குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும், நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அடுக்கடுக்கான வசனங்களை நம்பி, இன்று அன்றாடம் பயத்தில் உறைந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்..!
சற்று முன்னர் @MaridhasAnswers கைது..!
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாற���ில்லை!
கொலை, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம் எனத் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டிய அரசு..
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளைய��ம், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்��ள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
திமுக ஏன் கருப்பு கொடி ஏற்று���ிறது
பெண்களுக்கு பாராளுமன்றத்தில்
33 சதவீதம் இடம் கொடுக்கப் போகிறார்களே அதற்காகவா
அதற்கு சட்டம் இயற்றப் போகிறார்களே அதற்காகவா
மக்கள் தொகை கணக்கெடுப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கின்ற 82 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களே அதற்காகவா?
தனக்குத்தானே கருப்புக் கொடி ஏற்றி கொள்கின்ற கட்சி எதையாவது பார்த்திருக்கிறீர்களா?
பெண்களுக்கு எதிரான திமுகவை புறக்கணிப்போம்
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலில், சாத்தூர் தொகுதியின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
#Nainar4Sattur
@BJP4TamilNadu Social Media announcement of the Incharges for 33 'Lotus' Assembly Constituencies with the approval of Our State President Thiru.@NainarBJP Avl.
Happy to have taken part in a road show campaign at Kamarajar Nagar assembly constituency, Puducherry, this afternoon, in support of our NDA partner, Thiru @sscharles avl, President of Latchiya Jananayaga Katchi, contesting under the Watermelon symbol.
Presented to the spirited crowd how the NDA Government under the dynamic leadership of our Hon PM Thiru @narendramodi avl has ushered in people-centric welfare and rapid development across Puducherry.
The people of Puducherry are ready to reject the selfish politics of the I.N.D.I. alliance and trust the NDA to build a developed Puducherry envisioned by our beloved PM avl.
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்���து தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள��� இனியும் மன்னிப்பதாக இல்லை.
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
இன்றைய தினம் காலை, கோவை ரேஸ்கோர்ஸ் சாலை���ில் அமைக்கப்பட்டுள்ள "பால் டப்பா" நிறுவனத்தின் புதிய மண்டல அலுவலகத்தை திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தூய்மையான மற்றும் ஊட்டச்சத்து மிக்க பாலை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற இலக்குடன், தரமான பாலை வழங்குவதில் தனித்துவத்துடன் இயங்கி வரும் "பால் டப்பா" நிறுவனம் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்.
விவசாயத்தையும், கால்நடைகளையும் போற்றும் இதுபோன்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் உருவாகவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூ���மாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டய���ுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரி��்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.