தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளராக (Organisation General Secretary) கடந்த 2015 முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அயராது பணியாற்றிய ஸ்ரீ @KesavaVinayakan ஜி அவர்கள், ஆர்.எஸ்.எஸ். முழுநேர பிரச்சாரகராக தொடங்கி, கன்னியாகுமரி பகுதியில் வலுவான அமைப்பு வேலைகளை மேற்கொண்டு, தேசிய நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.
கட்சியின் வளர்ச்சி, தொண்டர்களின் ஒருங்கிணைப்பு, சமூக சேவை மற்றும் தேர்தல் தயாரிப்புகளில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போது, தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் புதிய பொறுப்புக்கு (வட தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் & சத்பாவ் - சமுதாய நல்லெண்ண ஒருங்கிணைப்பாளர்) மாற்றப்பட்டுள்ளார்.
அவரது நீண்டகால அர்ப்பணிப்பும், தியாகமும் தமிழகத்தில் பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளன. இனி RSS-இல் தொடரும் பணியில் இன்னும் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள்!