போரில் தோற்று தன் முன் மண்டியிடும் மன்னர்களை மன்னிக்கும் ஒரு பேரரசனைப்போல வாழ்வில் தோற்று தன் முன் மண்டியிடும் போர்க்கைதிகளை மன்னித்து கடக்கிறது காலம்.
எந்த காரணப்பழிகளும் சொல்லாது,
நீங்கள் அத்தனை நல்லவரில்லை என்பதை முழுமனதாய் உணர்ந்து ஏற்கும் பொழுதில் இருக்கிறது ஒரு விடுபடலும்..
ஒரு பறவை சிறகு உதறும் நொடியின் இலகு போல ஒரு மீட்டெடுத்தலும்.
மழலை வயதிற்குப்பின், நீங்கள் யார் ஒருவரையுமே முழுமையாக நம்புவதில்லை என்பதையும். சக மனிதர்கள் மீதான உங்களின் நம்பிக்கையின்மையை தான் கவசமாகவே அணிந்திருக்கிறீர்கள் என்பதையும் என்றேனும் கவனித்திருக்கிறீர்களா?