பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்���ி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள���ன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் ��னுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசிய���்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் ���ூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது ��க்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்த��த்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் ச���ன்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
118 MLA ஆதரவு கடிதத்தோடு விஜய் முதல்வராக பதவி ஏற்றதும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்... ஆனால் கூடுதலாக 4 முதல் 5 MLA ஆதரவை ஏற்படுத்திக் கொள்வது தான் சாதூரியம் இல்லை என்றால்
பிரச்சனை :
1)ஒரு MLA விலை போனால் கூட ஆட்சி விழும்.
2)கூட்டணி கட்சி MLA விலகினாலும் இதுவே நிலை.
3)MLA அதற்குள்ளா தப்பி ஓட வாய்ப்புண்டு.
இது தவிர ஆட்சி அமைந்த பின்
1)MLA இறந்தால் ஆட்சி பெரும்பான்மை விழும்.
2)MLA பலர் குற்றப்பின்னணிகளை மறைத்துள்ளனர் அவர்கள் யாராவது தகுதி நீக்கம் செய்தால் ஆட்சி கவிழும்..
இப்படி தினமும் ஆட்சி எப்போது வேண்டும��ன்றாலும் கவிழும் என்ற வாய்ப்பு இருக்கும் ஒரு மைனாரிட்டி அரசை காப்பாற்றவே தினமும் போராட வேண்டி வரும் என்ற நிலையை வைத்துக் கொள்ளாமல் கூடுதலாக 4,5 MLA ஆதரவை ஏற்படுத்துக் கொள்வது அவசியம். ஆனால் கூடுதலாக யார் வருவார் என்பது தான் செய்தி...
எனவே பிரமலதா அவர்களையும் கூப்பிடுங்க,, நிச்சயம் வருவார்...
நன்செய் இடையாறு என்.எம்.மாயாண்டிக் கண்டர் மறைவுக்கு இரங்கல்.
நாமக்கல் மாவட்டம், நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான என்.எம்.மாயாண்டிக் கண்டர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் தம்மை ��ணைத்துக் கொண்டு பணியாற்றிய மாயாண்டிக் கண்டர், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர். கட்சியைக் கடந்து நாமக்கல் மாவட்டத்தில் உழவர்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். இராஜவாய்க்கால் கடை மடை விவசாயிகள் நலனை உறுதி செய்யவும், நன்செய் இடையாறுக்கு 235 கன அடி தண்ணீர் கிடைக்கவும், வாய்கால் ரீ மாடலிங் கொண்டு வரவும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைத் திரட்டி போராடியவர். என் மீது அன்பு கொண்டவர். கடந்த ஆண்டு நன்செய் இடையாறு சென்ற போது அவரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வந்தேன்.
நன்செய் இடையாறு என்.எம்.மாயாண்டிக் கண்டர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவுக்கு இரங்கல்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் தொகுதியின் முன்னாள் பாமக சட்டப்பேரவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான பெ.கண்ணையன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே இரு அமைப்புகளின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர் பெ.கண்ணையன் ஆவார். வன்னியர் இட ஒதுக்கீடு கோரி 1987&ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உள்பட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக போராடி பல முறை சிறை சென்றவர். வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று மிகவும் திறம்பட செயலாற்றிய பெருமைக்குரியவர்.
2006&ஆம் ஆண்டு தாரமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணையன் அவர்கள், அத்தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும், சமூகநீதிக்காகவும் அவையில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
ஆன்ம���கத்தில் ஈடுபாடு கொண்ட பெ.கண்ணையன் அவர்கள், சம்பு முனிவர் நடத்திய யாகத்திலிருந்து வீர வன்னிய மகராஜா அவதாரம் எடுத்த பெருநாளான பங்குனி உத்திரத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர். என் மீது மாறாத அன்பும், பற்றும் கொண்டு இருந்தவர். அவரை சாமி என்று தான் நான் அன்புடன் அழைப்பேன். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பெ.கண்ணையன் இருந்தார். சில மாதங்களுக்கு முன் நான் ச���லம் சென்றிருந்த போது என்னை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எனக்கும் நீண்டகாலம் துணையாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பெ.கண்ணையன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உ��்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி அருகே சந்து மதுக்கடைகளை சூறையாடிய
பெண்கள்: திமுக ஆட்சியில் சட்டவிரோத மது வணிகம்
தலைவிரித்தாடுவதன் மிக மோசமான சான்று!
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த போடூர் என்ற கிராமத்தில் 4 இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ���ந்து மதுக்கடைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து சூறையாடியுள்ளனர். சட்டவிரோதமாக மது வணிகம் செய்து வந்த கோவிந்தன் என்பவர் பெண்களிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். எந்த ஒரு சிக்கலுக்கும் மக்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது விரும்பத்தக்க தீர்வு அல்ல என்றாலும், அப்படி ஒரு சூழலுக்கு அந்த கிராம மக்களைத் தள்ளியது தமிழகத்தை ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த திமுக தான்.
போடூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் 4 சந்து கடைகளும் இப்போது புதிதாக முளைத்தவை அல்ல. அவை கடந்த ஐந்தாண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றன. அவற்றை அகற்ற வேண்டும் என்று அங்குள்ள மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். போடூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தருமபுரி மாவட்டம் முழுவதும் இதே போன்ற சந்துக் கடைகள் 24 மணி நேரமும் ��ெயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு எதிராக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சந்துக்கடைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் குரல் எழுப்பியுள்ளார். ஆனால், அவற்றை மூடுவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சில பெண்களை பணம் கொடுத்து அழைத்து வந்து 7 கிராமங்களில் அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தச் செய்த கீழ்த்தரமான அரசியலைத் தான் திமுக செய்தது.
தமிழ்நாடு முழுவதும் 4787 டாஸ்மாக் கடைகள் சட்டப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றன என்றால், சட்டவிரோதமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிக்கப்படுவது ஒரு புறம் என்றால், இன்னொருபுறம் இந்த சந்துக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவை வசூலிக்கப்படாமல் ஏய்க்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக ஊழல் செய்��ப்படுகிறது. இதற்கு எதிராக பாமக பலமுறை போராடியும் மது வணிகத்தையே முதல் கொள்கையாகக் கொண்ட திமுக அரசு சந்துக்கடைகளுக்கு ஆதரவாகவே இப்போது வரை செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டவிரோத மது வணிகம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கான மிக மோசமான சான்று தான் போடூர் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வை மது வணிகத்திற்கு எதிரான மக்களின் கொந்தளிப்பாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, குற்றமாகப் பா��்க்கக் கூடாது; இதற்காக சம்பந்தப்பட்ட கிராம பெண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மாறாக, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத சந்துக் கடைகளை மூடுவதற்கு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை:
ஆட்சியே முடிவுக்கு வரும் நிலையிலும் மக்களை
நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ விடாத திமுக அரசு!
கரூர் மாவட்டம் சாலைப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்த தாயார் அம்மாள் என்பவரின் கை, கால்களைக் கட்டி படுகொலை செய்த மர்ம ஆட்கள், அவர் அணிந்திரு��்த தோடு, மூக்குத்தி ஆகிய நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நகைக்காக மூதாட்டியைக் கூட இரக்கமின்றி படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நகைக்காக மூதாட்டியை கொடூரமாக கொலை செய்தவர் ஒருவரா அல்லது ஒரு கும்பலா? என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக வெள்ளியணை காவல்நிலைய காவலர்கள் வழக்குப�� பதிவு செய்து விசாரித்து வரும் போதிலும் எந்தத் துப்பும் துலங்கவில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. இந்த ஒற்றைக் காரணத்திற்காகத் தான் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்கள��� தண்டித்துள்ளனர். ஆனால், மழை விட்டும் தூவானம் விடாத கதையாக திமுக ஆட்சியை அகற்றுவதற்கான தீர்ப்பு எழுதப்பட்ட பிறகும், திமுக ஆட்சியின் தீமைகளான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை அட்டகாசம் ஆகியவை தொடர்கின்றன.
சாலைப்பட்டி கிராமத்தில் மூதாட்டியை படுகொலை செய்த��� நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியிருக்கும் ஒரு வாரத்திலாவது கொலை, கொள்ளைகள் நடக்காமல் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்!
தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்��ீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் தில்லியில் நாளை மறுநாள் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அள��த்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவது குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு மேகதாது அணை குறித்து காவிரி மேல��ண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையி��் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019-ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டது. எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு ச��ய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பிவிட்டது.
இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு திறம்பட நடத்தாததால்,மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ளக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு சிக்கல் எழுப்பும் வாய்ப்புள்ளது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக முடிவெடுக்கப்படுவதைத் தவிர்க்க நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்த���ன் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்; ஒருவேளை கூட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாதது என்றால், அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற��ன்.
#Mekedatu
உளவுத்துறை Report...
தங்களுக்கு பெரிதளவில் சாதகமாக இருக்க���ம் என்று எதிர்பார்த்த தலித், கிறிஸ்தவர்கள் & இசுலாமியர்கள் வாக்குகள் 80% வரவில்லை...
டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாக்கும் 90% வரவில்லை...
செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பிய முயற்சியும் தோல்வி....
கருணாநிதி சந்தித்ததை விட மோசமான தோல்வியை சந்திக்க தயாராகும் ஸ்டாலின்...
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?
அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் ��ேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்... அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்... அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா.
கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க...’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவே��்பைப் பெற்றது. அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை.
முதலமைச்சரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம்.... அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவும் படிக்கிறார்கள்.
நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி கலெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே.
தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெ��ும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மே��ும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே?
மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட��டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்கள். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும். @CMOTamilnadu