQ , தேர்தல் கால வழக்குக்குக்காக அக்கா கார்த்திகாவைக் கைதுசெய்து இருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
Ashu and Saurav’s first crime was waving the Tiranga at Jantar Mantar.
Their second crime? Refusing to back down.
Even after five days in jail, they walked into court with smiles on their faces, their spirits unbroken.
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?