தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.
நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?
பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன.
அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி.
அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும்.
ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப்பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.
மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
#CMJosephVijay
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த நீங்க @AjithaAgnel14 கீதாஜீவனோடு இணைஞ்சில்ல அரசியல் பன்னிருக்கனும் ஏன் திருச்செந்தூர்ல அனிதாட்ட தஞ்சம் அடைஞ்சிங்கனு தெரியும் எவ்ளோ கைமாறுச்சுன்னும் தெரியும்…
நீங்க பன்ன Atrocity க்கு பனையூர் வாசலுக்கே விட்ருக்க கூடாது
வாய கிளராமல் இருப்பதே நல்லது🙏🏻
தூத்துக்குடி தொகுதி கழக உடன்பிறப்புகள் கவனத்திற்கு!
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்களின் தகுதியையோ, அவர்கள் கடந்த காலங்களில் செய்த மக்கள் பணிகளையோ பார்க்காமல், சரியான அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களித்ததால் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேலும் நம் தொகுதியில் அதிமுகவும், நாம் தமிழர் கட்சியும் டெபாசிட் இழந்துள்ளன. இதுதான் நம் தோல்விக்கு காரணம். ஆனால் ஒரு சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டாதவர்களை தேர்தல் பணி செய்யவில்லை என்று குறை கூறி பொய்ச் செய்தியை பரப்பி வருகின்றனர். அவற்றை யாரும் நம்ப வேண்டாம். நமது நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியை நன்றாக செய்தீர்கள். நன்றிகள்.
திமுக தோல்வியைக் கண்டு துவளும் இயக்கம் அல்ல. எனவே நமது உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். இனியும் எத்தனையோ வாய்ப்புகள் நமக்காக காத்திருக்கின்றன. அதை உணர்ந்து நமக்குள் எந்த பிரிவினைகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு நின்று வரும் காலங்களில் கழகம் வெற்றி வாகை சூட கட்சிப் பணி செய்வோம்!
நன்றி!
P. கீதாஜீவன் https://t.co/LjyTDzlLWo., B.Ed.,
மாவட்டக் கழக செயலாளர் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக
இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் போது மாற்று அரசியல் கட்சித் தலைவர்கள் வீடுகளிலும் மிகப்பெரிய வாக்குகளை தலைவர் விஜய் பெற்றுள்ளார் என்பது நிருபணமாகிறது😳💯
@TVKVijayHQ ❤️
கடலூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் முன்னிலையில் சுமார் 4,200 கிலோ குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு...
#Cuddalore | #Drugs | #Police | #PolimerNews
தமிழகத்திற்கு இன்று ஒரு மகத்தான நாள். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையும் தகர்த்தி, இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் என் அன்பு சகோதரர், மாண்புமிகு திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையோடு உங்கள் ஆட்சி தொடங்கட்டும்.🙏🏽
@TVKVijayHQ
தான் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வரலாறு படைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு அண்ணன் விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் ❤️மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சிறப்பான ஆட்சியை வழங்க இதயம் கனிந்த வாழ்த்துகள் @TVKVijayHQ 🙏🏻❤️
Congratulations to my friend, actor izhaya thazhapathy , then thazhapathy , now the youngest leader, Our Honourable Chief Minister Of TamilNadu @TVKVijayHQ sir 🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐Happy seeing U sitting on THE CHAIR 🥰🥰🥰🥰🥰sjs