ரஜினியோட ஆன்மிக அரசியல கண்மூடித்தனமா எதிர்த்து narrative செட் செய்து அதை கருவிலயே கொன்ற திமுகவுக்கு காலம் சொன்ன பதில் இது தான்
வினை விதைத்தவன் வினை
அறுப்பான் அதுவே நியதி
தலைவா ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்ல அரசன் நிம்மதியா தூங்க முடியாது சன்னியாசி சந்தோசமா வாழுறான்னு ஒரு கதைய சொல்லு
இந்த நாய்க பன்னிக்கு வெடி வச்ச மாதிரி கதறிட்டு கிடப்பானுக
Dear Honourable Vijay Sir, myself and your classmate Edwin, Living in Paris, studied with you in college, had a detailed friendly conversation recently.
Both of were amazed that you have so many "விஸ்வாச Taurus breed dogs" 🤣🤣🤣🤣🤣
அன்புள்ள அவை முன்னவருக்கு..
நாளை என்னுடைய பிறந்தநாள் என்பதால் நாளை ஒரு நாளும், அடுத்த இரண்டு நாளும் நான் அவையிலிருந்து விடுப்பு எடுத்து கொள்கிறேன்..
- இப்படிக்கு
இராவணன் மொவன்டா
ஒத்தையில் நிக்கிற எமன் டா 🥹
திரு.நரேந்திர மோடி அவர்களின் எழுச்சி என்பது பாரதம் அடுத்த நூற்றாண்டுகளில் செல்லப் போகும் செறிவு மிக்க பாதையை காட்டும் கலங்கரை விளக்கம்..வெறும் ஆட்சி மாற்றத்தை அவர் வழங்கவில்லை.பண்பாட்டு ரீதியாக உறைந்து போய் கிடந்த இந்த தேசத்தை தட்டியெழுப்பி இதை கலாச்சார தேசிய அரசாக மீட்டெடுத்துள்ளார்.இதை வேறு யாராலும் இவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியுமா என்பது சந்தேகமே.இந்த நவீன யுகத்தில் அவர் மீது கொட்டப்பட்ட வன்மத்தையும், வெறுப்பையும் எதிர்கொண்டு அவர் மக்களின் துணையோடு இதை சாதித்திருப்பது, உண்மையிலேயே அவரை "நரேந்திரன்" என்று காட்டுகிறது..
"இந்து தேசியம்" என்பது பாரதத்தின் தொன்மையான கலாச்சார அடையாளம்.ஆனால் அது உலகம் முழுக்க அழித்தொழிக்கப்பட்ட, வீழ்த்தப்பட்ட, நினைவில் இருந்து மறக்கடிக்கப்பட்ட பண்பாட்டிற்கெல்லாம் அடைக்கலம் தருகிற தாய்வீடு என்பதை நிலை நிறுத்தியவர்.மக்களின் மீது கருணை கொண்ட ஒரு தலைவனின் அரவணைப்பில் இந்த தேசம் வீறு நடைபோடுகிறது..
நேருவின் சாதனை முறியடிக்கப்பட்டது வெறும் நாட்களின் எண்ணிக்கையில் என்பது ஒரு விஷயமாக எனக்கில்லை.ஒருவேளை அது பாஜகவிற்கு மிக முக்கியமான அடையாள அரசியல்.காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தவர்கள் எல்லோருக்கும் ஒரு உந்து விசை.ஆனால் என்னைப் பொறுத்தவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு இராஜேந்திர சோழனைப் போல, குமாரகம்பண்ணர், கிருஷ்ணதேவராயர், வீரசிவாஜியைப் போல மாபெரும் சாதனைகளை பண்பாட்டு அடையாளத்துடன் பெரிதென படைக்க வந்த மாவீரர்..நான் நரேந்திர மோடியின் ஆட்சியைத் தருவேன் என்றே தெற்காசியா முழுமைக்கும் ஒரு உதாரணமாக அவர் மாறுகிற நூற்றாண்டுகளையும் வரலாறு எதிர்காலத்தில் பதிவு செய்யும்..
தமிழக பாஜகவின் உடனடி தேவை
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் சுவாரசியமானதுதான். ஆனால், சமீபகாலமாக தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் நடக்கும் கூத்துகளைப் பார்த்தால், நையாண்டி செய்ய ‘துக்ளக்’ பக்கங்கள் பத்தாது போலிருக்கிறது.
ஒருபுறம், கட்சியை விட்டு வெளியேறிய அண்ணாமலை தன் புதிய இயக்கத்தை ‘நான்கு கால் பாய்ச்சலில்’ அதிவேகமாக வளர்த்துக் கொண்டு ஓடுகிறார். மறுபுறம், தமிழக பாஜகவோ, ‘நாங்கள் நத்தைக்கு தம்பி’ என்று நிரூபிப்பது போல ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், அண்ணாமலையின் வேகத்திற்கு இணையாகக் கட்சியை வளர்க்க வழி தெரியாத இங்கிருக்கும் சில ‘அதிமேதாவிகள்’, அவருக்குப் பதில் சொல்கிறோம் பேர்வழி என்று அறிக்கை விட்டு, ஏற்கெனவே கொதிப்பில் இருக்கும் தொண்டர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும், நைனார் அவர்களும் அண்ணாமலைக்குக் கொடுக்கும் ‘பதிலடிகள்’ எப்படி இருக்கிறது தெரியுமா? வீட்டில் கூரை பிரிந்து மழை நீர் உள்ளே கொட்டிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டுக்காரன் ஏன் பந்தல் போடுகிறான் என்று சண்டை பிடிக்கும் கதையாக இருக்கிறது.
ஏற்கெனவே தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடற்ற நிலையைக் கண்டு வெறுத்துப் போய், “இந்தக் கட்சியில் இருந்தால் உருப்பட்ட மாதிரிதான்” என்று முகம் சுளித்துக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு, இவர்களின் பேச்சுகள் மேலும் கோபத்தையே வரவழைக்கின்றன.
அண்ணாமலை ஆரம்பித்த இயக்கத்தில் சேராமல், “தாய் தாய் இயக்கத்திலேயே இருப்போம்” என்று இன்னமும் அரை மனதோடு அடம் பிடிக்கும் தொண்டர்களைக் கூட, “நீ ஏன் இன்னும் இங்கிருக்காய்? ஓடிவிடு!” என்று விரட்டியடிப்பது போலத்தான் இவர்களின் பேச்சுகள் அமைந்திருக்கின்றன.
வேறு வழியின்றிப் போகும் ‘தேசிய-தெய்வீக’ தொண்டன்
தமிழகத்தில் ‘தேசியம்’ மற்றும் ‘தெய்வீகம்’ இரண்டையும் பேச வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியை விட்டால் வேறு நாதி இல்லை என்கிற யதார்த்த நிலைமை இன்னமும் நீடிக்கிறது. அதனால்தான், மோடியின் தலைமையை ஏற்று, சங்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உள்ளே வந்த தொண்டன், அண்ணாமலைக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ தன் சொந்த கட்சியான பாஜகவை விட்டு வெளியேறத் துடிப்பதில்லை. அப்படி நகர்ந்து போவதற்கு அவனுக்கு நெஞ்சம் பதறுகிறது.
ஆனால், அந்தத் தொண்டனைப் பதறாமல், நிம்மதியாக அண்ணாமலையின் ‘புதிய கூட்டுக்குள்’ போய் அமர வைப்பது எது தெரியுமா? தமிழக பாஜகவில் தங்களுக்கு மட்டுமே செயலாற்றிக் கொண்டு, கட்சிக்குச் செயல்படாமல் இருக்கும் தற்போதைய தலைமைகள்தான்!
தொண்டர்களின் தவிப்பைப் புரிந்து கொள்ளாமல், தங்களின் சுய லாபத்திற்காக மட்டுமே நாற்காலியைப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தலைவர்களால் நொந்து நூலாகிப்போன பிரபலங்கள் பலரும், இன்று அண்ணாமலை இயக்கத்தில் அரைகுறை மனதோடு, புத்தி சொல்வதைக் கேட்டு அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
(1)
நான் சொல்றது கேப்பீங்களா ன்னு எனக்கு தெர்ல...
But மனசுல பட்டத சொல்லலாம் ல ..🙄
அண்ணா க்கு ஆதரவு இருக்கு ன்னு சொல்றவங்க..எனக்கு bjp தான் ன்னு சொல்றவங்கள போய் திட்ட வேண்டிய அவசியம் என்ன..?
அதுவும் குறிப்பா கம்யூனிட்டி வெச்சு பேசுறது பாக்க கொஞ்சம் கூட நல்லா இல்ல..
உங்க எண்ணம் என்ன ன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க..?
இப்டி பொதுபடயா ஜாதி வெச்சு பேசுவதால் அவுங்க அண்ணா க்கு support பண்ண வந்த்ருவங்களா? என்ன?
ஆரம்பத்தில் இருந்து அண்ணா வை எதிர்பவங்க வர வாய்ப்பு இல்ல..
ஆனா சிலர் ஒரு குழப்பத்தில் இருப்பாங்க..ல?
இங்கேயா அங்கேயா ன்னு யோசனையில் இருப்பவங்க கூட உங்க பேச்சை பாத்தா அந்த பக்கம் போக தான் வாய்ப்பு...
அண்ணா க்கு மனதார சப்போர்ட் பண்றவங்க அதே community ல இருக்காங்க...நெறய பேர் இருக்காங்க அவுங்க கூட நொந்து அந்த பக்கம் போக தான் வைக்கும்..
இப்போ என்னோட family ல கேரளா ல நெறய பேர் இப்போவும் communist ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்றாங்க...
அதுக்காக பொதுபடையா என்னோட கம்யூனிட்டி சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தா எனக்கு அது வலிக்கும் தானே..🙄🙄
அது தப்பு ல?
எல்லா கம்யூனிட்டி லயும் dmk admk communist bjp ன்னு இருக்கத்தான் செய்றாங்க..
நண்பர்கள் தயவு செஞ்சு..
யாரையும் திட்டாதீங்க..
யாராவது argue பண்ணா உடனே abuse பண்னாதீங்க..
உங்க செயல்கள் பேச்சுக்கள் ரெண்டு பேரை இந்த பக்கம் வரவைக்குதோ இல்லயோ இங்க இருக்கும் ஒருத்தரை வெறுத்து அங்குட்டு போக வைப்பதா அமைந்தால் யாருக்கு நஷ்டம்?
இந்த பூனை சொன்னா யாரு கேப்பா..
ஆனா தயவு செஞ்சு நான் சொல்றத consider பண்ணுங்க..
யாரையும் Abuse பண்னாதீங்க..திட்டாதீங்க.. புடிகலையா கடந்து போங்க🙏
Well said. By birth I am a Brahmin, but I love & respect Annamalai IPS & Modiji Sir's equally. Mind is really confused. I am really confused now.
Already I have membership with BJP but I wish to support Annamalai's new party also.
நான் சொல்றது கேப்பீங்களா ன்னு எனக்கு தெர்ல...
But மனசுல பட்டத சொல்லலாம் ல ..🙄
அண்ணா க்கு ஆதரவு இருக்கு ன்னு சொல்றவங்க..எனக்கு bjp தான் ன்னு சொல்றவங்கள போய் திட்ட வேண்டிய அவசியம் என்ன..?
அதுவும் குறிப்பா கம்யூனிட்டி வெச்சு பேசுறது பாக்க கொஞ்சம் கூட நல்லா இல்ல..
உங்க எண்ணம் என்ன ன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க..?
இப்டி பொதுபடயா ஜாதி வெச்சு பேசுவதால் அவுங்க அண்ணா க்கு support பண்ண வந்த்ருவங்களா? என்ன?
ஆரம்பத்தில் இருந்து அண்ணா வை எதிர்பவங்க வர வாய்ப்பு இல்ல..
ஆனா சிலர் ஒரு குழப்பத்தில் இருப்பாங்க..ல?
இங்கேயா அங்கேயா ன்னு யோசனையில் இருப்பவங்க கூட உங்க பேச்சை பாத்தா அந்த பக்கம் போக தான் வாய்ப்பு...
அண்ணா க்கு மனதார சப்போர்ட் பண்றவங்க அதே community ல இருக்காங்க...நெறய பேர் இருக்காங்க அவுங்க கூட நொந்து அந்த பக்கம் போக தான் வைக்கும்..
இப்போ என்னோட family ல கேரளா ல நெறய பேர் இப்போவும் communist ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்றாங்க...
அதுக்காக பொதுபடையா என்னோட கம்யூனிட்டி சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தா எனக்கு அது வலிக்கும் தானே..🙄🙄
அது தப்பு ல?
எல்லா கம்யூனிட்டி லயும் dmk admk communist bjp ன்னு இருக்கத்தான் செய்றாங்க..
நண்பர்கள் தயவு செஞ்சு..
யாரையும் திட்டாதீங்க..
யாராவது argue பண்ணா உடனே abuse பண்னாதீங்க..
உங்க செயல்கள் பேச்சுக்கள் ரெண்டு பேரை இந்த பக்கம் வரவைக்குதோ இல்லயோ இங்க இருக்கும் ஒருத்தரை வெறுத்து அங்குட்டு போக வைப்பதா அமைந்தால் யாருக்கு நஷ்டம்?
இந்த பூனை சொன்னா யாரு கேப்பா..
ஆனா தயவு செஞ்சு நான் சொல்றத consider பண்ணுங்க..
யாரையும் Abuse பண்னாதீங்க..திட்டாதீங்க.. புடிகலையா கடந்து போங்க🙏
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
இந்த வார்த்தைகள் சொல்கின்றன, இறந்தவர் ஒரு கம்யூனிஸ்ட் என.
"ரஷ்யன் கல்சுரல் செண்டர், மாக்ஸ்முல்லர் பவன்"
கம்யூனிசம் என்பது பூமியைப்பிடித்த கேன்சர், உழைக்க விருப்பம் இல்லாத சோம்பேறிகளின் புகலிடம்.
With deep condolences, everything has its own place.
இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!
நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு. பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினியின் மறைவு.
இவை இரண்டையும் இந்தச் சமூகம் எப்படி அணுகியது என்பது பல பட்டவர்த்தனமான உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தார் போலப் படம் பிடித்துக் காட்டுகிறது;
எத்தனையெத்தனை வித உருக்கமான பதிவுகள் மறைந்த கலைஞன் சத்யேந்திரா குறித்து!
உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர், சினிமா அறிவு நிரம்பப் பெற்றவர்.
பன் மொழிப் புலமையாளர், பாசாங்குத்தனமற்ற நிஜமான மனிதன், சினிமாவையே உயிர்மூச்சாகக் கருதி வாழ்ந்த ஒரு ஏழைக் கலைஞன் என்பது தான் அவர் குறித்து பலரும் வெளியிட்ட பதிவுகளின் சாராம்சம்.
ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் 1988 தொடங்கி நானும் இவரை ஓரளவு அறிவேன்.
ரஷ்யன் கல்சுரல் செண்டர், மாக்ஸ்முல்லர் பவன், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கு, அமெரிக்க தூதரக நூலகம் ஆகிய இடங்களில் இவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானார்.
எல்லோரும் எழுதிக் குவித்து என்ன பயன்?
முக நூல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்ற அளவுக்கு பல பதிவுகள் வந்ததையடுத்து மெயின்ஸ்டீரீம் ஊடகங்களும் சத்யேந்திராவை பற்றி எழுதி தள்ளிவிட்டன.
ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் இயங்கிய ஒரு அறிவார்ந்த கலைஞனின் உடலை அடக்கம் செய்ய அந்தத் துறை சார்ந்த அமைப்புகளோ, தனி நபர்களோ யாரும் முன்வரவில்லை என்ற யதார்த்தம், சமூகத்தின் முகத்தில் பேயறைந்தார் போல பேரதிர்ச்சி தருகிறது.
பணம் இல்லாதவன் இறந்தால், அவன் பிணத்திற்கு என்ன மரியாதை? என்பது சத்யேந்திரா மரணத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டது.
நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம்!
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சுமார் ஒன்றே கால் லட்சம் கட்ட வேண்டும். அவரிடம் ஏது பணம் என்றார், சினிமா பத்திரிகையாளர் சரவணன்.
நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையென்றாலும், சத்யேந்திரா ஒரு நடிகர் என்பதும் சுமார் 150 படங்கள் வரை நடித்தவர் என்பதும் பொய்யாகிவிடுமா? என்ன?
ஆனால், சத்யேந்திராவை அறிவு ஜீவித்தனமான நடிகர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்றைக்கு பிரபல்மாக இருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்கள் சத்யேந்திராவிடம் மணிக் கணக்கில் உலக சினிமா குறித்து உரையாடி தகவல்கள் பெற்றுள்ளனர்.
அவ்வளவு ஏன்? நடிகர் சங்கத் தலைவர் நாசர், சத்யேந்திராவை மிக நன்றாக அறிவார்.
நாசருக்கு சத்யேந்திராவுடன் பல வருட பழக்கம் உள்ளது என்பது திரையுலகில் பலருக்கும் தெரியும். ஆனாலும் நாசர் ஒரு இரங்கல் அறிக்கை கூட தந்ததாக தெரியவில்லை.
பிரேமலதா ஒருவர் தான் சத்யேந்திரா மறைவுக்கு அஞ்சலி அறிக்கை தந்த ஒரே பிரலபமாகும்.
ஒரு அற்புதமான அனாதைக் கலைஞனை எடுத்து நடிகர் சங்கம் அடக்கம் செய்திருக்கக் கூடாதா..? என்ற ஆதங்கம் மனதை வாட்டுகிறது.
சத்யேந்திராவை அனாதைகளை அடக்கம் செய்யும் உதவும் கரங்கள் எடுத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை உருவானதை எப்படி புரிந்து கொள்வது?
இதோ நடிகர் அஜித்தின் தாயர் மறைவுக்கு போட்டி போட்டுக் கொண்டு திரையுலக அமைப்புகளும், பிரபலங்களும் வரத் தயார் ஆகிறார்கள் என்பதை அறிந்து அஜித் தன் மானேஜர் மூலம் யாரும் வர வேண்டாம் போனில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஸ்டிரிக்டாக சொல்லச் சொல்லி உள்ளார்.
தன் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே வந்தால் போதுமானது என்பது அவர் நிலைபாடு
எல்லா கட்சித்தலைவர்களும் இரங்கல் அறிக்கை தந்துள்ளனர். இந்த இரங்கலின் நோக்கம் ஒரு பிரபலத்தின் லட்சோப லட்ச ரசிகர்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெறுவது தான்
ஊடகங்களை அஜித் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் வாசலில் நின்று கொண்டு போவோர், வருவோரைக் காட்டி நேரலை செய்கின்றன
இந்த சினிமா உலகத்தின் போலித்தனமான அனுதாபங்கள் தனக்கு தேவையில்லை என உறுதியாக இப்படி ஒரு நிலைபாடு எடுக்கும் துணிச்சல் அஜித்தை தவிர யாருக்கும் வராது..என்று தான் தோன்றுகிறது.
அஜித்தின் தாயார் மோகினி தன் குடும்பத்திற்காக, தன் கணவர், தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எல்லா அம்மாக்களையும் போன்ற ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. இது தவிர அவரை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.
ஒரு பிரபல கதையில் ஒரு செல்வக்கான அதிகாரி வளர்க்கும் அவரது செல்ல நாய் இறந்து போனதற்கு அந்த ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தியதாம்.
அந்த அதிகாரி ஓய்வு பெற்ற அடுத்த நாளே இறந்து போனாராம். அப்போது எந்த ஒரு நாயும் கூட அந்த ஊரில் அவருக்கு அஞ்சலி செலுத்த போகவில்லையாம்.
இது தான் இன்றைய உலகின் யதார்த்தம் மாத்திரமல்ல, என்றைக்கும் மாறாத யதார்த்தம்.
அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம்.
சாவித்திரி கண்ணன்
நன்றி: அறம் இணைய இதழ்