“விளக்கின் மினுக்களுக்கு விட்டில் பூச்சிகள்தான் செல்லும்; இருளகற்றும் விடியலின் ஒளி சூரியனிடம்தான் உண்டு!”
தமிழ்நாட்டின் அரணாக - தமிழர்களின் வளர்ச்சிக்குத் தூணாக விளங்குவது என்றைக்கும் விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என ஏராளமானோர் நம்பிக்கையுடன் இணைந்து வருகின்றனர்.
இன்று நமது தலைவர் @mkstalin அவர்களது முன்னிலையில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு. அந்தோணி மைக்கேல் சாரத் அவர்கள், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனது இயக்கத்தைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டார்.
#DMK
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நம் @dmk_youthwing-ன் தலைமையகமான அன்பகத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்தார்.
மேலும், அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து, இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று- கழகத் தலைவர் தலைமையில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்க,
கழக இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
#KalaignarForever #Kalaignar103
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு நம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆணிவேரையே அறுக்க தூக்கியிருக்கும் ஆயுதம்தான் #Delimitation.
'தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடுவோம். சில வட இந்திய மாநிலங்களின் துணைகொண்டு, தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிவிடலாம்' என்று நினைக்கிறது பா.ஜ.க. இந்த சூழ்ச்சியை முறியடிக்க கழகத்தலைவர் அவர்கள் ஆணையின் பெயரில் மதுரையில் மசோதா நகலை எரித்து நம் எதிர்ப்பைக் காட்டினோம்.
சுயமரியாதைக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பா.ஜ.க.வின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது!
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பற்ற வைத்த உரிமைத் தீ இந்தியாவெங்கும் பரவட்டும்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #DMK4TN
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி அவர்கள் வேதாரண்யம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026#ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி அவர்களை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026