@Keerthana4VNR விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் முன்னோக்கி செ��்வது நல்லது. இல்லையேல் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். மக்களோடு இருங்கள் அது போதுமானது.
@VigneshRb11 இனி எல்லாம் அஞ்சக் கூடாது. காலம் காலமாக பத்திரிக்கையாளர் என்ற பெயரில் ஒரு சார்பாக பேசிவி��்டு கூடவே பக்கத்தில் அப்படி பேசிக் கொண்டிருப்பவரையும் மறந்துவிட்டு நீங்கள் பத்திரிக்கையாளரா என்று இன்னொருவரை பார்த்து கேட்பது நகைப்பாக இருக்கிறது..
@PriyankaSmile01 மக்களுக்கு ஊழல் நிரூபிக்கப்பட வேண்டியது முக்கியமல்ல . குற்றமும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் தான் முக்கியம். இந்திய அரசில் எந்த ஊழல் நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவரை. தவெக அரசு கவனமாக இருக்க வேண்டும். உடனிருந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
@Arappor நிச்சயம் செய்வார்கள். ஊழல்வாதிகளை புதிதாக கட்சியில் இணைப்பது உடன்பாடு இல்லாத செயல் தான் என்றாலும் இந்த தாவெக அரசு மக்கள் பணியில் சிறப்பாக செயல்படும். சமூக ஆர்வலர்களும் மக்களும் சாலை போடும் பொழுது இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் போதுமானது.
@Arappor@CTR_Nirmalkumar@CMOTamilnadu இதெல்லாம் தேவையா என்பதை தவெக கட்சியும் அதன் நிர்வாகிகளும் வியூக வகுப்பாளர்களும் யோசிக்க வேண்டும். 10,000 பேர் சேரந்து கோரிக்கை வைத்தால் அதை ஆலோசிப்போம் என விஜய் சொல்லியிருந்தார். தொண்டர்கள் இனி அதைத்தான் செய்யவேண்டும் விஜயபாஸ்கர் விசயத்தி���்.
@Suresh199104 செய்த ஊழலுக்கு என்ன செய்வது.. அறப்போர் இயக்கம் பொய் சொல்லாது. எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. இவர்கள் வேண்டாம் என்று மாற்றத்தை விரும்பினார்களோ அவர்களையே இணைத்தால் எப்படி. தொண்டர்களின் மனதை இவர்கள் அறியவில்லை. இது வருத்தம்தான்.
@VfcKanchipuram@TVKVijayHQ விஜய் கை காட்டும் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருக்கும்பொழுது அவர் பலம் அறியாமல் இந்த வியூக வகுப்பாளர்கள் வழக்கமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் உடன்பாடில்லை. இன்னும் நேர்��ையான திறமையான விசுவாசிகள் கட்சிக்குள்ளேயே கிடைக்க மாட்டார்களா என்ன.
@ScorpionSu58042 அமைச்சர் நிர்மல் குமார் தன் கட்சிக்காரர்களே இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார் வெளிப்படையாக பேட்டியிலேயே. இப்பொழுது எதிர்க்கட்சிகள் அதைக் கேட்கும். இதற்கெல்லாம் நமது ஆட்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இது வழக்கமான அரசியல் போலாகிவிட்டது.
@JayaramArappor இது நியாமமான கேள்விதான். இவர் இணைவது பலருக்கு பிடிக்கவில்லை. இதற்கெல்லாம் தவெக தொண்டர்களாகிய நாங்களும் பதில் சொல்லியாக வேண்டிய சூழல் இதனால் அமைந்துள்ளது. விஜய் பலம் அவருக்கு தெரியவில்லை, முகம் தெரியாத பலருக்கு வாக்களித்த மக்கள் இன்னொரு ��ுறை நேர்மையாளர்களுக்கு செய்யமாட்டார்களா..
@TGenrator42401 இவனெல்லாம் ஒரு பத்திரிக்கையாளன்.. தற்சமயங்களில் ஊடகங்களிலும் நடுநிலை இல்லை, பத்திரிக்கையாளர்களிடமும் அறம் இல்லை. ஆனால் இவர்கள் இனியொரு 20 ஆண்டுகளுக்கு புலம்பப் போகிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.