பொதுத்துறை கீழ் வரக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரிவு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுத்துறையின் சட்ட ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்து தகவல்களும் Intelligence சம்பந்தமானது என்ற வகைப்பாடு செய்வது அபத்தமானது.
இந்த ஆணையை தமிழ்நாடு அரசு உடனே பின்வாங்க வேண்டும். வெளிப்படைத்தன்மை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அதற்கு மேல் எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது! @CMOTamilnadu
யாரு அந்த கலைச்சத்திரன் & Co?
சென்னை குடிநீர் வாரியம்(CMWSSB)2025 ஜூன்,சென்னை முழுவதும் 53இடங்களில் Water ATM எனும் 24 மணிநேரமும் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவியது.RTI பெற்றதகவலை நேரில் ஆய்வு செய்தபோது.இல்லாத WaterATM இக்கு Water Test Report?@CHN_Metro_Water 👌
21 நாட்களில் MLA பதவியை தூக்கி எறிந்து இருக்கிறார்கள். இவர்களுக்காக வரிசையில் நின்று வாக்களித்த மக்களை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள். இவர்களை தேர்ந்தெடுக்க செலவான மக்கள் வரிப்பணத்தை பற்றி எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று ஆணவத்துடன் சொல்கிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காக கட்சி மாற தங்களுக்கு வாக்களித்த மக்களை கோமாளிகளாக்கி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகள் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். இவர்கள் மீண்டும் ஒரு முறை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட எந்த வாய்ப்பும் கொடுக்க கூடாது. இந்த துரோகிகளை வேட்பாளர்களாக முன்னிறுத்தும் கட்சி தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. தாராபுரம், பெருந்துறை மற்றும் மதுராந்தகம் மக்கள் இனியாவது சுய மரியாதை உணர்வுடன் வாக்களிக்க வேண்டும்.
கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள்.
இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது.
@drtkprabhu_TVK@CMOTamilnadu@TVKVijayHQ
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ@srinathtvk
இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள், மாநகராட்சி டெண்டர்கள் ரத்து. டிரான்ஸ்பார்மர் ஊழல் அதிகாரி காசி பணி இடை நீக்கம்.
தவெக அரசு ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் ?
Full Interview on Redpix
https://t.co/CX2F61Brtj
கல் குவாரிகளில் எப்படி முறைகேடு நடைபெறுகிறது?
இந்த முறைகேடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
இந்த தண்டனையில் இருந்து கல் குவாரி கொள்ளையர்கள் எப்படி தப்பித்தார்கள்?
திமுக ஆட்சியில் நடந்தது என்ன?
விரிவான காணொளி - https://t.co/cNKhGHOHJl
தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறையின் இந்த செயலியை பயன்படுத்தி புகார்களுக்கு தீர்வு கண்டவர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா? சாலையின் நடுவே இருக்கும் ஒரு குழியை புகார் அளிக்க 4 பக்கத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் படம் எடுத்து போட்டால் தான் புகாரையே ஏற்றுக் கொள்வார்களாம். location link கொடுத்தால் போய் பார்க்க மாட்டார்களாம். அப்படியே கஷ்டப்பட்டு படம் எடுத்து போட்டால் பதில் கூட வராது. ட்விட்டர் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை பிரிவுக்காக ஒரு ஐடி உருவாக்கி படம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். தற்பொழுது அந்த அட்மின் கூட ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டார்.
தமிழக மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் புகார்களை தெரிவித்து தீர்வு காண வழி பிறக்குமா?
@CMOTamilnadu@chennai_Highway
ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா என்று கடந்த 5 வருடங்களாக சொல்லிக் கொண்டு இருந்த அந்த கட்சி ஆதரவாளர்கள் இரண்டு நாட்களாக ஊழல் குறித்து ஆக்ரோஷமாக எழுத துவங்கி இருக்கிறார்கள். இன்னும் பல பல வருடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக எழுத வேண்டும், பேச வேண்டும் போராட வேண்டும்.
வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி.
இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
@CMOTamilnadu@chennaicorp@sameerangs
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட சுமார் 10 கோடி மதிப்பிலான 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரையடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் திமுக மேயர் பிரியா மருத்துவ விடுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. திமுக அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் மவுன விரதத்தில் இருக்கிறார்கள்.
டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி அன்று ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களின் விவரங்களை நீங்கள் படத்தில் காணலாம்.
சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த டெண்டர்கள் மூலம் யார் என்ன மோசடி செய்தார்கள் என்று உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசு ஊழியர்களும், அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@chennaicorp@sameerangs@TVKVijayHQ
திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கு? அவர்கள் ஏற்கனவே ஊழலில் கூட்டணி அமைத்தவர்கள் தானே!
அதற்கு உதாரணம் தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஊழல். பாமர பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களை வாங்குவதில் செட்டிங் செய்து கிறிஸ்டி என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு டெண்டர் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்படுத்தி இருந்தார்கள். அதாவது கிறிஸ்டி நிறுவனத்திற்கும் அவர்களுக்கு டெண்டர் செட்டிங் செய்ய உதவியவர்களுக்கும் 2028 கோடி லாபம்.
டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டது குறித்து மேலும் தெரிந்து கொள்ள் இந்த https://t.co/TMinkIDJJA காணொளியை பாருங்கள். இந்த வீடியோவிற்கு பிறகு நடந்த மேலும் பல கோடி ஊழல் ஆதாரங்களையும் சேர்த்து ரூ 2028 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் 2021 இல் கொடுத்தது
ஆட்சி மாற்றம் நடந்து திமுக அரசு பதவி ஏற்ற பிறகும் அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக திமுக ஆட்சியில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு மேலும் பல டெண்டர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டணி இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டு மேலும் பல ஊழல்கள் மூலம் நம்மை கொள்ளை அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
என்ன செய்ய போகிறது TVK அரசு? ஊழலில் திளைக்கும் கிறிஸ்டி நிறுவனம் இனி டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுமா? ரேஷன் ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?
@CMOTamilnadu
We are seeing a lot of debate and discussion about the underhand discussions between AIADMK and DMK with background support of BJP. However, this has been amply clear for last several years for those following up DVAC cases of AIADMK corruption. We saw how DMK worked overboard to save several admk corruption cases such as adani coal import scam, kp park scam. Velumani corruption, Ration dhal, palmoil scam and many others. Also DMK not filing FIR in adani coal scam and working with BJP govt to do the 992 crore Christy ration transport scam showed how all of them had a clear underhand dealing when it cme to Corruption. DVAC officials faced pressure not to register or even recomment FIR in many scams. After Thiruma spoke in a interview yesterday, what we have been saying for a few years has come out in the open clearly!
அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd படித்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் PTR அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது E Tender கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 25 லட்ச ரூபாய்க்கு மேலாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் விடப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் பாக்ஸ் டெண்டர் மூலம் கமிஷன் வாங்கி டெண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பிழைப்பில் மண் விழுந்தது. PTR அவர்களின் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுவதால் அதை அனைவரும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. அப்படி பார்த்ததால் தான் திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க ஒப்பந்ததாரர்களை செட் செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து ஊழல் செய்ததை அறப்போர் இயக்கத்தால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் CBI விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது.
E டெண்டர்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களும் டெண்டர்களில் கலந்து கொள்ள் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கமிஷன் கொடுக்க விருப்பம் இல்லாத ஒப்பந்ததாரர்களும் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. என்ன நம்ம பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்களே என்று ஊழல்வாதிகள் அடங்கி போகவில்லை. புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலத்தில் அவசரமாக சில பொருட்கள் வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Limitted Tender வழிமுறையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே limitted tender கொடுக்க முடியும் என்பதால் கடந்த திமுக ஆட்சி முடிவடையும் காலம் துவங்கி பல்வேறு limitted டெண்டர்கள் சென்னை மாநகராட்சியால் போடப்படுகின்றன. இது தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற துவங்கியது.
அப்படித்தான் பெருங்குடி குப்பை கிடங்குக்கு Excavator வாடகைக்கு எடுக்க சுமார் 50 லட்சம் வீதம் 6 Limitted டெண்டர்கள் போடப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கு 6 excavatorகள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று டெண்டர் போடப்பட்டு ஒரே நாளில் மூடப்படுகிறது. இதை அறப்போர் இயக்கம் கண்டறிந்து புகார் அளித்தது. வாடகை எடுக்க கொடுத்த விலைக்கு புதிதாக excavatorகள் வாங்கிவிடலாமே என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி EE தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி மாநகராட்சியில் LImitted டெண்டர் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கை செய்தி வாயிலாக சொல்லி இருக்கிறார்.
இனி தமிழகத்தில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எந்த விதிமுறைகளையும் மீறாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான work order இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாக அங்கேயே இருக்கும் படி செய்ய வேண்டும். தற்பொழுது பெரும்பாலான work orderகள் மக்கள் பார்வைக்கே வைக்கப்படுவதில்லை. இதனால் என்ன வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை கூட மக்களால் அறிந்து கொள்ள் முடியவில்லை. வேலைகளில் முறைகேடு செய்வதற்காகவே work orderஐ திட்டமிட்டு ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள்.
தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே ஊழல் புகார்களுக்கு உரிய துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
We are Watching… அறப்போர் தொடரும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேனர் ஆட்சி திரும்புகிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் பேனர்கள் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. தவெக சார்பாக எச்சரிக்கை கொடுக்கப்பட்ட பிறகும் இவற்றை அகற்ற அந்த கட்சியின் சமூக விரோதிகள் எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#pallikkaranai
@CMOTamilnadu