இறைவனின் அருற்கொடைகளை கண்களில் பார்க்கும் போதே அவனுக்கு நன்றி சொல்லி விடுங்கள்,
காரணம்...
நீங்கள் அனுபவித்து சொல்ல போகும் நன்றியை உங்கள் மரணம் முந்திவிடகூடாது !
உங்கள் சினிமா துறையை சேர்ந்தவர்.. தமிழக முதல்வர் ஆகியதற்கு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லையா?
மோடி பிரதமர் ஆன மூன்று முறையும் முதல் ஆளாக வாழ்த்து சொன்னீ��்கள்.
விஜய் மீது மட்டும் என்ன வெறுப்பு?
கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்தது காவல்துறை அராஜகம் என்று பாஜக மாநி�� தலைவர் நைனார் நாகேந்திரன் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) மாற்றி, மோடி அரசு அண்மையில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து, இடதுசாரிகளும் வழக்கறிஞர்களும் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.
புதிய சட்டத்தில், ஒருவரை கைது செய்ய வேண்டுமானால், அவர் எங்கு தங்கியிருப்பதாக கருதினாலும், அது யாருடைய சொத்தாக இருந்தாலும், சன்னல்களையும் க���வுகளையும் உடைத்துச் சென்று கைது செய்யலாம் என்று காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்ததும் கண்டன போராட்டத்தின் காரணங்களில் ஒன்றாகும்.
அப்போது இந்தச் சட்டம் நியாயம் தான் என்று பேசிய நைனார் நாகேந்திரன், அந்தச் சட்டம் செயல்படுத்தப்படும் போது அலறித் துடிப்பது ஏன்?
2019 ஆகஸ்டு 21ஆம் தேதி, டெல்லியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், நா��ாளுமன்ற உறுப்பினர் பி சிதம்பரம் அவர்களின் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து, கதவை உடைத்து, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தார்கள். இவ்வளவுக்கும் அப்போது இந்த பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் இல்லை. அன்றைய நிலையில் அவ்வாறு செய்தது சட்ட விரோதம்!
அப்போது காவல்துறையின் வல்லமையை புகழ்ந்து போற்றிய பாரதிய ஜனதாவுக்கு, இப்போது அந்த செ��ல் சட்டபூர்வமான அதிகாரம் என்று பாஜகவே மாற்றி அமைத்த பின்பும், அதைக் செயல்படுத்தும் போது கண்டிப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
அபாண்டமான குற்றம் சுமத்தி, ஸ்டான் சாமி பாதிரியாரை சிறையில் அடைத்து, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர் உணவருந்த, ஒரு உறிஞ்சு குழல் கூட கொடுக்காமல் பட்டினி போட்டு சாகடித்த பாரதிய ஜனதாவுக்கு, இப்போது பேச எந்த தார்மீக நியாயமும் உரிமையும் இல்��ை