திமுக ஒரு அரசியல் கட்சி
திராவிடர் கழகம் ஒரு மக்கள் இயக்கம்
திராவிடர் கழகம் முற்றிலும் செயலிழந்து விட்டது.
பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். போல திமுகவுக்கு செயல்பட வேண்டிய திராவிடர் கழகம் இப்போது செயல்பாட்டில் இல்லை.
விளைவு அரசியல் இயக்கமாக செயல்பட வேண்டிய திமுக மக்கள் இயக்கமாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. அதனால் நாலா பக்கத்தில் இருந்தும் தாக்குதலை எதிர்கொள்கிறது.
திராவிடர் கழகம் செய்ய வேண்டிய பணிகளையும் திமுகவே சுமப்பதால் ஏற்பட்ட விளைவு.
வீரமணி ஒதுங்கி கொண்டு இளைஞர்கள் கையில் திராவிடர் கழகத்தை ஒப்படைக்க வேண்டும்.
என் சாய்ஸ் மதிவதனி..
மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை உச்சி முகர்ந்து பாராடுவோம்!
*************
"பின்னடைவை நாம் சந்தித்துள்ளோம்"
"நாம் அப்டேட் ஆகணும்"
"நமது சிந்தனையில்,செயல்பாட்டில்,நடைமுறையில் மாற்றம் தேவை"
"நாம் பரிணாம வளர்ச்சிக்கு தயாராக வேண்டும்"
"அடுத்த 100 ஆண்டுகள் திமுக வலிமையாக இருப்பதற்கான வேலைகளை செய்ய ஆரம்பிப்போம்"
"அனைவரும் தங்களது ஆலோசனைகளை எனக்கு சொல்லுங்க"
*******************************
இவை நேற்று மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள்!
முதலில் எதைவும் மூடி மறைக்காமல் நாம் பின்னடைவை சந்தித்துள்ளோம் என எந்த ஈகோவும் இல்லாமல் ஒத்துக்கொள்ள ஒரு உச்சபட்ச நேர்மை வேண்டும்!
நான் பல முறை சொன்னதுண்டு,,"போர்க்களத்தில் நிற்பவன் முதலில் ஆயுதத் தளவாடங்களில் போதுமான ஆயுதங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியதும்,எதிரியை வீழ்த்த சரியாக வியூகம் அமைத்துள்ளோமா என்பதை உறுதி செய்வதும் மிக மிக அத்யாவிசியம் என்று",,,
அப்படி ஒரு மீள் ஆய்விற்கு மக்கள் முதல்வர் வந்திருப்பதற்கு உள்ளபடியே மனமார உச்சி முகர்ந்து பாராடுகிறோம்,வாழ்த்துகிறோம்!
இப்படி ஒரு மீளாய்விற்கு இயக்கங்களும் வர வேண்டும் என்று தான் பல,பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்!