விஜைனா தேர்தல் அறிக்கை தப்பும் தவறுமா இருக்குன்னு நீங்க கிண்டல் அடிச்சுட்டு இருக்கீங்க.. தேர்தல்னா அறிக்கை வெளியிடனும்னு அவன் தற்குறி மூளைக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்..
நீயே அங்கீகாரம் தேடி, மதிப்பு தேடி, பணம் தேடி, அன்பு தேடி மற்றவர்களிடம் யாசித்துக் கொண்டிருக்கிறாய்,
உன்னிடம் என்ன இருக்கிறது? பிறரோடு பகிர்ந்து கொள்ள!
நீயே ஒரு பிச்சைக்காரன்
-ஓஷோ
சரியான நேரத்தைக் காட்டாத கடிகாரமும்,
சரியான நேரத்தில் கொடுக்காத காலண்டரும்
வீண்தான்.
அதை ஏன்டா என் கடை முன்னாடி வந்து சொல்ற.. சாமான்கள் வாங்குறது பூராவும் ஆன்லைன்ல காலண்டர் மட்டும் ஓசில நான்தான் தரணுமா?!
#காலண்டர்
"வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது!"
-நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
# சங்கிஸ் : எங்க ஆட்சில இந்தியர்களோட வாழ்க்கை, முதல் தர உலக நாடுகளோட அளவுக்கு உயர்ந்துருக்குன்னு சொன்னப்போ யாராவது நம்புனீங்களா..?
யாருங்க சொன்னா பசங்களுக்கு தேதிகள் ஞாபகம் இருக்காதுன்னு!?
எங்களுக்கு,
EMI தேதி,
Insurance Renewal தேதி,
FD maturity தேதி எல்லாம் அப்படி ஞாபகம் இருக்கும்ங்க!!
பழமுதிர்சோலை முருகனுக்கு ஆட்டை பலி கொடுத்து, அந்த ஆட்டு ரத்தத்தில் அரிசியை பிணைந்து முருகனுக்கு படைக்கின்றனர் தமிழர்கள்
இதை நான் சொல்லவில்லை. திருமுருகாற்றுப்படை சொல்கிறது. முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது மிகப்பெரிய சடங்கு. ஆட்டை பலி கொடுக்காவிட்டால் நாடு நாசமாக போகுமாம். அனைத்து முருகன் கோயில்களில் ஆடு பலி கொடுக்க வேண்டும்.
ஐங்குறுநூறு பாடல் முருகன் ஆட்டை பலி கொடுக்கும் சடங்கிற்காக காத்து கிடப்பான் என்கிறது.
முருகன் ஈச்ச இலையில் வடிகட்டிய கள்ளை குடிப்பான் என்கிறது திருமுருகாற்றுப்படை.
கொழுத்த கோழியின் கழுத்தை திருகி பலியிட்டு அதன் ரத்தத்தை திணையில் கலந்து முருகனுக்கு படைப்பதாக குறுந்தொகை சொல்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய சடங்கை மீட்டெடுக்க வேண்டும். வெறியாட்டு என்ற விழாவையே தமிழ் நிலத்திலிருந்து ஒழித்து விட்டார்கள்.
அசைவம் உண்ட முருகன் எப்படி திடீர் சைவம் ஆனான்?
தமிழர்கள் இன்னும் எத்தனை தான் இழந்தார்களோ?
#Tirupparankundram #திருப்பரங்குன்றம்
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாது என்ற திமுக அரசின் அரசாணை மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம்!
@CMOTamilnadu@mkstalin
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கடந்த 2 ஆண்டுக் காலமாக ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது அதனை ஒருபோதும் நிரப்ப முடியாது என்று சத்தமின்றிப் புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உதவித்தொகை உயர்வு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது கொடுங்கோன்மையாகும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 21.04.23 அன்று “அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் விரைவில் கண்டறியப்பட்டு, அவை சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வின் மூலம் நிரப்பப்படும்” என்று அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து கடந்த 24.07.23 அன்று அதற்கான அரசாணையும் (எண் 20/2023) பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த இரண்டாண்டு காலமாகச் சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன, விரைவில் நிரப்பப்படும் என்று பச்சைப் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மாற்றுத்திறனாளி பெருமக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது அந்த அரசாணையைச் செயல்படுத்த இயலாது என்று கூறி, அதனை இரத்துச் செய்வதாக மற்றொரு அரசாணையை நிறைவேற்றியுள்ளது மாற்றுத்திறனாளி பெருமக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம் ஆகும்.
அத்தோடு, ‘அரசுத்துறையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்’ எனக் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையும் (எண் 151) ரத்து செய்துவிட்டு, தொகுப்பூதியத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் போட்டித்தேர்வில் பங்கேற்றால், அவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மாற்றுத்திறனாளிகளை அரசுப்பணிகளிலேயிருந்தே அகற்றும் கொடுஞ்செயலாகும்.
இவ்விரு புதிய அரசாணைகள் மூலம் திமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை சிதைத்து, அவர்களை மீள முடியா இருளில் தள்ளியுள்ளது. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? இதற்குப் பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? தன்னுடைய ஆட்சியில் ‘ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது’ என்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் அவர்கள், ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் பெருந்துயரத்தில் தள்ளியது ஏன்? இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக அரசு இப்படி போலி வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றப்போகிறது? மாற்றுத்திறனாளி பெருமக்களுக்கு அரசால் வழங்கப்படுவது சலுகைகள் அல்ல, அது அவர்களின் அடிப்படை உரிமைகள் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படும்போதுதான் உண்மையான சமூகநீதியை மண்ணில் மலரச் செய்ய முடியும்.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் இரண்டு புதிய அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, அரசுத்துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பழையபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், முதல்வர் வாக்குறுதி அளித்தபடி அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பறிக்கும் தமிழ்நாடு அரசின் இரண்டு அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் பார்வை மாற்றுத்திறனாளி சங்கங்கள் இன்று (03.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் நாளினை கருப்பு நாளாக கடைபிடித்து முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவை அளித்துக் கோரிக்கை வெல்லும்வரை துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி