The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
செய்தி அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.
எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இன்றைய தினம் மாபெரும் மக்கள் சந்திப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கரூர் மாநகருக்கு வருகை புரிந்த…
தமிழ்நாட்டின்
அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றமிகு திருப்புமுனையை ஏற்படுத்தி,
மக்களின் நம்பிக்கை சக்தியாக
மகுடம் சூடியிருக்கும் மாற்றத்தின் நாயகர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணம்! 🙏❤️💛❤️
#CMJosephVijay #TVK #TNCMCaresForKarur
கரூரில் நடைபெற்ற அந்த கொடுந்துயரமான சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களின் வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அன்புக்குரியவர்களை இழந்த அந்த குடும்பங்களின் கண்ணீருக்கு எந்த நிவாரணமும் ஈடாகாது. ஒரு பணிநியமனம் மட்டும் அவர்கள் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தர முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், அந்த குடும்பங்கள் இன்று எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களில் பலர் தங்கள் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர்கள். எளிய,விளிம்புநிலை மக்கள்.பல குடும்பங்களில் பெண்கள் இன்று தனியாக குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.. பல குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த நாளில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒரு நிகழ்வைக் காணவும், தாங்கள் விரும்பும் ஒருவரை சந்திக்கவும் வந்த சாதாரண பொதுமக்களே. இது பொதுவாக எங்கும் நிகழக்கூடியதுதான். இவ்வளவு பெரிய ஒரு துயரம் நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
இந்த நிலையில், அந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு பணி என்பது அவர்களின் இழப்பை ஈடு செய்யும் ஒன்று அல்ல;ஆனால், அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சிறிய நம்பிக்கையும், பாதுகாப்பும் அளிக்கும் ஒரு ஆதரவாகும்.
வழங்கப்படும் பணிநியமனங்கள் எந்த விதிமுறைகளையும் மீறாமல், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்படும்
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எமது மக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடமும், சி.பி.ஐ. விசாரணையிலும் தங்களது வாக்குமூலங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இதனால் எமது மக்களின் மனநிலையில் புதிதாக எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
நீதிக்கான விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதரவும் தொடர வேண்டும்.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கான இந்த எளிய ஆதரவை அரசியல் கண்ணோட்டத்தோடும், கடுமையான விமர்சனப் பார்வையோடும் அணுகாமல், கருணையோடும், மனிதநேயத்தோடும் அணுக வேண்டும் எனறு எமது மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த குடும்பங்களின் துயரத்தை உணர்ந்து, அவர்களின் எதிர்காலத்திற்கு துணை நிற்போம்.
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @CMOTamilnadu தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் @TVKHQITWingOffl , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் @mdmkparty இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#tvk #mdmk #vaiko #vijay