மொத எனக்கு மட்டும்தான் இந்த state மேல, மக்கள் மேல அக்கறை இருக்கு, மத்தவன் யாராலையும் எதுவும் பண்ண முடியாதுன்ற god complexல இருந்து வெளிய வாங்கடா.. You lost the election for a reason. இப்ப மண்ணவாரி தூத்தறதால எதுவும் மாற போறது இல்ல.
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?
நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்!
சமீபகாலமாக திரு. கோபிநாத்தின் (நீயா நானா புகழ்) அறச்சீற்றம், சங்கிகளுக்கு எரிச்சலை தருகிறது.!
80, 90களில் துக்ளக், தி ஹிண்டு ஆண்டு விழாக்களிலும், தொலைக்காட்சி பட்டிமன்றம், மேடைப்பேச்சுகளிலும் கோபிநாத் போன்று அறச்சீற்றம் கொண்டவர்கள் இருந்திருந்தால்...
தமிழ்நாட்டு இளைஞர்கள் சரியான அரசியல் புரிதலை கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்.
நெல்லை கண்ணன்களும், சிவக்குமார்களும், தமிழருவி மணியண்களும், சோ ராமசாமிகளும் தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல் புரிந்துகொள்ள விடாமல் செய்து விட்டதன் விளைவே...
தமிழ்நாட்டு இளைஞர்கள் விஜயகாந்த், சீமான், அண்ணாமலை, விஜய் அரசியலை நம்பி பின் செல்கின்றனர்.!
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.
மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு @AshwiniVaishnaw அவர்கள், நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.
அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, @BJP4TamilNadu சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்.
#ReverseGearDMK