இந்த மாதம் 542 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்கு ₹2,393 கட்டணம் செலுத்தியுள்ளேன்.
ஆனால் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தியிருந்தால் வெறும் ₹1,570 மட்டுமே கட்டணம் வந்திருக்கும்.
அதாவது, 500 யூனிட்டை வெறும் 42 யூனிட் தாண்டியதற்காக மட்டும் ₹823 கூடுதலாக கட்ட வேண்டிய நிலை.
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் அதிரடிப் போராட்டம்! நாகப்பட்டினம் சிக்கல் வேளாண் கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் காளியம்மாள் அவர்கள்!
பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் தெரிவித்துள்ள தவறான கருத்துக்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
-கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மற்ற கட்சிகளின் வரலாற்றையோ, வளர்ந்த விதத்தையோ, தொண்டர்களின் தியாகத்தையோ மதிப்பிடாமல் கருத்துக்களைச் சொல்லக் கூடாது என்பதற்காகவே வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு அண்ணா திமுக தொண்டனும், எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், தான் ஏற்றுக்கொண்ட தலைவன் மீது கொண்டுள்ள நீக்கமற பக்தியால், கடுமையாக உழைத்து, தன் இயக்கத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அந்த தொண்டனை கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்த வேண்டும்.
-கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை,
Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது.
#NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்!
வழி வருகிறது.
நம் தலைமை வழி காட்டுவார்
@EPSTamilNadu@AIADMKOfficial
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்துமே தங்களின் முந்தைய ஓட்டு வங்கியைப் பறிகொடுத்து சரிவைச் சந்தித்துள்ளன.
ஆனால், இந்த கடுமையான சுனாமியிலும் நிமிர்ந்து நின்றது யார்?
அதிமுக (AIADMK): 2024-ல் 20.70% ஆக இருந்த வாக்குச் சதவீதம், 2026-ல் 21.21% ஆக உயர்ந்துள்ளது
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நாமக்கல்லில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்..
தூத்துக்குடி அருகே தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து நகை பறிப்பு.
இப்பிடி தமிழ்நாடே Crime Zone-ஆ மாறிட்டு இருக்கு!
ஆனா இதையெல்லாம் தடுத்து Action எடுக்க வேண்டிய முதலமைச்சரோ DND MODE - ல இருக்காரு.
மாதம் ஒருதடவை மட்டும் வெளிய வந்து script - அ படிச்சு மனப்பாடம் செஞ்சு வந்து ஒப்பிச்சுட்டு போனா மட்டும் பத்தாது @actorvijay சார்..
இங்க உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் உங்ககிட்ட இருந்து பன்ச் டயலாக் எதிர்பாக்கல..
பாதுகாப்ப தான் எதிர்பாக்குறாங்க..
அதுனால Script மனப்பாடம் செய்றத நிறுத்திட்டு Reality-க்கு வாங்க CM சார்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் பதிலளிக்கத் தெரியாமல் திணறும் ஒருவர், வீட்டிற்கு சென்ற பிறகு X வலைதளத்தில் வாடகை எழுத்தாளர்கள் தயாரித்த அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் முன்பாக வாடகைதாரர்கள் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்ய பல நாட்கள் எடுத்துக்கொண்டு, மேடையில் ஏதோ போர்முழக்கம் போல முழங்குவது; வசனம் மறந்தவுடன் அருகில் இருக்கும் ஸ்கிரிப்ட் பேப்பரைத் தேடி தடவுவது ,இந்த நாடகங்களையெல்லாம் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் "தூய சக்தி", "தீய சக்தி", "ஊழல் சக்தி" என்று மேடைகளில் முழங்கியவர்கள், தேர்தல் முடிந்ததும் அதே கட்சிகளின் வாசலில் ஆதரவுக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று ஊழல் சக்தி என்று விமர்சித்தவர்களின் ஆதரவை இன்று தேடி ஆள் தூக்கும் வேலையில் அலைவது தான் அரசியல் நேர்மையின் அடையாளமா?.
ஆட்சிக்கு வந்த உடனே தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாதவர் போல் பாவித்துக் கொண்டு, மற்றவர்களை ஏளனமாகப் பேசுவது தலைக்கனத்தின் உச்சம். தமிழக அரசியல் வரலாறு ஒன்றை தெளிவாகக் காட்டியுள்ளது — பதவியின் உச்சியில் இருப்பவர் பணிவை இழந்தால், அவர் இருந்த இடமே தெரியாமல் போகும் நாள் வெகுதொலைவில் இருக்காது.
தனக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் வாக்களித்து அரியணையில் அமர வைத்தது போல நடந்து நடந்து கொள்வது அறியாமையின் உச்சம், தான் உயர்ந்தவர் மற்ற அனைவரும் தனக்கு கீழே என்ற மனநிலையில் பேசுவது அதிகார திமிரின் வெளிப்பாடு.
நாவடக்கம் தேவை @actorvijay; இல்லையெனில் மக்கள் வழங்கிய உயரமே உங்களை கீழிறக்கும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி MLA அவர்களும், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dr_dhanapal_mp அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. @rajendraarlekar அவர்களை மக்கள் மாளிகையில் நேரில் சந்தித்து,
தமிழக அரசியல் இதுவரை கண்டிராத வகையில், தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகம் போல மாற்றி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குறிவைத்து ஆளுங்கட்சி நடத்தும் குதிரை பேரம் குறித்து CBI விசாரணை நடத்திட வேண்டி அஇஅதிமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
@lokbhavan_tn@AIADMKOfficial
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் திரு MA.முனியசாமி அவர்களின் தாயார் திருமதி ஏ. யசோதை அம்மாள் அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அன்னாரின் மறைவால் வாடும் அண்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மாவின் ஆன்மா எம்பெருமான் ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறவும், அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அருளவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.