மேடைக்கு மேடை பொய் பேசுறது பத்தாதுன்னு, இப்போ விளையாட்டு வீராங்கனைகளையும் கூட்டிட்டு வந்து பொய் சொல்ல வைக்கிறீங்களா ஆதவ் அர்ஜுனன்? எப்பதான் பாஸ் திருந்துவீங்க?
கடந்த திமுக ஆட்சியிலேயே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை, எலிட் ஸ்கீம் மூலமா நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு, அவங்க போட்டிக்கு போறதுக்கு முன்னாடியே ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கு. சட்டமன்றத்திலேயே இதற்கான ஆதாரங்கள் இருக்கு.
இப்படி ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்களை, ஏதோ இந்த ஆட்சியில் தான் முதல்முறை நடப்பது போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுவது வெட்கக்கேடானது. இதற்கு இந்த DIPR வேற துணை போயிட்டு இருக்கு, மக்கள் ஒன்னும் ஏமாளிங்க இல்ல.
அடடே, என்னவொரு டைமிங்!
தவெக நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு என்று ஒரு வீடியோ பாடலை பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவிலும் இன்று வைரலாகும் வீடியோவிலும் மொபைல் போன், வெள்ளை நிற பவுடர், கார்டு, ரூபாய் நோட்டு என அனைத்தும் உள்ளது.
அடடா என்னவொரு ஒற்றுமை என்று மக்களே ஆச்சரியப்படுகின்றனர்!
தவெக மின்வெட்டுத்துறை அமைச்சருக்குக் கிடைத்த பல்பு!
தவெக ஆட்சியில் நடக்கும் தொடர் மின்வெட்டை மறைக்கவும், தங்களின் நிர்வாகத் திறமையின்மையைத் திமுக மீது பழிபோடவும் தவெகவின் மின்வெட்டுத்துறை அமைச்சர் அவசர அவசரமாக மின்சார வாரியம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால், தவெக வெளியிட்ட அந்த அறிக்கையே இப்போது அவர்களுக்கு Self Goal ஆக மாறி, முகத்தில் கரியைப் பூசியுள்ளது!
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான 2021-2026 திமுக ஆட்சியின் மிகச்சிறப்பான நிர்வாக ஆளுமைக்கு இந்தத் தரவுகளே சாட்சி,
2016-21 அதிமுக ஆட்சியில் வெறும் ரூ.3,20,140 ஆக இருந்த மின்வாரிய வருவாயை, 2021-26 திமுக ஆட்சி ரூ.4,97,996 ஆகப் பல மடங்கு உயர்த்திப் பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது!
அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் சரிந்து ரூ.58,534 ஆக இருந்த பற்றாக்குறையை, திராவிட மாடல் ஆட்சி தனது நிதி மேலாண்மையால் ரூ.34,447 ஆகக் குறைத்து மின்சாரத்துறையை வலுப்படுத்தியுள்ளது!
திமுகவின் மீது அபாண்டமாகப் பழிபோடலாம் என்று நினைத்து, திராவிட மாடல் அரசின் சிறப்பான நிர்வாகத் திறனையும், நிதி ஒழுக்கத்தையும் தங்கள் சொந்த அறிக்கை மூலமாகவே ஊருக்குப் பறைசாற்றிய தவெக அமைச்சரின் அறிவுக்கூர்மையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!
சாதியும் மதமும் மாபெரும் நஞ்சு என அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கூறியதற்கு காரணம் அது ஒரு மக்கள் திரளின் வெறுப்பரசியலுக்கு அடித்தளமிடும் என்ற ஒரு காரணம் மட்டுமே!
சாதிச் சான்றிதழை கிழித்துப்போட்டுவிட்டால் சாதி அழிந்துவிடும் என்று பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு இருக்கும் soft சங்கிகளின் வழியில் இந்த ரீல்ஸ் முன்னேற்றக் கழக அரசு செயல்படுகிறது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது!
இதுபோல வெளிப்படையாக சாதியை கண்டறிய வழிசெய்து நவீன தீண்டாமையை வளர்த்தெடுக்க வழிகளை எளிமைக்காக்கிவிடும் இந்த ID cardல் சாதியை குறிப்பிடும் நடவடிக்கை!
சீருடையில் ஒருமைத்தன்மை, கல்வியில் சமத்துவத்தை போற்றி பாதுகாக்கும் தமிழ் மண்ணின் வரலாற்றிலேயே இது பெரும் இழுக்கு!
குறள் எண்: 313
கலைஞர் உரை:
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
#திருக்குறள்
இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி அவர்கள்
Why is CM Vijay gifting Cabinet-Level Posts to a Non-Tamil Outsider?
The absolute disgrace of the TVK government is officially out!
CM Vijay is shamelessly handing over prestigious state representative posts to his movie producers, managers, and astrologers.
Look at the shocking contrast for Tamil Nadu’s Special Representative in New Delhi.
What qualification does this outsider have to represent 8 crore Tamils?
Zero administrative experience, zero public policy knowledge, and absolutely zero connection to our soil! Is Delhi a place to lobby for your movie distributions and real estate deals under a government seal?
Stop distributing public offices like audio launch passes, CM Saar!
Our state is not a film set to fulfill your personal corporate obligations!
இது சமூக அநீதி
சட்டமன்றத்தை ‘சத்த’மன்றமாக்கி, சமூக நீதி என்று ஹைடெசிபிளில் குரல் கொடுத்த முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் ஐ.டி. கார்டு வழங்கப்படும் என த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டில் இனி ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் சாதி அடையாளத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொள்ளப் போகும் அவலத்தை உருவாக்க நினைக்கிறது த.வெ.க. அரசு.
காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விதத் தடையுமின்றி, உரிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதனால்தான், இடஒதுக்கீடு அடிப்படையில் பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அது, கல்வி வாய்ப்பைப் பெறுவதற்காகத்தானே தவிர, கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதற்கான பெருமித அடையாளமல்ல.
ஒரு மாணவர் எந்தப் பள்ளியில் படிக்கிறார், அவர் பெயர் என்ன, எந்த வகுப்பில் படிக்கிறார், அவருக்கானத் தொடர்பு எண் என்ன, அவசரத் தேவைக்காக அவருடைய ரத்தவகை என்ன என்பன போன்றவைதான் ஐ.டி.கார்டில் இருக்க வேண்டும். இந்த மாணவன் இன்ன சாதி, அந்த மாணவன் இன்ன சாதி என்று கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ளும் போக்கு, மாணவ சமுதாயத்திடம் பிரிவினையையும் மோதலையும்தான் உண்டாக்கும். சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான எந்த ஒரு அடையாளமும் சமூக நீதிக்கு எதிரானது.
முதல்வர் விஜய் உத்தரவில் இதைச் செய்யப் போகிறோம் என்கிறார் அமைச்சர். இதற்கும் விஜய் வாய் திறக்க மாட்டார். சமூக நீதியின் தாய்மடியாகத் திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கானத் தளமாக மாற்றுவதுதான் மாற்றமா முதல்வரே?