திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று அரசு உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
#Gasleak #Labours
ಸುಳ್ಳುಸುದ್ದಿ ಸ್ರಷ್ಟಿಸುವುದರಲ್ಲಿ ಕಾರ್ಯನಿರತರಾದ ಮಾರಿಕೊಂಡವರು . ಪಾಪ ತುಂಬಾ ನೋವಾಗಿರಬೇಕು …😂😂😂 Sold out fellow’s..Cooking up Fake news and spreading them.. Must have been badly hurt 😂😂😂.. But I am happy I have kept them busy #justasking .
பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றைத் தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றைத் துளிக்கூட மாற்ற முடியாது!
#DravidianModel அரசின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
“நான் முதல்வன்” திட்டத்திற்கான பெயராக சுமார் ஐந்து விருப்பங்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் “நான் முதல்வன்” என்ற பெயர் இடம்பெறவில்லை. முழுத் திட்ட வடிவமைப்பையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர், “ஒவ்வொரு மாணவரும், இளைஞரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதனால், ‘முதல்வன்’ என்ற சொல் இடம்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ என்று பெயரிட்டால் என்ன?” என்று பரிந்துரைத்தார். அப்பெயர் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் தலைநிமிர வைத்தது.
இந்த உணர்வுகள் எல்லாம் “முதலமைச்சர்தான் ஆக வேண்டும்” எனும் அஜெண்டாவோடு மட்டுமே வந்தவர்களுக்கு தெரியப் போவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் உணரப் போவதில்லை!
அதேபோல், “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரை ஒரு கல்லூரி நிகழ்வில் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் முன்னிலையில் வாக்களித்துச் சூட்டியவர்கள் மாணவிகள்!
வரலாறாக நிலைத்து நிற்கப்போகும் #DravidianModel அரசின் சாதனைத் திட்டங்களின் பெயர்களை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய ஆட்சியாளர்கள் “நான் முதல்வன்” திட்டத்தைப்போல இன்னும் பல திட்டங்களுக்கு பெயர்களை நிச்சயம் மாற்றுவார்கள். அதற்கு காரணமாக “மக்களுக்கு புரியவில்லை“ என்கிற ரீதியில் மட்டம் தட்டிப்பேசும் கதைகளையும் கூட அருமையாக அவிழ்த்துவிடுவார்கள். நாமும் நம்புவதற்கு தயாராக இருப்போம் 😂.
ஆனால், மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம்!
#Naan_Mudhalvan
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு. சில நேரம் சில கட்சிகளில் இருந்து கொள்கை முரண்பாடு மற்றும் சில கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி இன்னொரு கட்சியில் இணைவது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் சமீப காலமாக சனிக்கிழமை தோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் MP-MLA க்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் பனையூர் பங்களா கேட் (Gate) முன் நிற்பதை பார்த்தால் ஜவுளி கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போன்று தெரிகிறது.
பனையூர் பங்களா கேட் திறந்ததும் ,புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து கொண்டு ஓடும் ரசிகர்களைப் போல் சென்றாலும் அங்கு கட்சித் தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ ஒரு சிலர் கொடுக்கும் கட்சித்துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர்.
தொண்டனின் நன்மைகளிலும் தீமைகளிலும் இயக்க தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால் கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர்கள் இறந்ததை திரும்பி கூட பார்க்காத , ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்த்தால் "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது.
நம்முடைய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் #திராவிட_மாடல் அரசின் மூலம் அன்றைய முதலமைச்சர் - எங்களுடைய கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுமார் 80 முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தினோம்.
அவற்றில் ஏ.ஐ தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை மாணவர்களிடையே வளர்க்க “TN SPARK திட்டம்”, உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் நம்முடைய அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்டம் தோறும் “மாதிரிப் பள்ளிகள் திட்டம்”, அதேபோல ஒன்றிய அளவில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க “வெற்றிப்பள்ளிகள் திட்டம்” ஆகிவையும் முக்கியமானவை. இந்த மூன்று திட்டங்களும் மாணவச் செல்வங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து வருகின்றன.
அத்தகைய தாக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள இந்தியாவின் முன்னணி Think Tank அமைப்பான SKOCH அறக்கட்டளை, GOLD, SIlver ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று திட்டங்களுக்கும் SKOCH 2026 என்ற விருதினை வழங்கி இருக்கிறது. அதற்காக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான Blue Print என்று சொல்லத்தக்க அளவில் திராவிட மாடல் அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் எங்களுடைய தலைவர் அவர்கள். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் அவற்றையெல்லாம் முறையாக பின்பற்றி - செயல்படுத்தினாலே தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மிகச்சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க முடியும்.
அதற்கு மாறாக, பள்ளிகளுக்குள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அனுப்பி, வகுப்பறைக்குள் ரீல்ஸ் எடுப்பதையும், கட்சிப்பெயரையும், முதலமைச்சர் பெயரையும் சொல்லி முழக்கமிடச் செய்வதையும் அறவே தவிர்க்க வேண்டும். அது ஆசிரியப் பெருமக்களுக்கு தர்மசங்கடத்தையும், மாணவர்களிடையே கவனச் சிதறலையும் தான் உருவாக்குகிறதே தவிர, அவர்களின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டுமே தவிர சமூகத்தை பின்னோக்கி இழுப்பதாக இருக்கக்கூடாது.
பத்திரிகைச் செய்தி
18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @SDPofIndia கட்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:
சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!
எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் திரு. எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் திரு. @nellai_mubarak அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் @sdpitnhq கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், மனம் இளைப்பாற ஒரு மரத்தடி நிழலில் உங்களின் நினைவுகளுடனே அமர்கிறேன்.
காலை இளஞ்சூரியனைப் போல மாறாத புன்சிரிப்புடன் எச்சூழலிலும் மலர்ந்திருக்கும் உங்கள் முகத்தை நினைத்துவிட்டு, மீண்டும் தொடங்குகிறேன் எனது பயணத்தை!
தலைவராக, ஆசானாக, தோழனாக என்றும் என்னுடன் பயணிக்கும் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்.
பத்திரிகைச் செய்தி
இன்று (20-06-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை – பல்லாவரத்தில் நடைபெற்ற, திரு. N. ஆனந்தன் அவர்களின் மகன் A. திருமலை (எ) திலீப் - M. வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி,
மற்றும் அரும்பாக்கத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் திரு. M. ஜீவானந்தம் அவர்களின் மகன் J. ரூபேஷ் – V. சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.