வீட்டில் இருக்கும் ஒரே ஒரு ஜோடி ஷூக்களை மாறி மாறிப் போட்டுக்கொண்டு தத்தமது பள்ளிகளுக்கு அன்றாடம் ஓடும் அண்ணன்/தங்கை, அத்தனை வறுமையிலும் சோப்புக்குமிழ்களுக்கு அந்தப்புறமாக மின்னிய சாராவையும், அலியும் அறிமுகப்படுத்தியவர். அவர்களை மட்டுமல்ல, நாஜி முகாம்களில் சிக்கிக்கொண்டாலும் மகனிடம் விளையாட்டு கதைகளைச் சொல்லி தன் இறப்பையும் விளையாட்டின் ஒரு பகுதியாக பாவித்துக் காட்டும் கிய்டோவையும், போர் என்பது விளையாட்டு அதில் வென்றதால் தனக்கு பீரங்கி கிடைத்தது என நம்பும் ஜோஷ்வா. தந்தையில்லாத சிறுவன் டோடோவுக்கு, தந்தைமையாக மாறிப்போகும் தியேட்டர் ஆபரேட்டர் அல்பிரதோவையும், அவர் வெட்டி வைத்து டோடோவுக்கு பரிசாக ஒட்டித்தந்த முத்தக் காட்சிகளையும், அந்தக்காட்சிகள் ஓடும் திரைக்கு முன்பாக கண்ணீர் துளிர்க்க அமர்ந்திருக்கும் சல்வதோரையும் (டோடோ) என பல மகத்தான மனித வாழ்வைப் பேசும் உலக சினிமாவை எங்கள் தலைமுறைக்கு கட்டுரைகளாக எழுதி அறிமுகப்படுத்தியவர் ஒளிப்பதிவாளர் செழியன்.
சில்ரன் ஆப் ஹெவன், லைப் இஸ் பியூட்டிபுல், சினிமா பாரடைசோ, தி சைக்கிளிஸ்ட், பிக்பாக்கெட், தி பியானிஸ்ட், ஹோட்டல் ரூவாண்டா, ரஷோமான், செண்ட்ரல் ஸ்டேசன், மோட்டார் சைக்கிள் டைரிஸ் என கிட்டத்தட்ட அவர் அறிமுகப்படுத்திய உலக சினிமாக்களும், அதன் கதாபாத்திரங்களும் என்னாலும் மறக்க முடியாது. அவை அனைத்தும் திரைகளிலும், நினைவுகளிலும் விரிகையில் செழியனும் நினைவில் விரிவார். சினிமா பாரடைசோவில் டோடோவுக்கு அல்பிரதோ தந்த முத்தக்காட்சிகள் அடங்கிய ஃபிலிமை போல நமக்கு அவர் 'உலக சினிமா' எனும் புத்தகத்தை தந்து சென்றிருக்கின்றார்
கனத்த அஞ்சலி செழியன் சார். 💔
உலகளாவிய வேலைவாய்ப்பு நிறுவனமான Indeed மற்றும் Censuswide இணைந்து அண்மையில் நடத்திய Surveyயின் படி ,
88% Indian employees தங்களின் office hours-க்கு பிறகும், sick leave மற்றும் public holidays நாட்களிலும் வேலை சார்ந்த அழைப்புகளால் தொந்தரவு செய்யப்படுகிறார்கள்.
மேலும், 79% பேர் அந்த அழைப்புகளை எடுக்காவிட்டால் தங்களின் promotion பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.
Indian employees-களின் mental health மற்றும் productivity-க்கு தகுந்த rest-ம், முறையான work-life balance-ம் இப்போது மிகவும் அவசியமாகிறது!
அனைவருக்கும் வணக்கம், #HST Wealth "கட்டணமில்லா" பைனான்சியல் வகுப்புகள் July - August 2026 (#IOTA-Batch) அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இது இந்த முயற்சியின் 9 வது குழு.
@HSTwealth
#NewsUpdate | கோவை: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரூ.3500 பணத்துடன் கைப்பையை மூதாட்டி தொலைத்துவிட, அப்பையை கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன், இன்ஸ்டாகிராம் வழியே வீடியோ வெளியிட்டிருந்தார்
வீடியோவைப் பார்த்த மூதாட்டியின் பேத்தி மணிகண்டனை தொடர்பு கொள்ளவே, இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து பணப்பையை மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்
#SunNews | #Coimbatore | #AutoDriver