மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் திமுக ஆட்சியின் போது இரவு நேரம் சென்னையில் அவர் பகுதியில் மின்சாரம் தடைபடுகிறது.. அவர் அதுகுறித்து உடனே ட்விட்டரில் ( X பக்கம் ) எழுதி மின் துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்… பதிவைப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த இரவு நேரத்திலும் என் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார்.. அண்ணா அந்த பத்திரிக்கையாளரின் பதிவைப் பார்த்தேன். உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கடுமையாக விளக்கம் கேட்டு கடும் எச்சரிக்கையும் கொடுத்தேன்.. டிரிப் ஆகியதால் சில நிமிடமே மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனே வந்து விட்டது என்று விளக்கம் தந்தார்கள்… இந்த இரவு நேரத்திலும் ஒரு சமூக வலைதள பதிவிற்காக நாங்கள் பொறுப்புடம் விசாரிக்கிறோம்.. ஆனால் மின்சாரம் வந்ததோ நாங்கள் பணியாற்றியதோ மக்களுக்குத் தெரியாது. அந்த பதிவு மட்டும்தான் நிற்கும் என்றார்… அவரின் எண் கேட்டார். அந்த மூத்த பத்திரிக்கையாளரையும் அழைத்து மின்சாரம் வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்தினார்… அந்த மூத்த பத்திரிக்கையாளரும் அமைச்சர் பேசியதையும், மின்சாரம் வந்ததையும் ஒரு பதிவிட்டார்…. ( இது குறித்து அப்போதே நான் எழுதியும் உள்ளேன் ) மின் வாரிய கடனை அடைத்து தடையில்லா மின்சாரம் தந்த திமுக வை நிராகரித்த தமிழ் நாட்டு மக்கள் , குறிப்பாக சென்னை மக்கள் இன்று பல மனி நேர மின் வெட்டால் இருளில் வாழ்கிறார்கள்.. கண்டித்து போராடிய பிறகும் கூட வந்து பொறுப்பாக பதில் சொல்லக் கூட ஆளின்றி நிற்கிறார்கள்.. எம் எல் ஏ யார் என்று கூடத் தெரியாமல் திரை மயக்கத்தில் வாக்களித்துவிட்டு இன்று எம் எல் ஏ வைத் தேடுகிறார்கள்… விஜய் செல்லும் விமானத்தைப் பார்ப்பதே பெரும் பாக்கியம் என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்திருப்பது பெரும் கொடுமை…. இது தமிழ் நாட்டின் இருண்ட காலம்
நேத்து ஊருக்கு போயிட்டு வந்தேன். Train ah விட்டு வெளிய வந்ததும் வாங்க சார் போலாம், Auto வேணுமா, auto வேணுமா nu அவ்வளோ குரல். நான் முன்னாடியே Ra*ido ல railway station ல irundhu வீட்டுக்கு போக எவ்வளோ ஆகுமுன்னு பார்த்து வச்சிக்கிட்டேன்.
அதை மனசுல வச்சு சரி போலாம் அண்ணா, எவ்வளோ nu சொல்லுங்க nu சொன்னேன் Oru 3 பேரு கிட்ட கேட்டேன், 3 பேரும் சுமார் 700-800 ரூபாய் கேட்டாங்க. ரயில் நிலையத்தில் இருந்து எங்க வீடு 14-15kms தான். எனக்கு ராபிடோ ல காட்டிய தொகை 200 ரூபாய். அப்படி இருக்க, எதுக்கு இவங்க இவ்வளோ கேக்குறாங்க nu புரியல. இதுல, நான் 250rs தர்றேன் அண்ணா nu சொன்னதுக்கு, அடடா எவ்வளோ நல்ல மனசு nu கிண்டல் நக்கல் வேற, நானும் இந்த மாரி நல்ல மனசு உங்களுக்கு எப்போ அண்ணா வருமுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். இவங்க மனசுல ராக்கெட் ஓட்டுறதா நினைச்சுக்கிறாங்களா nu தெரியல.
சும்மா கூட வெட்டியா இருக்காங்களே தவிர, நியாயமான விலைக்கு வரவே மாற்றாங்க. இதுல Ra*ido, U*er, O*a pondra நிறுவனம் இவங்க சோத்துல மண் அல்லி போட்டுட்டாங்க nu ஒப்பாரி வைப்பாங்க.. worst uh behaviour!
#Auto
பாமக, திமுக பக்கம் போய்விடாமல் தங்கள் பக்கம் வரவேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகம் பெரும் முயற்சியில் இருக்கிறது
நேற்று கோவையில் ஆதவ் அர்ஜுனா பாமகவை உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடி பேசியதற்கு பிறகு அவர்கள் எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது
விடுதலை சிறுத்தைகள் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள்?
பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் அவர்கள் இதுவரை உறுதியாக இருந்து உள்ளார். இனி நிலைமை எப்படியோ?
அல்லது ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும் பாடலுக்கு விடுதலை சிறுத்தைகளும் பாமகவினரும் இணைந்து பின்னணி இசை கொடுக்கப் போகிறார்களா?