விஜய் இந்த தேர்தலில் தோற்றுப் போயிருந்தால் பனையூருக்கு போய் படுத்து அடுத்த ஐந்து வருடம் கழித்துதான் மீண்டும் வெளியே வந்திருப்பார்... இன்று நீங்கள் தலைவர் ஸ்டாலினை தோற்கடித்திருக்கலாம், அமையப்போகும் புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள் என சொல்லி அடுத்த நாள் முதல் மக்கள் பணியை பார்க்க வந்து விடுவார் அதுதான் உண்மையான ஒரு தலைவனுக்கும் சினிமா கவர்ச்சியை மட்டும் கொண்டுள்ள ஒரு நடிகனுக்கும் இருக்கும் வித்தியாசம்...
He is a born leader, not an accidental tharkuri who got the power with just social media influence
வாழ்க நீ எம்மான்🙏🙏 @mkstalin
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஒன்றிய அரசின் தரவுகளிலேயே நீக்கமற நிறைந்து இருக்கின்றன.
ஒரு மாநிலம் வளர்ச்சி அடைந்து கொண்டு செல்கிறது என்பதை காட்டும் குறியீடுகள் அனைத்திலும் திமுக ஆட்சி முந்தைய அதிமுக ஆட்சிகளை விட சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதித்திருக்கிறது.
அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும் பொழுது எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் திமுக ஆட்சி சிறந்து விளங்குகிறது.
Gross State Domestic Product (GSDP) மாநில அரசின் ஜிடிபி இதில் எப்பொழுதும் முந்தைய அதிமுக ஆட்சியை விட திமுக சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் அடுத்து அதிமுக வந்தவுடன் பாதாளத்திற்கு இழுத்துச் சென்று விடுகிறார்கள்.
மீண்டும் திமுக வந்து அதை சரி செய்ய வேண்டி இருக்கிறது.
ஆனால் திமுகவே தொடர்ந்து ஆட்சி செய்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகம் குறையாமல் அடுத்தடுத்த கியர்களில் மேலே போய்க்கொண்டே இருக்கும்.
அதுபோலவே தமிழ்நாட்டின் தனிநபர் வருமானமானது இந்த 2021-26 ஆட்சிக் காலத்தில்,2.1 லட்சத்திலிருந்து 3.62 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இவ கிட்டத்தட்ட 73 சதவிகிதம் அதிகம்.2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இது 5 லட்சத்தை தாண்டி போய்விடும்.
அதுபோலவே எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி. இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு அதிமுக ஆட்சியில் வெறும் 11 சதவீதமாக இருந்தது. ஆனால் இது தற்போது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து 43 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதனால் எண்ணற்றோர் தொழில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். ஏராளமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளன.
தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியும் சென்ற அதிமுக ஆட்சி காலத்தை விட 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இது உற்பத்தி துறையில் மிகப்பெரிய சாதனை. இதற்கு காரணம் இந்த அரசு தொழில்துறையின் மீது கொண்டுள்ள கவனம். அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மின்னல் வேகத்தில் நிறைவேற்றிக் கொடுத்து இந்த வளர்ச்சியை பெற்று இருக்கிறது.
தற்போது, @mkstalin அவர்கள், தமிழ்நாடு அரசு என்னும் இயந்திரத்தை, நன்றாக பழுது பார்த்து, ஆயில் சர்வீஸ் செய்து, என்னவெல்லாம் புது தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டுமோ அத்தனையும் புகுத்தி அட்டகாசமான ஒன்றாக மாற்றி இருக்கிறார்.
மீண்டும் ஸ்டாலின் அவர்களே வென்று ஆட்சிக்கு வந்தால் தான் இந்த இயந்திரம் இன்னும் மிகச் சிறப்பாக இயங்கி மக்களுக்கு தேவையான நல்லதை எல்லாம் செய்யும்.
மீண்டும் அதிமுக வந்தால் இந்த இயந்திரத்தை துருப்பிடிக்க வைத்து விடும்.
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்.
I repeat 🖤❤
நீங்க அவரை மிக மிக எளிதில் அனுகிட முடியும் 🖤❤
@Udhaystalin
இது தான் திமுக 🖤❤
நாங்க ஆட்சியில் இருக்கபோதுளா
முதல் தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும் 🖤❤
THE TAMIL NADU MODEL! 🖤❤️
Under Dravida Nayagar Thiru.@mkstalin’s leadership, #TamilNadu is the Fastest Growing Major State in #India
🚀 11.19% Real #GSDP Growth
Highest in 14 years. Far above national average
💰 ₹31.19 LAKH CRORE ECONOMY
India’s 2nd Largest State #Economy
Marching towards a $1 Trillion Economy by 2030
🏭 MANUFACTURING ENGINE OF INDIA
14.74% Growth in Manufacturing
3 times of National Average
12.65% of India’s Manufacturing #GDP
🌍 EXPORT POWERHOUSE
Merchandise Exports Doubled
$26.15B to $52.07B in 4 Years
Ranked 1st in #Electronics, #Textiles & #Leather
📈 FDI DESTINATION OF CHOICE
$3.68 Billion #FDI in 2024–25
🎓 INDIA’S EDUCATION LEADER
47% Higher Education #GER (India Average: 28.4%)
17 Institutions in #NIRF Top 100
❤️ HUMAN DEVELOPMENT MODEL
Infant Mortality Rate: 12
Life Expectancy: 73.4 Years
Multidimensional Poverty: 1.43%
📉 INFLATION UNDER CONTROL
Retail Inflation Down to 2.3%
Near-Zero Food Inflation
👷 EMPLOYMENT & INDUSTRIAL ABSORPTION
#Unemployment Reduced to 3.5%
#Labour Force Participation Rising
Manufacturing Leads #Job Creation
⚖️ SOCIAL JUSTICE = ECONOMIC STRENGTH
Social Sector Spending Increased to
₹1.57 Lakh Crore
#Education, #Welfare and #Women Empowerment
🔗: https://t.co/gkCUq6LbmZ
#DMK4TN
C-Voter Plus Survey: DMK+ leading with a 45% vote share.
#NDA, brace yourselves — another massive defeat awaits in Stalin நாடு.
#DMK4TN@mkstalin#வெல்வோம்_ஒன்றாக
📊 வேலைவாய்ப்பில் முதலிடம் – தமிழ்நாடு (2021–2025)
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021–2025) இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலம் – தமிழ்நாடு என்று அறிக்கை வெளியாகி இருக்கிறது,
(ஆதாரம்: Reserve Bank of India – 2023–24 வளர்ச்சி அறிக்கை & Annual Survey of Industries 2023–24)
🔹 MSMEகள் மூலம் நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
🔹 தொழில்துறை வேலைவாய்ப்பில் 15.43% பங்கு – முதலிடம் (ASI 2023–24) நடந்து இருக்கிறது.
🔹 ஒன்றிய அரசு & தமிழக அரசு வெளியீடுகளின்படி, தேசிய வேலைவாய்ப்பு பங்களிப்பு 15%+ இருந்துவருகிறது.
👉 குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை முந்தியது தமிழ்நாடு என்பதே அறிக்கை குறிப்பிடும் தகவல்.
🔹 RBI 2023–24: 39,699 MSMEகள் மூலம் 4.81 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை.
💪 தொழில் வளர்ச்சி | 🏭 MSME வலிமை | 👷♀️ வேலைவாய்ப்பு உருவாக்கம் 👉 தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. #Dravidamodel
#TamilNadu #Employment #MSME #IndustrialGrowth #ASI #RBI #JobCreation
// ‘#பராசக்தி’ இறுதிக் காட்சியில் மாநில சுயாட்சியை பேசும் அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட வேண்டும்—சென்சார் போர்டின் அழுத்தம் //
“அதை வெட்டினால் படம் மட்டுமல்ல, அதன் ஆன்மாவே வெட்டப்படும்”
என்று இயக்குனர் உறுதியாக மறுக்கிறார்.
அந்த அச்சம் நீடிக்கும் வரை,
திரையிலும்—அரசியலிலும்—
ஆள்கிறவர் #அண்ணாதுரை தான். 💥💥
#அண்ணா
#தீபரவட்டும்
#Parasakthi
#ANNA
உங்களை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன் நீங்க படிங்க போதும் 🔥🔥🔥
* உங்கள் அம்மாவிற்கு மகளிர் உரிமைத் தொகை 1000 ரூ
* உங்களுக்கு தமிழ் புதல்வன் 1000 ரூ
* புதுமைப் பெண் 1000 ரூ
* உங்கள் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு 3000 ரூ 😍
#UlagamUngalKayil#laptop
உங்களை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன் நீங்க படிங்க போதும் 🔥🔥🔥
* உங்கள் அம்மாவிற்கு மகளிர் உரிமைத் தொகை 1000 ரூ
* உங்களுக்கு தமிழ் புதல்வன் 1000 ரூ
* புதுமைப் பெண் 1000 ரூ
* உங்கள் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு 3000 ரூ 😍
#UlagamUngalKayil
1986 ஆம் ஆண்டு, எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில், நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய அரசின் வற்புறுத்தலால் நடைபெற்றது.
அப்போது அதிமுக காங்கிரஸ் கூட்டணி. காங்கிரஸ் கட்சிக்கு 20% வாக்குகள் இருந்தன. அதனால் தான் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்காக 66 தொகுதிகளும், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்காக 26 தொகுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
உள்ளாட்சித் தேர்தலிலும் 2:1 என்ற கணக்கில் அதிமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்த சமயத்தில் அதிமுகவிற்கு 35 சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு 20 திமுகவிற்கு 30 என்கிற அளவில் தான் இருந்தது. எனவே அந்தக் கூட்டணியை வெல்வது சுலபமான காரியம் இல்லை.
அந்த தேர்தலில் எங்கள் தெருவில் இருந்த திமுககாரர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நின்றார். எதிரே அதிமுக வேட்பாளர். பேருந்துகளை அரசுடமையாக்கியதால் டிவிஎஸ் நிறுவனம் கலைஞர் மீது கடும் கோபம் கொண்டிருந்தது. எனவே அவர்களுடைய பார்சல் சர்வீஸ் மூலம் சிவகாசியில் அடிக்கப்படும் போஸ்டர்களை தமிழ்நாடு முழுவதும் இலவசமாக கொண்டு சென்று சேர்த்து விடுவார்கள். சிவகாசியில் ஏராள அச்சகங்கள் காங்கிரஸ்காரர்கள் உடையது. அவர்களும் சகாய விலையில் அச்சடித்து தருவார்கள்.
திமுகவோ கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை ஆட்சியில் இல்லாத நேரம் அது. சாயங்காலம் டோர் கேன்வாசிங்கிற்கு போகும்போது உடன் வருபவர்களுக்கு டீ கூட கொடுக்க முடியாத காலம் அது. அதிமுகவிலோ மதிய சாப்பாட்டிற்கும் இரவு டிபனுக்கும் ஊரில் இருந்த கோமளா மெஸ்ஸில் சாப்பாடு டோக்கன் கொடுத்து விடுவார்கள்.
அதிமுகவினர் விதவிதமாக மல்டி கலர் போஸ்டர்களை ஊர் முழுவதும் ஒட்டினார்கள். ஏராள துண்டு பிரசுரங்களையும் விநியோகித்து வந்தார்கள்.
திமுகவிலோ, ஒரு சிங்கிள் கலர் பிட் நோட்டீஸ். அதில் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று வாக்குறுதிகள். உதயசூரியன் சின்னம், வேட்பாளர் பெயர் மற்றும் தேர்தல் நாள். அதை மட்டும் ஒவ்வொரு வீடாக சென்று கொடுத்தார்கள். தெருவில் இருந்த அண்ணன்களுடன் சேர்ந்து பூத் ஸ்லிப் எழுதிக் கொடுத்தேன்.
தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடிக்கு முன்னே அமைக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். மதியம் வரை நமக்கு நல்லா விழுந்துகிட்டு இருக்குப்பா என்ற பேச்சு இருந்தது.
மதியத்திற்கு மேல் நான்கு அம்பாசிடர் கார்கள் வந்தன. அவை ஒவ்வொரு வீடாக சென்று ஆட்களை ஏற்றி இறக்க ஆரம்பித்தன. வந்தவர்கள் நேராக அதிமுக டேபிளுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் டிக் அடிக்க சொல்லிவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார்கள். அப்போதே தேர்தல் முடிவு எங்களுக்கு தெரிந்து விட்டது.
வாக்கு எண்ணிக்கை நாளன்று அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. அவ்வளவு பெரிய numerically largest கூட்டணியை எதிர்த்து திமுக பலமான வெற்றியை பெற்றது. ஆனால் எங்கள் ஊரில் தோற்றது.
அன்று மாலை ஓட்டு எண்ணிக்கை எல்லாம் முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். ஒரே சோகமயமாக இருக்கும் என்று பார்த்தேன்.
ஆனால் எல்லோரும் வெளியே சேர்களை போட்டு, சிலர் வாசற்படியில் உட்கார்ந்து, சிலர் நின்று கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். எந்த நகராட்சியில் நல்ல வெற்றி, மதுரை மாநகராட்சி என்னவாயிற்று என அவர்கள் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
தோல்வியின் நிழல் அந்த இடத்தின் மீது கொஞ்சம் கூட படியவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது எங்களை இணைத்து பூத் ஸ்லிப் எழுதிக் கொடுத்த அண்ணனிடம் தயங்கியபடி கேட்டேன் என்னண்ணே வருத்தமாக இல்லையா என்று.
அவர் சொன்னார், நாம ஜெயிச்சா இதெல்லாம் செய்வோம் என்கிறோம், தோற்றாலும் வருகிறவர்களை செய்ய வைக்க போராடுவோம். அவர்கள் செய்யாவிட்டால் அடுத்த முறை மீண்டும் முயற்சி செய்வோம். வாய்ப்பு கிடைச்சா செய்வோம் இல்லாட்டி நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டே இருப்போம்.
இதில் என்ன வருத்தம்?
திமுககாரன்னா அப்படித்தான் இருப்போம். இருக்கனும் என்றார்.
பட்டன் ஃபோன் காலத்தில் பணியாற்றிய ஒரு அலுவலகத்தில் உடன் சில ஆண்டுகள் பணியாற்றிய நண்பர். டச் ஸ்கிரீன் வந்தவுடன், மீண்டும் நட்பு துளிர்விட்டது.
பெரிய உரையாடல்கள் எதுவும் இருக்காது. வாட்ஸ் அப்பில் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வோம்.
சில நாட்களுக்கு முன்பு தன் மகளுக்கு குழந்தை பிறந்திருப்பதாக பகிர்ந்து கொண்டார். சம்பிரதாயமாக வாழ்த்தி எந்த மருத்துவமனை என்று கேட்டபோது, நான் தற்போது பணியாற்றி வரும் அலுவலகத்திற்கு அருகே இருந்தது அது.
வேலை முடிந்து, ஒரு பேபி கிஃப்ட் செட் வாங்கிக்கொண்டு, மருத்துவமனையை அடைந்து அந்த ப்ளோர் நர்சிங் ஸ்டேஷனில் ரூம் நம்பர் சொல்லி கேட்டபோது அங்கே இருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
ரூம் கதவைத் தட்டி, அந்த கிப்ட் செட்டை நண்பரிடம் கொடுத்து விட்டு, இரண்டு வார்த்தைகள் சம்பிரதாயமாக பேசிவிட்டு கிளம்ப யத்தனித்த போது,
தாழ்ந்த குரலில் எனக்காக ஒரு மணி நேரம் இங்கே இருக்க முடியுமா என்று கேட்டார். நானும் மனைவியும் வீடு வரை சென்று விட்டு வருகிறோம். அதுவரை இங்கே இருக்க முடியுமா என்றார்.
எனக்கு சங்கடமாக இருந்தது. நண்பரின் மகள் எனக்கு பழக்கம் இல்லாதவர். பேசியதே கிடையாது.
உங்கள் பெண்ணிற்கு ஓகேவா என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்றேன். அவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் இல்லையென்றால் கூடுதலாக அரை மணி நேரத்தில் வந்து விடுவோம். பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
எனக்கு ஒரு பக்கம் சங்கடம் என்றால் இன்னொரு பக்கம் ஆச்சரியம். குழந்தை பிறந்து சில நாட்கள் ஆகிறது. யாராவது உறவினர்கள் கூட இருப்பார்கள்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தையின் தந்தை உடன் இருப்பாரே அவரையும் காணவில்லை.
சுற்றத்தினர் யாரும் இல்லாவிட்டாலும் கூட நண்பர் மனைவியின் தோழிகள் கூட யாரும் உதவிக்கு இல்லையா என்று ஒரு கேள்வி வந்தது.
இதை எப்படி கேட்பது என்று யோசித்து விட்டு, மாப்பிள்ளை என்னம்மா பண்றார் என்று ஆரம்பித்தேன். அவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு,
அங்கிள் நீங்கள் ரொம்ப தயங்கவெல்லாம் வேண்டாம். அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். நீங்கள் ரிலாக்ஸாக மொபைல் பார்த்துக் கொண்டிருங்கள். என்று சொல்லிவிட்டு, குழந்தையின் பக்கம் திரும்பி படுத்தார்.
அரை மணி நேரம் சென்றது. எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய மவுனம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஏதாவது காபி, டீ வாங்கி வரட்டுமா என்று கேட்டேன்.
வேண்டாம் அங்கிள். இரவு சாப்பாடு நேரடியாக சாப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஒரு மணி நேரம் கடந்தது. அவர்கள் இருவரும் வரவில்லை.
கையில் மொபைல் இருக்கும்போது கடிகாரம் என்னை எதுவுமே செய்வதில்லை.
சிறிது நேரம் கழித்து அவராகவே ஆரம்பித்தார்.
அங்கிள், உங்களுக்கு அம்மாவுடைய பிராப்ளம் தெரியும் இல்லையா என்று கேட்டார்.
இல்லையம்மா உங்க அப்பா எதுவும் சொன்னதில்லை என்றேன்.
அம்மாவுக்கு ஓசிடி ப்ராப்ளம் இருக்கு. ரொம்ப எக்ஸ்ட்ரீம் லெவல்.
பயங்கரமா சுத்தம் பார்த்துட்டே இருப்பாங்க. குளிக்கிற சோப்பு, துவைக்கிற சோப்பு, ஷாம்பு எல்லாத்தையும் மிக்ஸியில் போட்டு அடிச்சு, ஒரு சொல்யூஷனாக்கி, ஒரு பெரிய வாளி தண்ணீரில் கலந்து வைத்து விடுவார்கள். நாங்கள் வெளியில் சென்று வரும்போது அதில் குளித்துவிட்டு, வேறு உடை மாற்றிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளே செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் டென்ஷனாகி விடுவார்கள். நானும் அப்பாவும் மட்டுமல்ல வீட்டு வேலைகளுக்கு உதவிக்கு வரும் அக்காவும் அப்படித்தான் செய்ய வேண்டும். இதனால் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவே அந்தப் பகுதி பெண்கள் தயங்குவார்கள். தினமும் வீட்டை துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் எல்லாமே அசுத்தமாகிவிட்டன தூக்கி எறியுங்கள் என்பார். புதிதாக எல்லாமே வாங்க வேண்டும்.
தன்னுடைய உடைகள் அனைத்தும் அழுக்காகி விட்டன.எல்லாவற்றையும் தூக்கி போட வேண்டும் என்று அடம் பிடிப்பார். புது செட் எடுக்க வேண்டி இருக்கும்.
வீடே மிக அசுத்தமாக இருக்கிறது இங்கே இருந்தால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர் விட்டு அழுவார்.
உடனே நாங்கள் வேறு வீடு தேட வேண்டிய நிலை உருவாகிவிடும். அந்த காலகட்டத்தை சமாளிப்பதற்காக சில சமயம் ஹோட்டல்களில் ரூம் எடுத்துக் கூட தங்கி இருக்கிறோம்.
பின்னர் அப்பா நிறைய முயற்சி எடுத்து, நிறைய கவுன்சிலிங் எல்லாம் கூட்டி போனார். அங்கே மருத்துவமனைகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடப்பிடிப்பார் அம்மா. கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். பின்னர் திடீரென அதிகரித்து விடும்.
உறவினர்கள் யாராவது வந்துவிட்டால், அவர்களும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பார். அதனால் யாருமே வரமாட்டார்கள்.
ஒருமுறை எங்கள் தாய் மாமா குடும்பத்துடன் வந்தார். அவர் குழந்தை செருப்புடன் படியேறிவிட்டது என்று பயங்கரமாக ஆக்ரோசப்பட்டார். அத்தோடு, அத்தை இனிமேல் இந்த வீடு இருக்கும் திசையிலேயே நாங்கள் முழிக்க மாட்டோம் என்று குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
இது போன்ற சம்பவங்களால், அக்கம்பக்கத்து விட்டார்கள், உறவினர்கள் என்று யாருமே எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. என் அம்மாவும் யார் வீட்டுக்கும் போக மாட்டார் எந்த விசேஷங்களுக்கும் போக மாட்டார். இவ்வளவு ஏன், என் கணவரின் வருகையே அவருக்கு பிடிக்காது. வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்வார். அவர் கிளம்பிய உடன் எல்லாவற்றையும் அலசி விட சொல்வார். எனக்கெல்லாம் அவ்வளவு வருத்தமாக இருக்கும்.
ஆனால் என் கணவர் பெருந்தன்மையானவர். அதை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் அத்தை, மாமா சங்கடப்பட்டுக்கொண்டு வர மாட்டார்கள் என்றார்.
அப்போதுதான், நர்சிங் ஸ்டேஷனில் இந்த அறை எண்ணை கேட்டதற்கு ஏன் ஆச்சரியப்பட்டார்கள் என்று தெரிந்தது.
தொடர்ந்து அவர், என் அம்மா தன்னுடைய கழிவறையை மட்டும்தான் உபயோகிப்பார். வேறு எங்குமே உபயோகிக்க மாட்டார். அதனால் சற்று தூர பிரயாணங்கள் என்றால் டயாபர் அணிந்து கொள்வார.
நாங்களும் கூட அவர் கழிவறைக்கு செல்ல மாட்டோம். இந்த மருத்துவமனை கழிவறை அவருக்கு அலர்ஜி. அதனால் காலையிலிருந்து தண்ணீர் கூட அதிகம் குடிக்காமல் இருந்தார்.
இப்போது அப்பா அவரை அழைத்துச் சென்று இருப்பது கூட வீட்டில் இருக்கும் கழிவறையை பயன்படுத்தத்தான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
இரண்டு மணி நேரம் கழித்து நண்பர் வந்தார். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். கீழே வரை வருகிறேன் என்று உடன் வந்தார் நண்பர்.
அவரிடம் உண்மையிலேயே நீங்கள் பெரிய மனிதர். பெரிய தியாகி என்றேன்.
அதற்கு அவர் உனக்கு சுகர் இருக்கிறது என்று சொன்னாயே எத்தனை வருடமாக இருக்கிறது என்றார்?
12 வருடமாக இருக்கிறது என்றேன். அதற்கு முன்னர், அடிக்கடி கேசரி கொண்டு வருவாயே, வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் என்று செய்தார்கள் என்று. மிக சுவையாக இருக்கும்.
அதை இப்போதும் உன் மனைவி அடிக்கடி செய்கிறாரா என்று கேட்டார்.
எனக்கு சுகர் வந்த பின்னால் அதை செய்வதில்லை பிள்ளைகளின் பிறந்தநாள் அன்று மட்டும் கொஞ்சம் செய்வார் என்றார்.
முன்னர் வேலை பார்க்கும் இடத்தின் அருகில் இருந்த ஒரு சர்பத் ஃபேக்டரியில் நன்னாரி சர்பத் வாரம் வாரம் வாங்கிக் கொண்டு செல்வாயே உன் மனைவிக்கு பிடிக்கும் என்று இப்போதும் அப்படியா என்று கேட்டார்.
இல்லை எனக்கு சுகர் வந்த பின்னால் அவர் அதை குடிப்பதில்லை. நான் அதைப் பார்த்து குடித்து விடுவேன் என்று என்றேன்.
அதே போல சாப்பாடு உனக்கு ஏற்ற மாதிரி தானே எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்? அவருடைய விருப்ப உணவுகள் எதையாவது சமைக்கிறாரா? என்று கேட்டார்.
இல்லை எல்லாமே எனக்கு ஏற்ற மாதிரி தான். எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு விட்டார் என்றேன்.
உனக்கு சுகர் வந்த பின்னால் அவருடைய நடவடிக்கைகள் எப்படி மாறின என்றார்.
முன்னர் அவ்வப்போது வீட்டு வேலைகளில் உதவி செய்வேன். கடைகளுக்கு எல்லாம் சென்று வருவேன். இப்போது பெருமளவு வேலைகளை அவரே பார்த்துக் கொள்கிறார்.
வேலை செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக ரிலாக்ஸாக நடந்து போய் வாருங்கள், உடலுக்கு நல்லது என்று சொல்கிறார். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாளுவது போல தான் என்னை என் மனைவி பாதுகாக்கிறார் என்றேன்.
அதுபோலதான். உனக்கு உடல்நல குறைபாடு. என் மனைவிக்கு லேசான மனநல குறைபாடு. உன்னை எப்படி கவனம் எடுத்து பாதுகாக்கிறார்களோ அதுபோல தான் நானும் என் மனைவியை பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
பைக் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம். பைக்கை கிளப்பினேன்.
அப்போது சொன்னார்.
நான் செய்வது தியாகம் அல்ல. அவர் என் மனைவி என்று.
கடந்த ஏழு எட்டு வருடங்களாகவே ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்பட்டு வந்தது. பொறியியல் படிப்பது வேஸ்ட் என்று. சில பத்திரிக்கை நிறுவனங்கள் இதை பல்வேறு வகைகளில் பல கட்டுரைகளாக வெளியிட்டு வந்தார்கள். போலவே கல்வி கண்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிலர் திட்டமிட்டு இந்த கருத்தை விதைத்து வந்தார்கள்.
அவ்வளவு ஏன் திரைப்படங்களிலும் கூட நாம் என்ன செய்கிறோம் எதிர்கால தலைமுறையை வேறு பாதைக்கு தள்ளி விடுகிறோம் என்று தோன்றாமல் பொறியியல் படிப்பது வேஸ்ட் என்ற கருத்து திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வந்தது. அதற்கு அடுத்து வந்த youtube மறுமலர்ச்சியிலும் இந்த டாஃபிக் நன்கு அடிக்க கூடிய புல்டாஸ் ஆக இருந்தது. எனவே ஆளாளுக்கு சாத்தினார்கள்.
அந்த நூதன பிரச்சாரத்தால் மனம் மாறிய நிறைய முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் மத்திய தர கீழ் மத்திய தர வகுப்பு மாணவர்கள் நிறைய பேர். அப்போதும் பலமுறை எழுதியது தான். பலரிடம் பேசும் போது சொன்னதுதான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்பவர்கள் அரசு வேலைக்கு சென்று விட வேண்டும், அல்லது சிஏ போன்ற உயர் படிப்புகளில் வெல்ல வேண்டும்.
அது இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு கிடைக்கும் சம்பளமானது எந்த காலத்திலும் பொறியியல் படித்தவர்களின் சம்பளத்திற்கு ஈடாக வராது. காலம் முழுவதும் தாங்கள் இருக்கும் பொருளாதார வகுப்பிலேயே கிடந்து உழள வேண்டும் என்று.
அப்போது அதை நிறைய பேர் மறுத்தார்கள். ஆனால் இப்போது அந்த முதல் கட்ட பிரச்சாரத்தால் பொறியியல் படிக்காமல் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களில் நிறைய பேர் மிக குறைவான சம்பளத்துடன் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தவர்கள் சிலருக்கு சுமாரான வேலை என்றாலும் பலருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது . கலை அறிவியல் படிப்பு படித்தவர்களை விட முன்னணியில் இருக்கிறார்கள்.
நான்கைந்து செட்கள் அப்படி ஆன நிலையில், தற்போது அதை நேரடியாக கண்டவர்கள் தங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு பொறியல் சேர்க்கைக்கு வந்துள்ள விண்ணப்பங்களும் அதிகம்.
மத்திய கீழ் மத்திய பொருளாதாரம் நிலையில் இருப்பவர்கள், முக்கியமாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் என்றால் எப்பாடுபட்டாவது பொறியியல் படிப்பில் சேர்ந்து விடுங்கள்.
நான் முதல்வன் திட்டம் மூலம், அவர்களுக்கு பல வழிகளில் வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படுகிறது. முக்கியமாக எக்ஸ்போசர் எதாவது ஒரு ரூபத்தில் கொடுக்கப்படுகிறது. இது அவர்கள் தாங்கள் இருக்கும் பொருளாதார தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு செல்ல உதவியாக இருக்கும்.
தங்களுடைய சுயலாபத்துக்காக, தாங்கள் புகழ் பெற பொறியியல் கல்வியை பழித்தவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் அதைக் கண்டு ஏமாந்தவர்கள் தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டி புதிய முகவரியை தந்து நம்பர் 1 மாநிலமாக உயர்த்திய #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் தொண்டர்கள் நாங்கள்,
இந்த ஊர் பெயர் தெரியாத நாட்டை சீரழித்த அடிமைகளின் மிரட்டல் உருட்டல் எல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது...
நானும் @teakkadai1 தான்.
உடன்பிறப்புகளின் ஒரே முகவரி:
அண்ணா அறிவாலயம்,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை.
வா... #திமுக_காரன்