‘Best புதுச்சேரி’ என்றார் பிரதமர் மோடி, Worst புதுச்சேரியாகச் சீரழித்திருக்கிறார்கள்.
🎯 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதியைக் கூட வழங்காத NDA-வுக்குப் புதுச்சேரி மக்களின் வாக்கு இல்லை!
🎯 துணைநிலை ஆளுநரை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. கொடுக்கும் குடைச்சலால், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே, “ஆளை விடுங்க சாமி” என்ற நிலையில் இருக்கிறார். பதவியில் தொடர்வதற்காகப் புதுச்சேரியின் நலன்களை அடகுவைத்து விட்டார்.
🎯 ஏப்ரல் 9 – புதுச்சேரி மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, தங்கள் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் காப்பதற்கான வாக்கு!
#PuducherryWithDMK #VoteForDMK
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
❓ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
❓ இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
❓ கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
பாகுபலி படத்தில் சத்தியராஜை பார்த்து சொல்வது மாதிரி ஒரு டயலாக் வரும். “விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா” அப்படி ஒரு வசனம் இருக்கும். அதுபோல், துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்! இப்படி, தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்த பழனிசாமி பேசுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்?
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
#VoteForDMK
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்திக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK
"ஓரணியில் தமிழ்நாடு" - பயிற்சி முகாம் தொடக்கம்!
ஜூலை 1தேதி #ஓரணியில்_தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் @mkstalin அவர்கள்
தொடங்கி வைக்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் @DMKITwing சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி முகாம் இன்று தொடக்கம்! #DMKITWING
முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.
அது @The_Hindu நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
Israel’s strikes on Iran is a reckless act of aggression that risks igniting a wider war. Coupled with the continued bombardment of #Gaza and suffering of Palestinian civilians, this violent path must be condemned.
The world must push for restraint, justice, and meaningful diplomacy.
#NoMoreWars
வாழ்த்துகள் @VNRCollector 💐
கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு @Anbil_Mahesh, @tnschoolsedu அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்தபடி, 03.06.2025 வரையில் 209 பெண் காவல் ஆளிநர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது.
புரட்சிகள் செய்யப் புறப்பட்ட புதுமைப்பெண்களின் நலன் காத்திட - அவர்கள் மேன்மையுற #DravidianModel தொடர்ந்து செயலாற்றும்!
“காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி” எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது!
பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும்!
“முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக!” எனத் தஞ்சைத் தரணி ஆர்ப்பரிக்கத் தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து, வழிநெடுக வாழ்த்தி வரவேற்ற மக்களின் அன்பைப் பெற்றுக்கொண்டேன் #DravidianModel-இல் நன்றிக்கடன் செலுத்தும் நம்பிக்கையுடன்!
ஒரு திட்டம் தொடங்கப்படுவதைவிட அது முழுமையாக மக்களிடம் சென்று வெற்றிபெறுவதில்தான் மகிழ்ச்சி உள்ளது. நேற்றைய பயணத்தில் #முதல்வர்_மருந்தகம் குறித்து விசாரித்தேன்…