தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அ��ர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழகத்தில் ஆங்காங்கே முளைக���கும் கஞ்சா செடிகள்..
கஞ்சா புழக்கம் பற்றி வாய்கூசாமல் பச்சைப் பொய் பேசிய மாரத்தான் அமைச்சர் @Subramanian_ma அவர்களே இப்போது என்ன பதில் கூறப் போகிறீர்கள்?
போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்ற விளம்பரப் படத்தில் நடித்த பொம்மை முதல்வர் @mkstalin அவர்களுக்கு தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக போதையின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவாரா?இல்லையா!
#DMKFailsTN
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 3
"அம்மா இல்லம் திட்டம்"
"அம்மா இல்லம் திட்டம்" மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் தி��்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 4
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் வளர்ச��சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
#r_jayakanthaiadmk
#ADMK_SLM
#admkitwing_slmrural
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-���ாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#EPSfor2026
பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.
'ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.
ப���ைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இச்செயல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.
@AIADMKOfficial
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் என்ற பெயரில் திரியும் திமுக கொத்தடிமையான செந்தில்வேல் என்பவர், தனது பேச்சுக்���ு எதிர்க்கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தொண்டர்களை ஆபாசமாக ப��சி வெளியேறியதோடு, அவர்களை தாக்குவதற்கு திமுக குண்டர்களை வெளியில் இருந்து அழைத்து வந்து, தாக்குதல் நடத்தி கலவரச் சூழலை ஏற்படுத்தி இருப்பது வெட்கக்கேடானது.
அதுவும் அமைச்சர் சேகர் பாபுவின் படை என்று பெருமையாக கூறி வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வருகிறார் இந்த "பத்திரிகையாளர்". திமுக நடத்துவது கட்சியா? அல்லது, கூலிப்படையா?
திமுக எடுக்கும் இதே ஆயுதத்தை எதிர்க்கட்சிகளும�� எடுக்கலாமா? அதுவும், தன் சொந்த கட்சி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் பேசும் ஒரு நிகழ்ச்சியில், அவரே அமைதியாக இருக்கும் போது, இந்த பத்திரிகையாளர் போர்வையில் உள்ள கொத்தடிமைக்காக, ஒரு கலவரக் கூட்டத்தை திமுக அனுப்பியிருப்பது, அரசியல் களத்தில் திமுக வளர்க்கும் நஞ்சை வெட்டவெளிச்சமாக்குகிறது.
ஜனநாயகக் குரல்களை அராஜகம் செய்து ஒடுக்கத் துடிக்கும் திமுக-வுக்கு கடும் கண்டனம்.
#DMKFailsTN
"உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்" என்ற ஸ்டாலினின் அறிவிப்பு உலக மகா உருட்டு என்பதை ஒருவழியாக உணர்ந்த த��ைமைச் செயலக சங்கம்.
முதலில் ஆதரவு தெரிவித்தது ஏன்? எனக் கேட்டு சங்கத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்.
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்" என்று ஒரு பழமொழி உண்டு.
ஸ்டாலினின் புளுகு அத்தனை நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை!
#Reject_DMK
#DMKFailsTN #ByeByeStalin
விடியா திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்���ு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!
இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், ��ீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.
இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.
மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிந��ர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும்.
அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் விடியா திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu @arivalayam
@AIADMKOfficial
நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்��ள்.
நகராட்சி நிர்வாகத் துறை ஊழல்!
காலி பணியிடம் நிரப்ப
25 லட்சம் முதல் 35 லட்சம் வரை
கமிஷன் பெற்று ரூ. 888 கோடி மெகா ஊழல்!
உபயம்: கே.என். நேரு
#CorruptionKingStalin
2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
இது அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் விரும்பிய கூட்டணி.
இயற்கையான கூட்டணி.
இந்த கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் @aiadmkofficial ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அஇஅதிமுகவில் ஒரு சாதாரண தொண்டனும் முதலமைச்சராகலாம்.
ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர் மட்டுமே உயர் ��தவியில் வர முடியும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கரும்புகளை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்.
4000 கரும்புகளை கொள்முதல் செய்தால�� 400 கரும்புகளை இலவசமாக கேட்கும் அதிகாரிகள்.
லஞ்சம் தர மறுக்கும் விவசாயிகளை அவதூறாக பேசும் அவலம்.
விவசாயிகள் என்றால் அவ்வளவு கேவலமா?
பொம்மை முதலமைச்சர் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
#DMKFailsTN
கொள்ளையடிப்பது எப்படி ,ஊழல் செய்வது எப்படி என்பதில் மட்டுமே குறியாக இருந்த அரசு விடியா திமுக அரசு..
அதுவும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக் கூடிய கட்சி திமுக.
@mkstalin மாடல் அரசின் துறை ரீதியான ஊழல்கள் குறித்து பட்டியலிட்ட,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#CorruptionKingStalin