பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!
#SocialJusticeDay#PeriyarForever
தலைவர் கலைஞர் அவர்கள் நிறுவிய முரசொலி, இன்று 85ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திராவிட இயக்க இலட்சியங்களின் குரலாகவும், ஜனநாயகவாதிகளின் இதழாகவும் விளங்கி நிற்கிறது முரசொலி!
இத்தனை ஆண்டுகாலமாக முரசொலியின் பயணத்தில் துணை நிற்கும் ஊழியர்ககளுக்கு வாழ்த்துகள்.
#முரசொலி85 #Murasoli
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
நமது ஆங்கில புலமையை, மேட்டிமைத்தன்மையை குழந்தைகளிடம் காட்டித்தான், நம் பொறுப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீங்கள் எவ்வளவு அறிவில் சிறந்தவர் என்பதை குழந்தைகளிடம் பழகும் பாங்கில்தான் வெளிப்படுத்த முடியும்.
பள்ளிக்கு சென்றதும் கைகட்டி நிற்கும் குழந்தைகளை பார்த்தால், முதலில் சொல்ல வேண்டியது, யார் முன்னாலும் கை கட்டி நிற்காதீர்கள் என்பதை தான்.
கேட்பதற்கு கேள்விகள் இல்லையென்றால், எடுத்த எடுப்பில் குழந்தைகளின் பெற்றோர் குறித்து கேட்காதீர்கள். அப்பா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு , அப்பா இல்லை என்பது பதிலாக இருந்தால், அதனை சொல்ல அந்த குழந்தை எவ்வளவு தயங்கும் என்பதை புரிந்துக் கொண்டு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.
உங்களின் நிர்வாகத் திறனை வெளிகாட்ட குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள்.
அமைச்சரின் செயலை கண்டிப்பவர்கள் தயவுகூர்ந்து அக்குழந்தையின் படத்தை பகிராதீர்கள்!
உழைப்பினால் உலகை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் 'மே தின' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பின் மகத்துவத்தைப் போற்றுவோம் - போராடி வென்றெடுத்த உழைப்பாளர் உரிமைகளை என்றும் பாதுகாப்போம்!
#MayDay#உழைப்பாளர்_தினம்
மே நாள் வாழ்த்து!
மனிதாபிமான கோரிக்கை வெற்றி பெற்ற திருநாள்!
நாளை (1.5.2026) மே முதல் தேதி; மேதினியெங்கும் கொண்டாடும் தொழிலாளர் தம் உரிமையாம் ‘‘8 மணிநேர வேலை மட்டுமே’’ என்ற மனிதாபிமான கோரிக்கை வெற்றி பெற்ற திருநாள்!
பல வகையிலும் தொழிலாளர்களின், மக்களின் உரிமைகள் பறிப்பு, பன்னாட்டு முதலாளிகளாலும், பிறவி முதலாளிகளாலும் சுரண்டப்படுவதை எதிர்த்து, விழிப்போடு இருந்து, அவர்களது வாழ்வில் விடியலைக் கொண்டு வந்த நாள்!
திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் தொடக்கத்திலேயே மே தினத்தைக் கொண்டாடியதை எவரே மறுப்பர்?
தொழிலாளியை, பங்காளியாகப் பார்க்கும் இலக்கு நம்முடையது என்பது முக்கியம்.
அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தஞ்சை
30.4.2026
தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!
தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்!
தொகுதி மறுவரையறை, இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், நிதிப் பகிர்வில் பாரபட்சம் என வடக்கு எத்தனை வஞ்சகம் செய்தாலும், கும்பிட்டு “ஆமாம் சாமி” போடும் அடிமைகளைத் தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டின் தன்மானம் காக்கும் திராவிட மாடல் அரசே மீண்டும் தொடர அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் சமத்துவநாள் என்று அறிவிக்கப்பட்ட நன்னாள்.
'என்னைவிட உயந்தவரும் கிடையாது; என்னைவிட தாழ்ந்தவரும் கிடையாது" என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை நனவாக்க உழைத்துவரும் இயக்கம் நம் திராவிட முன்னேற்றக்கழகம்.
மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை சீரழிக்கத்துடிக்கும் பா.ஜ.க - அதன் அடிமையான அ.தி.மு.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி அம்பேத்கரின் சமத்துவத்தை உறுதிசெய்யும் #திராவிடமாடல் அரசு தொடர உறுதியேற்போம்.
#Ambedkar #EqualityDay #சமத்துவ_நாள்
இளைஞர் அணியின் அவசர செயற்குழு கூட்டத்தில் திருக்கழுக்குன்றம் பேரூர் சார்பாக கலந்துக்கொண்டோம்.உடன் துணை அமைப்பாளர்கள் திரு. காஜா மற்றும் சரண்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவண்,
ச.அரவிந்தன் 🏴🚩
இளைஞர் அணி அமைப்பாளர்
திருக்கக்குன்றம் பேரூர்.
இன்று 05/12/2025 மாலை 6.00 மணியளவில்
தமிழக துணை முதல்வர் இளைய தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அனைத்து கழக உடன் பிறப்புகளுக்கும் பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவண்,
அரவிந்தன் ச