@narendramodi Good News: Yes Ji. Tamil Nadu decided to bid farewell to the corrupt DMK Government. 💥
Bad News: It has also decided to bid farewell to Adimai ADMK and its alliances. 🤡
It's Kolathur...
It's Monday Afternoon...
It's a DMK First Family bastion...
It's Chief Minister's constituency...
@TVKVijayHQ is not knocking it but breaking it 🔥🔥
மக்களே இன்னிக்கு உங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சிருக்கும்
தலைவர் வெளியே வந்தா மக்களோட ஆரவாரம் வரவேற்பு இதெல்லாம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் நமக்கு சாதகமா திரும்பிடும் என்ற பயத்தில் தான் SOP பர்மிஷன் கொடுக்காமல் தடுத்து நிறுத்துனது.
பாருங்க நம்ம தலைவருக்கு முறையான பாதுகாப்பே இல்லை.
பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.
சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
@TNelectionsCEO
தேர்தல் ஆணையம் நேற்று;
100 பேருக்குதான் அனுமதி, சரி!
ரோடு ஷோ பன்ன கூடாது, சரி!
கரெக்ட் டைம் ஸ்பாட்டுக்கு வந்திரனும், சரி!
வண்டி பின்னாடி போககூடாது, சரி!
இன்று: தேர்தல் ஆணையம் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ எங்க இருந்துடா இவ்ளோ கூட்டம் வருது?😤😤😤
அதான் தலைவர் விஜய் 🔥🔥🔥🔥
#tvkfortn
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!