செய்தியாளர்களைப் பார்த்தால் பயம், எதிர்கட்சிகள் பேசினால் பயம், அவர்களின் திட்டங்களின் பெயரைக் கேட்டால் பயம், தங்கள் கட்சி அமைச்சர்களின் சர்ச்கைகளால் பயமென பயத்திலேயே திரியும் த.வெ.க அரசு, தற்போது எதிர்கட்சியினர் வெளியே வந்தாலே பயத்தில் நடுங்க ஆரம்பித்துள்ளது.
இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமிகு @KanimozhiDMK எம்.பி.யை த.வெ.க அரசின் காவல்துறையினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்தநாள் முதல் பொய், பித்தலாட்டம், அராஜகம், களவாணித்தனம் செய்வதையும், அடக்குமுறைகளை ஏவிவிடுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு காலம் தக்க பாடத்தை புகட்டும்!
#WATCH | “திராவிட முன்னேற்றக் கழகம் இனி யாரோடும் கூட்டணி இல்லை” என அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேறு வழியில்லை.
- தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வலியுறுத்தல்!
#Arasa | #Tamilnadu | #Kalaignarseithigal
#WATCH | மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில் இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில், இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில், இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.
வேறு எங்கேயும் என்னைத் தேட வேண்டிய அவசியமில்லை. நான் கோட்டையில்தான் இருக்கிறேன்.
மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும்வரை, இந்த மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்.
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
#MKStalin | #Dmk | #Kalaignarseithigal
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு மீது மிகுந்த மதிப்பிருந்தது.
திமுக கூட்டணிக்குள் இருந்தபோது, அவர் ஊடக விவாதங்களில் அவ்வளவு அழகான வாதங்கள் புரிந்தார். திமுக ஆட்சிக்காக பல விவாதங்களில் எதிர் பொய்வாதங்களை நொறுக்கினார்.
அந்த நன்றிக் கடனைத்தான் உதயநிதி வன்னி அரசுக்கான பரப்புரையில் தீர்த்தார்.
தன் & தன் தலைவரின் வெற்றி கூட இரண்டாம்பட்சம்தான், ஆனால் வன்னி அரசு வெற்றி மிக அவசியம் என வெளிப்படையாகப் பேசினார். அந்தப் பேச்சில் எந்தப் பூச்சுமில்லை (காணொலியை மறுமொழிப் பெட்டியில் பாருங்கள்)
ஆ.ராசா ஓர் எதிர்வினையை உங்கள் மீது வைத்தார் எனில் பதிலுக்கு அதே ரீதியில் நீங்களும் வைக்கலாம். ஆனால் அப்படி அவரைப் போல பேசச் சொற்கள் இல்லாவிடில் புஸ்ஸியாரிடம் தமிழைக் கடன் கேட்டாவது வாங்கிப் பேசலாம்.
அதைவிடுத்து ஆ.ராசாவை மனம் பிறழ்ந்தவர் என்று கடுஞ்சொல்லை உதிர்க்கிறார் வன்னி அரசு.
கொட்டியச் சொற்களை ஒருபோதும் பொறுக்க முடியாது வன்னி அரசு சார்.
நாவினால் சுட்ட வடு மறையாது. அது உங்களைத்தான் வதைக்கும்.
ஒன்று தெரியுமா ?
ஏற்கனவே கலைஞர் மீது மாபெரும் அவதூறு ஒன்றை பப்ளிக்காக உதிர்த்த அற்பர் நீங்கள்.
விசிகவுக்கு என்று தனித்தொகுதிகள் இருக்க பொதுத் தொகுதி எதற்கு எனக் கலைஞர் கேட்டதாக பச்சைப் பொய்யை பல முறை புளுகி வந்தீர்கள் !
கடைசியில் நீங்கள் கூறுவது பொய், கலைஞர் அப்படி கேட்டதே இல்லை என்று உங்கள் மூக்கை உடைத்தவர் உங்கள் தலைவர் திருமாதான்.
மறப்போம் - மன்னிப்போம் என்று நாகரீக அரசியலின் அரசன் உங்களைப் பொறுத்து அணைத்தார்.
ஆனால் இன்று எங்களால் கிட்டிய அந்த அற்பப்பதவி, எங்கள் தகத்தாயச் சூரியனை எப்படி இழிவுபடுத்தி உங்களைப் பேசச் செய்கிறது பார்த்தீர்களா ?
அதென்ன உங்களால் என நீங்கள் கேட்கலாம்.
உங்களிடம் அறம் இருந்தால் ;
மனச்சாட்சி இருந்தால் ;
உங்கள் மூளையில் நேர்மை கொஞ்சமேனும் மீதமிருந்தால் ;
எங்கே சொல்லுங்கள் கேட்கிறோம். விசிக தொண்டர்கள் திமுக கூட்டணிக்கா வாக்களித்தனர் ?
முதலில் உங்கள் கட்சியில் தொண்டர்கள், இளைஞர்கள் இருந்தனரா ? இருக்கின்றனரா ??
தற்குறிகள் அதிகமாக உருவாகியதே உங்கள் கட்சியிலிருந்துதான் என்றான் நெட்டைக்காலன். உங்களிடம் எஞ்சியிருப்பது 20 பெருந்தலைகள் மட்டுமே என்றான்.
அது எவ்வளவு உண்மை தெரியுமா ?
நீங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுக்கிழைத்தது பச்சை துரோகம்.
இப்போது கொடுஞ் சொற்களையும் கொட்டுகிறீர்கள். கூடிய விரைவில் உங்களை உதிரும் ரோமமாய் அவர்கள் சுருட்டித் தூக்கி எறியத்தான் போகிறார்கள்.
இங்கு வந்து விடாதீர்கள் 🙏
இனி உங்களை மன்னிக்கவும் மாட்டோம், உங்கள் துரோகங்களை மறக்கவும் மாட்டோம் 😡
#விசிக
Raja Rajendran Tamil Nadu
இதைவிட புரியாதவனுக்கு புரிகிற மாதிரி அழகாக யாரால் சொல்ல முடியும் 🔥
"முஸ்லீம்களை விட உங்களுக்கு தான் தலைவர் M. K. Stalin அதிக உரிமை கொடுத்தார்.. ஸ்டாலின் கொடுத்ததை மறந்துட்டீங்களா?"