எண்ணங்களை சம்பவமாக்குவது
அரசியல் | I BELONG TO THE DRAVIDAN STOCK🖤❤️| இளைஞர் அணி துணை அமைப்பாளர் | அரக்கோணம் மத்திய ஒன்றிய தி.மு.க🖤❤️ | இராணிப்பேட்டை மாவட்டம்
தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்குத் தேவையான திட்டங்களை நம்முடைய #திராவிட_மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் #ChepaukTriplicane தொகுதி இராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 மகளிருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை வழங்கினோம்.
2023-இல் 500, சென்றாண்டில் 1000 என மகளிர் மற்றும் திருநர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 1000 ஆட்டோக்களை வழங்க நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.
அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு நம் சகோதரிகள் 100 ஆட்டோக்களைப் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஆட்டோக்களைப் பாதுகாப்போடு இயக்கி வாழ்வில் வளம் காண வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@cvganesan1@nchitrarasu@MMageshkumaar@ARPMkamaraj@Madhanmohandmk
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய உத்தரவின்படி நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் நடைபெற்று வரும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை இன்று ஆய்வு செய்தோம்.
இராயப்பேட்டை, வட்டம் 120, லாய்ட்ஸ் காலனி பகுதியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் விண்ணப்பித்த அரசு சேவைகளை உடனுக்குடன் வழங்கிட அங்கிருந்த அலுவலர்களை அறிவுறுத்தினோம். @nchitrarasu
Vote Chori सिर्फ़ एक चुनावी घोटाला नहीं, ये संविधान और लोकतंत्र के साथ किया गया बड़ा धोखा है।
देश के गुनहगार सुन लें - वक़्त बदलेगा, सज़ा ज़रूर मिलेगी।
நெசவாளர்களைப் போற்றுகிற வகையில் நடைபெற்ற தேசிய கைத்தறி திருவிழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பங்கேற்றோம்.
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்தினோம். மேலும், நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
நெசவாளர்களுக்கும் – திராவிட இயக்கத்துக்குமான உறவை எடுத்துரைத்து, நம் #திராவிட_மாடல் அரசு என்றும் நெசவாளர்களுக்குத் துணை நிற்குமென உறுதியளித்தோம்!
@PKSekarbabu@R_Gandhi_MLA
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு முதலைமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் நம் கழகப் பணி, மக்கள் பணியை என்றென்றும் தொடர்வோம்!
#KalaignarForever
The Hon’ble Leader of Opposition Thiru @RahulGandhi avl has levelled serious allegations of voter fraud and coordinated manipulation of voter rolls by the BJP & Election Commission of India. Meddling with the electoral process to enable the victory of a particular political party is undermining the foundations of our constitutional democracy and we must come together with every ounce of courage and determination to fight it.
The LoP has shown the nation the data. The ECI & BJP cannot hide behind empty rhetoric and usual diversionary tactics. Let them come forward with a point by point rebuttal. The people of the country deserve an answer.
Meanwhile I’m surprised to see the tone and tenor of the reply of the Chief Electoral Officer, Karnataka. He has asked the LoP to file an affidavit and objection under Rule 20(3)(b). I’m surprised that a CEO does not know that Rule 20 enquiry has a period of limitation as per rule 12 which is 30 days after publication of the draft rules. It cannot be done now. So why ask the LoP to make such an application? For playing to the gallery? Why is he talking about election petitions? Surely a CEO’s first concern should be purity of electoral process and not safeguarding the victorious BJP MPs?
The LOP has explained why the @INCIndia couldn’t lodge these complaints earlier. It’s because ECI doesn’t share OCR format data. Each page of the lakhs of pages of voter rolls cannot possibly be scrutinised manually, especially during election season. Also, no one expected the ECI to commit such gross illegality and constitutionality monstrosity.
Now that voter fraud to an unprecedented level has been unearthed and proved with data by the LOP, enquiry by the very same officers who enabled such illegalities will not be effective or just remedy.
There has to be a joint parliamentary committee constituted to investigate this voter fraud and the most stringent action taken against each and every official responsible.
#eciexposed
#votechoriexpose
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுகிற வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை’யை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்றோம்.
இருமொழிக்கொள்கை உட்பட தமிழ்நாட்டின் பார்வையோடு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை நம் மாணவர்களின் கல்வியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.
மேலும், தமிழ்நாடு பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@Subramanian_ma@PKSekarbabu@Anbil_Mahesh@Govichezhian
எது உண்மையான பெருமை?
எளிய பின்னணியில் இருந்து, இன்று நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு நமது அரசுப் பள்ளி மாணவர்கள் செல்கிறீர்களே... இதுதான் உண்மையான பெருமை! உங்களை உயர்த்தியதில் நமது #DravidianModel அரசுக்குப் பெருமை!
வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பல்லாயிரமெனப் பல்கிப் பெருக, நமது பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ள #மாநிலப்_பள்ளிக்_கொள்கை_2025-ஐ வெளியிட்டுள்ளேன்.
மாவட்டம்தோறும் Model Schools, ஒன்றியங்கள் தோறும் மாதிரி வெற்றிப் பள்ளிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு Residential Schools, அனைத்துப் பள்ளிகளிலும் Smart வகுப்பறைகள், 100% GER - இப்படித்தான் தமிழ்நாடு இருக்கும்! அதை நோக்கியே இந்த அரசு உழைக்கும்!
@Anbil_Mahesh@tnschoolsedu
#StateEducationPolicy2025 #SEP2025
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் #தாயுமானவர் திட்டம்!
ஆகஸ்ட் 12 தொடங்கி வைக்கிறேன்...
16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர்.
இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று #DoorDelivery!
#எல்லார்க்கும்_எல்லாம் #DravidianModel
முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் `முரசொலி’ நாளிதழும், அவரால் தொடங்கப்பட்ட `கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியும் இணைந்து தொடங்கியிருக்கும் `கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்ட’த்தை, கலைஞர் நினைவு நாளான இன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கிவைத்தார்.
`கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்ட’த்துக்கான இலச்சினையைக் கழகத்தலைவர் அவர்கள் வெளியிட, மூத்த பத்திரிகையாளர் அண்ணன் `நக்கீரன்’ கோபால் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
`ஜஸ்டிஸ்’, `குடி அரசு’, `விடுதலை’, `திராவிட நாடு’, `மாலைமணி’, `நம்நாடு’, `முரசொலி’, `இளையசூரியன்’ என்று நூற்றாண்டாக தொடரும் திராவிட இயக்க இதழியலின் அடுத்தகட்டப் பாய்ச்சலே `கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்’.
இந்தத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் `முரசொலி’, `கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சி போன்ற பெரும் நிறுவனங்களிலும் அதன் இணையதளங்களிலும் பங்களிப்பதற்கான பயிற்சி பெற்று, திராவிட இயக்க இதழியலின் அடிப்படைகளைக் கற்று தேர்ந்து, நாளைய இதழியல் வரலாற்றைத் தீர்மானிக்கப்போகும் ஆளுமைகளாக உருவாகப்போகிறார்கள்.
`கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்ட’த்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://t.co/iOQfFA1NcK என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இன்றே விண்ணப்பிப்பீர்... திராவிட இதழியல் வரலாற்றில் இணைவீர்!
@Kalaignarnews@MPaasarai #KalaignarForever
எழுதும் பேனாவில் தொடங்கி, வாசிக்கும் புத்தகம், முழக்கமிடும் போராட்டக் களம், உரை நிகழ்த்தும் நாடாளுமன்றம், தினம் எதிர்ப்படும் மக்கள் என எங்கு காணினும் தென்படும் உங்கள் முகமே!
கருத்தாய், கண்மணியாய், கொள்கைக் குன்றாய், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய், நீங்காத நிழலாய், நெஞ்சுக்கு நிகரான உயிராய், உயிரினும் மேலான தலைவராய் எங்களுள் நீக்கமற நிறைந்து நிற்கும் முத்தமிழறிஞரே நீங்கள் காட்டிய சமூகநீதிப் பாதையில் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்திடுவோம்! எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம், சி.ஐ.டி காலனி இல்லங்களுக்குச் சென்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
"அப்பா என்பதை விட தலைவரே என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் இப்போது ஒரேயொரு முறை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே" என்று கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நெஞ்சுருகி எழுதிய கடிதத்தை கண்ட ஒட்டுமொத்த தமிழ்நாடும் கண் கலங்கியது! 🥹
தலைவர் கலைஞர் புகழ் வாழியவே!
#KalaignarForever
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் - உடன்பிறப்புகளுக்கும் இடையிலான பாசமிகு உறவிற்குப் பாலமாக திகழ்ந்த முரசொலியின் அலுவலக வளாகத்தில், கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அவர்களுடைய திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் அயராது உழைப்போம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் @dmk_youthwing பதிப்பகமான @muthamilarignar பதிப்பகம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும், ‘இளம் ஆய்வாளர்களுக்கான கலைஞர் நிதிநல்கை’ திட்டத்தை கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கிவைத்தார்.
‘கலைஞர் நிதிநல்கை’ திட்டத்துக்கான இலச்சினையைக் கழகத்தலைவர் அவர்கள் வெளியிட, திராவிட இயக்க மூத்த ஆய்வாளர் அய்யா க.திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
திராவிட இயக்கம் என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல, கருத்தியல் முன்னெடுக்கும் அறிவியக்கமும்கூட.
அத்தகைய திராவிட இயக்கம் அரசியல்,சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் செய்த பங்களிப்புகள் குறித்து, ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அதை ஆவணப்படுத்துவதற்கும் ‘முத்தமிழறிஞர் பதிப்பக’த்தால் தொடங்கப்பட்டுள்ள திட்டமே, இந்த ‘கலைஞர் நிதிநல்கை’ திட்டம்.
திராவிட இயக்கம் குறித்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ‘கலைஞர் நிதிநல்கை’ திட்டம் அன்புடன் வரவேற்கிறது.
#KalaignarForever
உடன்பிறப்புகளின் ஒப்பற்றத் தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கருப்பு - சிவப்புத் தொண்டர்களின் உள்ளங்களில் வாழும் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!!
என்றென்றும் கலைஞர் புகழ் ஓங்கட்டும்!
#Kalaignar #KalaignarForever
என் எண்ணங்களை நிறைவேற்றிச் செயல்படும் @dmk_youthwing!
தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு துணை முதலைமைச்சர் - கழக இளைஞரணிச் செயலாளர் தம்பி @Udhaystalin அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மூன்று மிக முக்கியமான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள்:
1. திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் உள்ள இளைஞர்களை இதழியலாளர்களாக்கும் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
2. இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் கலைஞர் நிதிநல்கைத் திட்டம்
3. @muthamilarignar பதிப்பகத்தின் சார்பில் எட்டுப் புத்தகங்கள் வெளியீடு
இளைஞரணித் தம்பிமார்களே…
நமக்கான பணிகள் இன்னும் நிறைய காத்திருக்கின்றன. களத்திற்கு ஆயத்தமாகுங்கள்! கழகம் 7-ஆம் முறை ஆட்சியமைத்திட ஆயுதமாகுங்கள்!
#KalaignarForever