“எனக்கு திமுகவும் பாஜகவும் ஒன்றுதான்” என்று சொன்ன பிறகு, எங்களுக்கு திமுகவும் - புதிய கட்சியும் ஒன்றுதான்,
வைகோவும் - நீங்களும் ஒன்றுதான்,
உங்கள் ஆதரவாளர்கள் எங்கள் கட்சி தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் உங்களை பற்றியும், உங்கள் கட்சியை பற்றியும் அதைவிட கடுமையாக விமர்சனம் செய்வோம்.
நன்றி 🙏
Landed in Nice. In addition to Nice, this France visit includes programmes in Evian and Paris. There will be bilateral and multilateral engagements, which will be aimed at improving India’s friendships with key developmental partners.
I look forward to meeting President Macron tomorrow and to being at ‘Bharat Innovates.’
@EmmanuelMacron@BharatInnov2026
பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி!
சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
தமிழகப் பெண்களைப் பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கியுள்ளோம் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் மேடையெங்கும் பெருமை பேசி வரும் வேளையில், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருவது கொடூரமானது.
பாலியல் வன்கொடுமைகளின் கூடாரமாகத் தமிழகம் உருமாறுவதை உடனடியாக தவெக அரசு தடுக்க வேண்டும்! ரீல்ஸ் வெளியிடுவதில் குதிரை வேகத்திலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஆமை வேகத்திலும் செயல்படுவதை விடுத்து, உடனடியாக தமிழகப் பெண்கள் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்!
கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற பாஜக பயிற்சி முகாம்களின் பயிற்றுனர்களுக்கான சிறப்பு பயிற்சிப் பட்டறை
முகாம்களுக்குச் சென்று பயிற்சி அளிக்கவுள்ள பயிற்றுனர்களுக்கு, கொள்கை மற்றும் களப்பணிகள் குறித்த ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்று, பயிற்றுனர்களுக்குத் தேவையான முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கிய
திரு. கே.டி. ராகவன் அவர்கள் (பிரிவுகளின் மாநில அமைப்பாளர்)
திரு. கோபிநாத் அவர்கள் (சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர்)
திரு. திருநாவுக்கரசு அவர்கள் (OBC அணி மாநில தலைவர்)
திரு. பாலன் அவர்கள் (திருச்சி பெருங்கோட்ட அமைப்பாளர்)
திரு. பாலக்குமார் அவர்கள் (கோவை பெருங்கோட்ட அமைப்பாளர்)
திரு. ராஜ்குமார் அவர்கள் (OBC அணி மாநில பொதுச் செயலாளர்)
ஆகியோர் கலந்து கொண்டு நமது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் திறம்படக் கொண்டு சேர்க்கவும், களப்பணியை வலுப்படுத்தவும் இந்த முகாம் ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்தது. தேசப்பணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவோம்,
@thiruvarur_bjp மா தலைவர் @vkselvambjp ji நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசரத் தேவையை உணர்ந்து வீடுகள் கட்டுவதற்குத் தேவையான தென்னங்கீற்றுகள் மற்றும் தற்காலிக வாழ்வாதாரத்திற்காக அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அவர் வழங்கினார்.
மன்னார்குடி மேற்கு ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அப்பகுதி மக்களை,
திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது
இல்லாத குறுவை சாகுபடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் என்று அறிவிப்பதை நாங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வது தண்ணீரே இல்லாத போது எதற்கு இந்த ஆடம்பர அறிவிப்பு
தமிழக அரசு விவசாயிகளுக்கு மிகத் தெளிவாகவும் விரிவாகவும் பகிரங்கமாக விளக்க வேண்டும்1/2
@TVKVijayHQ அரசே, விரிவான விளக்கம் கொடு,,
இந்த 134 கோடி ரூபாய் யாருக்காக ??
ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், அணை திறக்கப்படாத இந்தச் சூழலில்
தமிழக அரசு அவசர அவசரமாக₹134 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி 1/2
இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது?
கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் திரு. @imrajmohan அவர்கள், “கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது” என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் "B team" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? “மதச்சார்பின்மை” என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், திரு. @TVKVijayHQ அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!
@CMOTamilnadu
மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும் அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தவெக அரசு!
கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 25) ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் இத்தகைய அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது. ஆனால், தனது அதிகார மமதையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள தவெக அரசு, முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திகக் கொள்கைகளை இறக்குமதி செய்து, தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
எனவே, மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த அறிவிப்பைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் தங்களது கலாசாரத்தைக் காக்க ஜனநாயக ரீதியில் திரண்டெழுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட தீவிரம்... டெல்லியில் தமிழக முதல்வர் @TVKVijayHQ மௌனம்! கூட்டணி அழுத்தமா? இல்லை கொள்கை முடக்கமா? கர்நாடகா சென்றுள்ள முதல்வர் தமிழகத்திற்கான நீரைப் பெற்றுத் தருவாரா அல்லது உரிமையை தாரை வார்ப்பாரா? பதில் சொல்லுங்கள் முதல்வர் அவர்களே @TVKPartyHQ
காங்கிரஸ் தயவில் நடக்கும் தவெக அரசு, கேள்விக்குறியாகும் டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம்,,
ஜூன் 12-ம் தேதி வழக்கமாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு பாதியளவிற்கும் குறைவாக சுமார் 41 டி.எம்.சி மட்டுமே உள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாகக் கை கொடுக்காத சூழலில், மேட்டூர் அணை திறக்கப்படுவது தள்ளிப்போகும் என்றே தெரிகிறது. காலம் கடந்து திறக்கப்படும் தண்ணீர், குறுவை சாகுபடிக்கு எந்த வகையிலும் உதவாது என்பதுதான் கசப்பான எதார்த்தம்.
இங்கேதான், முதலவர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய அரசின் நிர்வாகத் திறனும், அரசியல் பொறுப்பும் கேள்விக்குறியாகிறது,
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தற்போதைய குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடுவதாகத் தெரியவில்லை. மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், இதற்கான உண்மையான பின்னணி என்ன? கர்நாடகத்திலிருந்து நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் வராததுதான்!
காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாத பங்கீடாக தமிழகத்திற்கு 9.91 டி.எம்.சி தண்ணீரைத் தடையின்றி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும், கர்நாடக காங்கிரஸ் அரசு அதை மதிக்கவில்லை
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக அரசும், அதற்குத் தோள் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியும் நெருங்கிய கூட்டணியில் இருக்கிறார்கள். அண்டை மாநிலமான கர்நாடகத்திலோ காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தங்களுக்குள் இருக்கும் இணக்கமான கூட்டணியைப் பயன்படுத்தி, கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, தமிழக விவசாயிகளுக்கான உரிய பங்கீட்டு தண்ணீரை ஏன் இந்த அரசு இன்னும் கேட்டுப் பெறவில்லை?
தேர்தல் நேரத்து அரசியல் கூட்டணிகள் தொகுதிப் பங்கீட்டிற்கு மட்டும்தானா? தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அந்தக் கூட்டணி உதவாதா? சொந்தக் கூட்டணிக் கட்சியிடமே பேசித் தண்ணீரைப் பெறத் தயங்குவது ஏன்?
விவசாயிகள் சார்பாக தஞ்சை மண்ணிலிருந்து நாம் வைக்கும் 3 போர்க்காலக் கோரிக்கைகள்:
1. உடனடி பேச்சுவார்த்தை: தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனடியாக கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ஜூன் மாதத்திற்குரிய காவிரித் தண்ணீரை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும்.
2. 24 மணி நேர மும்முனை மின்சாரம் & டீசல் மானியம்: மேட்டூர் அணை திறக்க தாமதமாகும் பட்சத்தில், நிலத்தடி நீர் மற்றும் பம்ப்செட் (Filter Point) மூலமாக குறுவை சாகுபடியைத் தொடங்கத் தயாராக இருக்கும் விவசாயிகளுக்குத் தடையற்ற 24 மணி நேர இலவச மின்சாரமும், டீசல் மானியமும் வழங்க வேண்டும்.
3. 100% மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டம்: விவசாயிகளுக்குத் தேவையான தரமான குறுவை நெல் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை 100% மானியத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனடியாக விநியோகம் செய்ய வேண்டும்.
புதிய அரசுக்கு நிர்வாகத்தை ஆழம் பார்க்கக் கால அவகாசம் இருக்கலாம், ஆனால் விவசாயத்தின் காலண்டருக்குக் காத்திருக்க நேரமில்லை,காலம் தாழ்த்தி வழங்கப்படும் எந்த ஒரு திட்டமும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது. தமிழக அரசு உடனடியாகத் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.
அறிவியல், விண்வெளி மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் இந்தியாவின் 'நாரி சக்தி' (பெண்களின் ஆற்றல்) தடம் பதிப்பதைக் காண்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அவர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது, புதிய வாய்ப்புகளுக்கான வழிகளைத் திறப்பதோடு, நாடு முழுவதும் வளர்ச்சியின் போக்கையும் மாற்றியமைத்து வருகிறது.
பெண்களைப் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமானவர்களாக மாற்றுவதில் பெரும் பங்காற்றி வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு எங்கள் அரசு தீவிரமாக ஆதரவளித்து வருகிறது.
#12YearsOfNariShakti
கடந்த 12 ஆண்டுகளில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல என்.டி.ஏ (NDA) அரசு பணியாற்றியுள்ளது. இது பல்வேறு துறைகளிலும் காணக்கூடியதாக உள்ளது.
நிதிச் சேர்க்கை மற்றும் தொழில்முனைவு முதல் கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல் மற்றும் நிர்வாகம் வரை பல்வேறு துறைகளிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
என்.டி.ஏ (NDA) அரசாங்கத்தின் முயற்சிகள் கண்ணியம், வாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இன்னும் வலுவாகப் பங்களிக்கவும் ஏற்ற சூழலை உருவாக்க இவை உதவியுள்ளன.
#12YearsOfNariShakti
இத்தனை நாட்கள் உறக்கத்தில் இருந்தீர்களா முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே?
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடியை ஒட்டி ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக இருப்பதும் உங்களுக்கு நேற்று தான் தெரியுமா? வருடந்தோறும் நடக்கும் வழக்கமான நிகழ்வைக் கூட முன்கூட்டியே ஆய்வு செய்து, திட்டமிட முடியாதளவிற்கு ரீல்ஸ் எடுப்பதில் படு பிஸியாகிவிட்டீர்களோ?
மேட்டூர் அணை நீர் திறந்துவிடப்பட வேண்டிய தேதியன்று வந்து, “நீர் குறைவாக உள்ளது அதனால் சிறப்புத் தொகுப்பு கொடுக்கிறோம்” என்று கதை சொல்கிறீர்களே, உங்கள் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் என்றைக்கு செயல்பாட்டிற்கு வருவது, டெல்டா விவசாயிகள் எப்பொழுது தங்கள் நடவை ஆரம்பிப்பது? மழைநீரும் அல்லாமல், அணை நீரும் தராமல் வெறும் வடிமுனைக் குழாய்களைக் கொண்டு மட்டுமே லட்சக்கணக்கான விளைநிலங்களில் பாசனம் செய்ய முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை முதலில் நீங்கள் ஆராய்ந்தீர்களா?
அதிலும் தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கையில், விவசாயிகளுக்கு 18 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று நீங்கள் சொல்வது கேப்பையில் நெய் வடியும் கதையன்றி வேறென்ன? இப்படி நடைமுறை சிக்கல்கள் எதையும் தெளிவாக கண்டறியாமல், நேற்றைக்கு ஒரு திட்டத்தை தீட்டி அதை இன்றைக்கு பேப்பரில் வெளியிட்டு விளம்பரம் தேடுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை முதல்வரே.
எனவே, முறையான ஆய்வுக் குழுவை அமைத்து இப்பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் அணுகுவதோடு, முதல்வரின் நிர்வாக அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்களின் 12 ஆண்டுகால ஆட்சி புதுமைப் பெண்களின் பொற்காலம்!
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற கவிமணியின் கூற்றினை மெய்ப்பித்து, பெண்மையைத் தேசத்தின் பேராற்றலாக உலகிற்கு உணர்த்தியவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். கடந்த 12 ஆண்டுகால அவர்தம் பொற்கால ஆட்சியில், 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், அடித்தட்டுப் பெண்களின் வாழ்வில் புதிய விடியலையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுக்களைப் புகையிலிருந்து பெண்களைக் காக்க 'உஜ்வாலா' சமையல் எரிவாயுவையும், தூரத்துத் தண்ணீர் சுமையைக் குறைக்க 'ஜல் ஜீவன்' திட்டத்தையும் வழங்கிப் பெண்மையைப் பாதுகாத்துள்ளார் நமது பிரதமர் அவர்கள். 'ஜன் தன்' கணக்குகள் வழி அவர்களைப் பொருளாதாரச் சுதந்திரம் பெறச் செய்து, 'லக்பதி திதி'களாக மாற்றி, கிராமப்புறப் பொருளாதாரத்தின் அச்சாணியாகப் பெண்மையைப் புது அவதாரம் எடுக்கச் செய்துள்ளார்.
இன்று, வான்வெளி முதல் எல்லையைக் காக்கும் ராணுவப் படைகளின் தலைமைப் பொறுப்புகள் வரை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நமது பெண் சக்தி சாதனை படைத்து வருகிறது. வளர்ந்த பாரதம் (Viksit Bharat) என்னும் உன்னத இலக்கை நோக்கி நாம் நடைபோடும் இவ்வேளையில், பெண்மையைப் போற்றி வளர்த்த நமது மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்டுகால சாதனைகளை நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்!
#12YearsOfNariShakti
தேசமே தெய்வம்" என்று பேசிவிட்டு, கட்சியில் பிளவையும் சுயநல அரசியலையும் புகுத்துபவர்களைக் கட்சித் தலைமையே பகிரங்கமாக எச்சரிக்கிறது.
உண்மையான உழைப்பிற்குத் தான் மதிப்பு,
துரோகத்திற்கு அல்ல!
#nitinnabin#BJP4IND
நாற்காலிகள் தான் வெறிச்சோடிக் கிடந்துச்சே தவிர, மக்கள் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட இல்லை. பில்டப் மட்டுமே உடம்பெல்லாம்... ஆனா பேக்ரவுண்ட்ல ஒண்ணுமே இல்லைங்கறது இன்னைக்கு திருவாரூர்ல நிரூபணம் ஆகிடுச்சு,,,,,,,💨🪑 1/2
@MSBalajiMSB#wetheleaders#Annamalai