“அருவா வச்சுட்டு சுத்தறவன் மட்டும் தான் ஜாதி வெறி பிடிச்சவன் இல்ல... ஜாதி-ய சின்ன சின்னதா தூக்கி பிடிக்கறவன் கூட ஜாதி வெறியன்தான்.” இல்லாத ஒரு விஷயத்துக்கு ஒரு சக மனுசன அடிக்கறது கொல்றத விட ஒரு கொடுமை வேற இல்ல.
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
Heartiest congratulations to Thulasimathi Murugesan on her historic achievement of becoming the first Indian para-badminton player to win six medals across two consecutive international tournaments.
Winning three Gold, one Silver and two Bronze medals is a remarkable feat that reflects her extraordinary talent, determination and hard work.
Her outstanding performance at the British & Irish Para Badminton International has once again brought immense pride to our nation.
I wish her continued success in the years ahead and many more laurels for India.
#Parabadminton @Thulasimathi11
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் @mkstalin அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்.
பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும். #KBhagyaraj
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
வைகோ ஒரு உண்மையின் அடையாளம்
எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என முதல்வர் விஜய் என்னிடம் சொன்னார் ஆனால் நான் முடியாது என்று மறுத்தேன் ஆனால் நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் அவர்களை வெற்றி பெற வைப்பது எனது கடமை என முதல்வர் விஜய் என்னிடம் கூறினார் வைகோ ஒப்புதல் வாக்குமூலம்
So முதல்வர் விஜய் தான் மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எழுத்து வருகிறார் அவர்களாக யாரும் வரவில்லை?
மிக அருமையான மாற்று அரசியல்!
இந்த விளக்கத்தை ஏத்துக்கலாம் .. ஆனா கேள்வியெல்லாம் ..
சொந்த மகள் உடம்பு சரியில்லாத போது அவ்வளவு கூட்டத்துக்கு யாராவது கூட்டிட்டு போவாங்களா ? .. சரி அங்க போய் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசரம் .. அம்மா கையிலும் தண்ணியும் இல்ல ஸ்பூனும் இல்ல .. அதுவும் சரி .. ஆனா மாத்திரையை பொடி பண்ணி கிரெடிட் கார்டுல ஸ்கோரிங் பண்ணி மிக்ஸ் பண்றது இது தான் முதல் தடவை .. அது கூட ஓகு ஏதோ அவசரத்துக்கு மாத்திரை கலக்க யூஸ் பண்ணிட்டாரு .. முக்கியமான கேள்வி எதுக்கு 500 ரூ நோட்டை எடுத்து வச்சி அதை ஸ்கோர் பண்ணனும் ?? .. கடைசியா ஒரு கேள்வி .. அவரு மாத்திரை நொறுக்கும் போது எதுக்கு அந்தக்கா பேக் வச்சு மறைச்சிருக்காங்க .. எந்த போலீஸ் வந்தா என்ன @sarath0828 அமைச்சரே
எல்லாத்துக்கும் மேல விளக்க வீடியோவுல எதுக்கு குழந்தையோட வரணும் ..
சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்து தவெக நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல் நிலையம் பள்ளிக்கூடங்கள் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தவெக வினர் தொடர்ந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று
திருவொற்றியூர் தவெக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில்
பெண் நிர்வாகிகள் அமர்ந்து வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்துக் கொண்டனர்
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் யார்? என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பம் !!
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர்.
பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
இந்த தவெக லைக்ஸ் பொறுக்கி நிர்வாகி @VasuTvkTenkasi .. இப்படி திமுகவை பற்றியும் திமுக தலைவர்கள் பற்றியும் ஒட்டுமொத்தமா அவதூறு பரப்பிட்டு போறா இதை அந்த தொகுதியில் இருக்கும் எந்த திமுக வழக்கறிஞர்கள் அணி வழக்கு போடாதா ..
எவ்வளவு நாட்களுக்கு பதில் நாம் சொல்லிட்டு இருக்கறது @DMKLegalWing .. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் @saravofcl அண்ணா . @PWilsonDMK@TRBRajaa@Udhaystalin@DMKITwing .
இவ ஏற்கனவே கரூர் சம்பவத்துல வதந்தி பரப்பி கேஸ் வாங்குனா இப்ப டாக்டர் மாதிரி போலியா ஆய்வு பண்றேன்னு அரசு மருத்துவமனைக்கு போய் விமர்சனம் ஆச்சு .. இப்ப இந்த மாதிரி அவதூறு ..