இன்று காலை 11.00 மணியளவில் , கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமாகமான பெருந்தலைவர் பவனில், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 135வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு :
வாக்கு செலுத்தும் நாள் : 23-04-2026
வாக்கு எண்ணிக்கை : 04-05-2026
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026
வேட்புமனுத் தாக்கல் நிறைவு : 06-04-2026
வேட்புமனு பரிசீலனை : 07-04-2026
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : 09-04-2026
ஒடிசாவில் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரத்தை தவிர்க்க ஒடிசா மாநிலத்தின் 8 MLA களை காங்கிரஸ் கட்சி #AICC தேசிய செயலாளரும் ஒடிசா மாநிலத்தின் மேலிட பொறுப்பாளருமான உயர்திரு @MayuraSJ பொறுப்பில் கர்நாடகவிற்கு மாற்றியுள்ளது
#MayuraJayakumar
மேற்கத்திய நாடுகளின் போரினால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய பாசிச மோடி அரசை கண்டித்து இன்று கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு உள்ள BSNL ஆபீஸ் அருகில் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள்
மேற்கத்திய நாடுகளின் போரினால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய பாசிச மோடி அரசை கண்டித்து இன்று கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு உள்ள BSNL ஆபீஸ் அருகில் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
#Coimbatore#Congress
தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது. நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் . 2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, “திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்” என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.
அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.
அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.
திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%
ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%
2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%
2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்.
2014 இல் தமிழ் நாட்டில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 👇
A false, malicious narrative is being spread to malign Congress & DMK — this is nothing but a vicious propaganda campaign, aimed at poisoning public discourse.
A police case has already been filed against this guy @GopinadhMN for his baseless tweet. Justice must be served — the perpetrators of this misinformation must be held fully accountable.
This is not about politics — it’s about the truth, integrity in public life, and protecting democracy from lies.
#KarurTragedy #Congress #FightPropaganda
“வாக்கு திருடனே, பதவி விலகு”... 🔥🔥🔥
பிரதமர் மோடி சபையில் நுழைந்தவுடன், எதிர்க்கட்சிகள் “வாக்கு திருடனே, பதவி விலகு” என்ற கோஷங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்...🔥
#VoteChori