@sunnewstamil முதலில் GMR நிறுவனம் வரும் அதன்பின் அவர்களிடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றும். GMR நிறுவனம் வசம் இருந்த மும்பை உள்ளிட்ட விமான நிலையங்கள் இப்படித்தான் கைமாறியது. அதானி என்றாலே யார் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்பது புரியும்.
@gautam_adani
ஆராய்ச்சி படிப்புக்கு சென்ற மாணவரை இப்படி எல்லாம் பேசுவது அறம் அல்ல. இந்தியாவின் முன் ஏர் தமிழ்நாடு. இதை எல்லாம் மனதில் வைத்து கருத்துக்களை, செய்திகளை பகிருங்கள். தமிழ்நாட்டின் கல்வி சூழலை கெடுக்காதீர்கள். 🙏
@polimernews
@sumanthraman கூடவே இருந்த ஒரு ஜோசியக்காரன் சரவணன் பவன் உரிமையாளரை அந்த ராசி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தால் இன்னும் மேலே செல்லலாம் என சொல்லியே தெருவில் இழுத்துவிட்ட கும்பல் அடையார் ஆனந்த பவன் குழுமத்தின் மீது பார்வையை திருப்பி இருக்கிறது. வயித்தெறிச்சல் பிடிச்சவனுங்க.
28 நாட்கள் நடந்த சட்டசபையில் 14399 கேள்விகளுக்கு நேரடியாக அளித்த பதில்கள் எண்ணிக்கை 23 மட்டுமே. இந்த இலட்சணத்தில் நிர்வாகம் செய்துகொண்டு பன்ச் டயலாக் பேசலாமா முதல்வர் @actorvijay.
@TVKVijayHQ@DMKITwing
தன்மையற்ற சைகையை முதல்வர் @actorvijay ஏன் செய்தார் என GenZ தலைமுறை ஆராயும். அப்போது @mkstalin உள்ளிட்ட தலைவர்கள் மிசாவில் அனுபவித்த கொடுமைகளையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளும்.
@Udhaystalin@DMKITwing
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
@vikatan ஆனந்த விகடன் T. ராஜேந்தர் நடித்த வீராசாமி பட விமர்சனத்தில் பரீட்சைக்கு மார்க் போடலாம் விசப்பரிட்சைக்கு மார்க் போடமுடியுமா என்று எழுதியது. அதுபோல எதிர்க்கட்சியை கதறவிடுவேன் என்று சொன்ன முதல்வர், நடிகர் @actorvijay சட்டசபையில் கத்தி, கதறிக்கொண்டிருந்தார்.
@leninbharathi1@skpkaruna லாரி தொழிலில் உள்ளவர் அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுகிறார் எனில் அது அந்த தொழில் மீதான அக்கறை. இதில் கண்டனம் என பேசுவது பொதுப்புத்தியில் செய்வது.
@VckBalaji@Kalaignarnews இஸ்லாமியர்கள் இருக்கும்வரை தான் ஒரு கட்சியாக வெளியே தெரியும், இல்லை என்றால் சென்னையை சுற்றி செயல்படும் சாதி மாஃபியா என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படும்.
@senthazalravi எதுவுமே தெரியாமல் இதை எல்லாம் தடுக்கவில்லை. தமிழ்நாட்டின் விவசாயம், கல்வி, தொழில் வளங்களை முடக்குவது தான் இந்த ஆட்சியை பின்னால் இருந்து இயக்குபவர்கள் நோக்கம். என்ன கேட்டாலும் உள்நோக்கம் மாறப்போவதில்லை.
// நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது //
தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்
மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அறிக்கை
கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை இணைய தளத்தில் பார்த்தேன். அதற்கான விளக்கமே இந்த அறிக்கை.
இந்த இரண்டு வழக்குகளுமே, கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் , தலைவர் தந்த ஒப்புதலால் தாக்கல் செய்யப்பட்டவை.
WP 34884/2026- தேர்தல் ஆணையத்தின் EVM-களை சரி பார்ப்பதற்க்கான வழிகாட்டு நடைமுறை - SOP உச்ச நீதிமன்ற உத்திரவிற்க்கு எதிரானதாக உள்ளதால் அதனை நீக்கறவு செய்ய வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டது. அது தனி நபருக்கான மனு அல்ல. இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வழக்கு. 2024 வழிகாட்டு நடைமுறை - SOP யை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.ஆனால் 2025 வழிகாட்டு நடைமுறை - SOP வந்து விட்டதால் அதனை எதிர்த்து மனு செய்யும் உரிமையுடன் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.
2024 ல் உச்ச நீதி மன்றம் EVM கருவிகளில் சந்தேகம் இருந்தால் 2 ஆம் அல்லது 3 ஆம் இடம் பெறும் வேட்பாளர்கள் 5% கருவிகளை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி EVM கருவிகளின் BURNT MEMORY ஐ சரி பார்க்கலாம் என உத்திரவிட்டது.
திராவிட முன்னேற்ற கழக சட்ட துறையின் சார்பில் நான் கழகத்தலைவரிடம் இந்த நிலையை சொல்லி, கொளத்தூர் தொகுதியில் EVM களை சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். தலைவரும் ஒப்புதல் தந்தார்.
29.07.2026-லிருந்து 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை அல்லது தலைவரின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி(Ballot Unit)-ஐ வாக்கு பதிவு இயந்திரத்தால் (Control Unit) அடையாளம் காண இயலவில்லை. ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக , நிரப்பபடாமல் இருந்தது.
தேர்தல் ஆணையம் இந்த பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி விளக்கங்களை தரவில்லை.
1. 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி தேர்தல் முடிவுகளுக்கு பின் 45 நாட்களில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
2. அதுவும் பிரிவு 100ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
3. யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய முடியாது.
4. வாக்கு இயந்திரங்களை ஏறக்குறைய 3 மாதங்களுக்கு பிறகே சரிபார்க்க ,தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போகச்செய்யும் வகையில் நடத்தியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும் என கழக சட்டத்துறை, தலைவரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. தலைவர் அவர்கள் முதலில் வேண்டாமென்று நினைத்தார். பின் இது குறித்து விளக்கங்களை கேட்டறிந்து ஒப்புதல் தந்தார்.
கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்கு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் மற்றும் VVPAT ல் உள்ள வாக்கு சீட்டுகளை சரி பார்க்க வேண்டும். இதனின் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே.வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது.
Article 329(b)ன் படி தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே தேர்தலை செல்லாது என்றும் வேறொரு வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும், ஏன் EVM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோதும் இது போன்ற நிகழ்வுகளை சட்டமியற்றுபவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
2024 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்க உரிமை தரப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்கள் முறையாக இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிமன்றங்களே தீர்ப்பளிக்க வேண்டும்.எனவே ஏற்கனவே நடந்த பரிசோதனையில் 30% சதவிகித இயந்திரங்கள் பழுதானவை என்றால் அனைத்து இயந்திரங்களையும் சோதித்தால் கழக தலைவர் அவர்களே வெற்றி பெறுவார் என்பதில் அய்யமில்லை. சட்டத்தில் இடமில்லை என்கிறது தேர்தல் ஆணையம், இதற்க்கான சட்டம் உருவாக்கப்படவில்லை அதனை ஆய்ந்து, நீதியை வழங்கிடத்தான் நீதிமன்றம் என்கிறோம் நாம்.
தமது தீர்ப்பில் உயர் நீதி மன்றம் இறுதியாக “ஏற்புடைமை (Maintanability) குறித்த மேற்கண்ட முடிவைக் கருதி, சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ, 05.08.2026 தேதியிட்ட எதிர்க்கப்பட்ட உத்தரவின் சரியான தன்மை குறித்தோ ஆராய வேண்டிய அவசியம் இல்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது; எனவே அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விதி 49-T மீறப்பட்டதாகக் கூறப்படுவது, VVPAT கருவிகளின் செயலிழப்பு, மற்றும் வாக்குச்சாவடி எண்.208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட, தகுதி சார்ந்த அனைத்து வாதங்களும், தேவைப்பட்டால் உரிய மன்றத்தின் முன் எடுத்துரைக்கப்படுவதற்காக அனுமதி தரப்படுகிறது. அதன்படி, ரிட் மனு ஏற்புடையதன்று எனத் தள்ளுபடி செய்யப்படுகிறது; சட்டப்படி தனக்குக் கிடைக்கக்கூடிய தீர்வை நாடுவதற்கு மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.
நீதிக் கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர் சட்டப்போரட்டமும் , போரட்டங்களுமே , இட ஒதுக்கீட்டை , அரசியல் அமைப்பு திருத்தமாக கொண்டு வந்தன. வாக்கு பதிவு இயந்திரங்களும் அப்படித்தான், நீதிமன்றம், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று சொன்னாலும்கூட வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின் அதனை சோதனை செய்யும் நடைமுறை, அந்த சோதனையில் இயந்திரங்கள் தவறாக இருந்தால் அதற்க்கான தீர்வு ஆகியவற்றிக்கான விடை கிடைக்க வேண்டும்.
இந்தியாவில் இது போன்ற நிலை ஏற்பட்டதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை. சட்டமும், நீதியும் நல்ல விடையினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆங்கில கருத்தொன்றுதான் நினைவுக்கு வருகிறது.
“I MAY BE WRONG, BUT I AM CLEAR”
கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் , வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே என்பதே , அந்த தெளிவு.
27 ஆகஸ்ட். இன்னிக்குத்தான் கடைசி நாள்.
முதல்வர் விஜய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இன்னிக்கு சென்னை ஹைகோர்ட்ல ஒரு மனு போட்டிருக்காங்க.
என்ன மனு தெரியுமா?
"எங்க மேல போட்டிருக்கிற தேர்தல் மனுக்களை விசாரிக்கவே வேண்டாம். தள்ளுபடி பண்ணிடுங்க."
"நாங்க தப்பு பண்ணலை, விசாரிங்க" ன்னு சொல்லலை. விசாரணையே வேண்டாம் ன்னு சொல்றாங்க. இந்த வித்தியாசம் ரொம்ப முக்கியம். த்ரெட் முழுக்க இதுதான் ஓடப்போகுது.
இது எப்படி இங்க வந்தது?
ரெண்டு நாள் முன்னாடி, 25 ஆகஸ்ட். நீதிபதி V. லக்ஷ்மிநாராயணன் முன்னாடி அவங்க வக்கீல்கள் மறுபடியும் அவகாசம் கேட்டாங்க.
காரணம் என்ன தெரியுமா? "Assembly session நடக்குது, கையெழுத்து வாங்க முடியலை."
கையெழுத்து.
ஒரே அரசு. ஒரே கட்சி. ஒரே கட்டிடம். முதல்வரும் அமைச்சரும் தினமும் ஒரே இடத்துல உட்காருறாங்க. கையெழுத்து மட்டும் கிடைக்கலையாம்.
நீதிபதி பதில் சொன்னார். LiveLaw அப்படியே பதிவு பண்ணியிருக்கு:
"I'm not bothered about the personalities. You people say that election cases are not being decided. But then you are asking time. Election petitions are to be disposed of within 6 months."
இந்த வரியை மறுபடி படிங்க. "தேர்தல் வழக்கே முடியல" ன்னு புலம்புறதும் நீங்கதான், அவகாசம் கேட்குறதும் நீங்கதான் ன்னு ஒரு நீதிபதி சொல்லியிருக்கார். அதுவும் ஒரு முதல்வர் தரப்புக்கு.
ரெண்டு வாரம் கேட்டாங்க. கோர்ட் ரெண்டே நாள் கொடுத்தது. தலா ₹50,000 அபராதம் போடுவேன்னு எச்சரிச்சது.
அபராத எச்சரிக்கை வந்த அப்புறம்தான் மனு வந்திருக்கு.
7 ஜூலைல notice போச்சு. இன்னிக்கு 27 ஆகஸ்ட்.
51 நாள்.
51 நாள், ஒரே ஒரு தள்ளுபடி மனு எழுத.
Current bill கட்டாம விட்டா 15 நாள்ல உங்க வீட்டுக்கு notice வரும். இவங்க 51 நாள் எடுத்திருக்காங்க. அதுவும் கோர்ட் ரெண்டு தடவை உட்கார வச்சு, அபராதம் காட்டி மிரட்டின பிறகு.
இதுல ஒரு பெரிய வேடிக்கை இருக்கு. affidavit-ல ₹105 கோடி வித்தியாசம். YMCA மைதானத்துல ஒரு கூட்டம். ஒரு தேசிய கமிஷனோட கடிதம். ஒவ்வொண்ணா பார்ப்போம்.