Tibetan monks discovered a point on the inner forearm, when pressed for 60s before sleep increases melatonin by up to 40%.
It has been in Tibetan medical texts for over 1000 years.
Western sleep medicine never acknowledged it exists.
It needs no supplement. No prescription. 🪡
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்? 🪑⚠️
உங்கள் உடல் நலனைப் பாதிக்கும், நீங்கள் அறியாத சில முக்கிய உண்மைகள்:
🩸 இரத்த ஓட்டம் குறைகிறது: இதனால் சோர்வு மற்றும் இரத்த உறைவு அபாயம் ஏற்படலாம்.
🧠 மூளை மந்தமாகிறது: மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் குறைவதால் கவனம் சிதறுகிறது.
🦴 முதுகுத்தண்டு பாதிப்பு: இடுப்பு இறுக்கமடைந்து, முதுகுத்தண்டில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
🔥 ஆற்றல் இழப்பு: கலோரி எரிப்பு குறைந்து, மெட்டபாலிசம் மந்தமாகிறது.
💪 தசை பலவீனம்: கால்களின் தசைகள் வலிமையை இழக்கின்றன.
தீர்வு என்ன? 💡
🚶♂️ ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை 2-3 நிமிடங்கள் எழுந்து நடங்கள்.
🧘♂️ உடலை நீட்டிக்கும் பயிற்சிகளை (Stretching) செய்யுங்கள்.
🪑 சரியான நிலையில் நிமிர்ந்து உட்காருங்கள்.
💧 நிறைய தண்ணீர் குடியுங்கள்.
சிறு பழக்கங்கள், பெரிய ஆரோக்கியத்தைத் தரும்! இன்று முதலே அதிகம் அசையத் தொடங்குங்கள்! ✨
#HealthTips #HealthyLifestyle #HealthAwareness #TamilHealthTips #FitnessTamil
🌍💧 டிராகோ (Draco) நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள அதிசய நீர் உலகம் – TOI-1452 b!
பூமியிலிருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள TOI-1452 b என்ற வெளிக்கோள் (Exoplanet), வானியல் ஆராய்ச்சியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த "சூப்பர்-பூமி" (Super-Earth) கோள், NASA-வின் TESS செயற்கைக்கோள் மற்றும் SPIRou Spectropolarimeter போன்ற தரை அடிப்படையிலான கருவிகளின் உதவியுடன் கண்டறியப்பட்டது. இது ஒரு சிவப்பு குறுங்கோள் (Red Dwarf Star) சுற்றி, இரட்டை நட்சத்திர அமைப்பில் சுழல்கிறது.
🔹 இந்த கோள், பூமியை விட சுமார் 70% பெரிய விட்டமும், 5 மடங்கு அதிக நிறையும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
🔹 விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சரியப்படுத்துவது இதன் அடர்த்தி (Density) ஆகும். இது முழுக்க பாறை மற்றும் இரும்பால் ஆன பூமி போன்ற கோளாகவும் இல்லை; அதே நேரத்தில் வாயுக் கோளாகவும் இல்லை.
🔹 கணினி மாதிரிகள் காட்டுவதாவது, இந்த கோளின் மொத்த நிறையில் சுமார் 30% வரை நீர் இருக்கலாம்!
🔹 இது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கேனிமீட் (Ganymede) மற்றும் என்சலடஸ் (Enceladus) போன்ற பனிப்பாறை நிலவுகளின் அமைப்பை ஒத்திருந்தாலும், மிகப் பெரிய அளவில் திரவ நீர் நிறைந்த உலகமாக இருக்கக்கூடும்.
🌊 பூமியின் கடல்களின் சராசரி ஆழம் வெறும் 3.7 கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் TOI-1452 b-இல், உலகம் முழுவதையும் மூடியிருக்கும் பெருங்கடல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் ஆழம் வரை நீளக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
🔭 இந்த கோளின் உண்மையான அமைப்பை உறுதிப்படுத்தவும், அது நீர் உலகமா அல்லது வாயு வளிமண்டலத்துடன் கூடிய பாறைக் கோளா என்பதை கண்டறியவும், James Webb Space Telescope (JWST) மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது.
📷 படம் விளக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
#Space #Exoplanet #Science #Astronomy #JamesWebbTelescope
ரூ.1000 கேஸ் கதை முடிந்தது.. இனி எத்தனால் அடுப்பு.. சிலிண்டருக்கு மாற்றாக எத்தனால் கேஸ்.. இந்திய அரசு அதிரடி!
(LPG) சிலிண்டர்களின் விலை நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக கம்மியான விலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எத்தனால் அடிப்படையிலான சமையல் அடுப்பு தொழில்நுட்பம் (Ethanol Stove Technology) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எத்தனால் சமையல் அடுப்பு தொழில்நுட்பம்: பொதுவாக வாகனங்களுக்கான எரிபொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட எத்தனால், இப்போது சமையலறைக்குள்ளும் நுழைந்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தில், எத்தனால் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டும் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்டு அடுப்புக்கான எரிபொருளாக மாற்றப்படுகிறது.
இது வழக்கமான எல்பிஜி சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது மற்றும் குறைந்த செலவுடையது என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மாற்றாக இந்த எத்தனால் அடுப்புகள் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட உள்ளது.
எத்தனால் நன்மைகள்: மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புகளுடன் ஒப்பிடும்போது, இதில் உட்புற காற்று மாசுபாடு (Indoor Air Pollution) மிக மிகக் குறைவு. எத்தனால் என்பது கரும்பு, சோளம் மற்றும் விவசாய கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆல்கஹால் சார்ந்த உயிரி எரிபொருள் (Biofuel) ஆக இருப்பதால், தேவை அதிகரிக்கும் போது இந்திய விவசாயிகளின் வருமானம் உயரும்.
வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில், இது பொதுமக்களின் சமையல் செலவை கணிசமாக குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி "இந்த புதிய எத்தனால் சமையல் அடுப்பு முற்றிலும் உள்நாட்டிலேயே (Indigenous) உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.
இது வீட்டு உபயோக சமையல் செலவை குறைப்பதோடு, தூய்மையான எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும். இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 87 சதவீத இறக்குமதி செய்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படுகிறது. எத்தனால் பயன்பாட்டை சமையலறைகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்று விளக்கினார்.
எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக இது மாறுமா? இந்தியாவில் தற்போது எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் என்பது மிக வலுவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. மானியங்கள் மற்றும் நாடு தழுவிய விநியோக கட்டமைப்பு மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சிலிண்டர்கள் எளிதாக சென்றடைகன்றன. ஆகவே, அதற்கு மாற்றாக எத்தனால் அடுப்புகளை கொண்டு வர சவால்கள் அதிகமாகும்.
முதலாவதாக, சமையல் பயன்பாட்டிற்கு தேவையான எத்தனாலை தடையின்றி வழங்குவதற்கான பிரத்யேக விநியோகச் சங்கிலி (Supply Chain) உருவாக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, இதன் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் மலிவு விலை குறித்து நுகர்வோர் மத்தியில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே, இருக்கும் கேஸ் இணைப்புடன் ஒருகிணைக்க வேண்டும்.
ஆகவே, இண்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே நுகர்வோர்களுக்கு இந்த எத்தனால் அடுப்பு தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். இது வணிக ரீதியாக முழு வெற்றியடையும் பட்சத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமையலறைகளில் விரிவாக்கம் செய்ய மானியங்கள் வழங்க வேண்டும். இந்திய அரசு ஏற்கனவே பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை (Ethanol Blending Programme) தீவிரப்படுத்தி உள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் 1.5 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு, 2025 ஆம் ஆண்டில் 20 சதவீதத்தை எட்டியது.
இப்போது வாகனங்களைத் தாண்டி, பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் மற்றும் இந்த எத்தனால் அடுப்புகள் வரையில் வந்துவிட்டது. இந்தியாவின் எரிசக்தி தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய இந்திய அரசு வேகம் காட்டி வருகிறது. ஆகவே, படிப்படியாக எத்தானல் அடுப்பு தொழில்நுட்பம் இந்தியாவின் ஒவ்வொரு சமையலறை உள்ளும் செல்ல வாய்ப்புள்ளது
👉 வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.
👉 உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!
👉 #முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......
👉 கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......
👉 பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......
👉 பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......
👉 பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....
👉 நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....
👉 இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....
நல்ல பதிவுகளை பகிர்வோம்....
#fblifestyle #tamilfoods
இனி மின்கட்டண அபராதம் கிடையாது - 'EB Auto Pay' திட்டத்தை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்! எப்படிப் பயன்படுத்துவது?
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது மாதாந்திர அல்லது இருமாத மின் பயன்பாட்டுக் கட்டணங்களை உரியக் காலக்கெெடுவிற்குள் செலுத்தத் தவறும் போது, மின்சார வாரியம் சார்பில் குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
பல நேரங்களில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாகப் பொதுமக்கள் இந்த அபராதத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின்கட்டணம் தானாகவே கணக்கழிக்கப்படும் புதிய ஆன்லைன் கட்டண முறையை மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய சேவைக்கு "EB Auto Pay" (தானியங்கி மின் கட்டணச் செலுத்துகை) என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். நுகர்வோர்கள் முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://t.co/1mPAaCifzP என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள "EB Auto Pay" என்ற புதிய விருப்பத்தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
அதனுள் சென்றதும் நுகர்வோர் தங்களது நுகர்வோர் மின் இணைப்பு எண் , தங்களது செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ விவரங்களைப் பதிவு செய்து இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த "EB Auto Pay" திட்டத்தில் நுகர்வோர் ஒருமுறை தங்களது விவரங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்துவிட்டால், அதன் பிறகு வரும் மாதங்களில் மின் ஊழியர்களால் வீடுகளில் மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்ட 10-ஆவது நாளில், அதற்கான கட்டணத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்துகொள்ளப்படும்.
கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு மின் வாரியம் சார்பில் குறுஞ்செய்தி மூலம் கட்டண விபரங்கள் நினைவூட்டலாக அனுப்பப்படும். இந்த புதிய டிஜிட்டல் முறையின் மூலம் பொதுமக்கள் மின்கட்டணத்தை நேரடி மையங்களுக்குச் சென்றோ அல்லது ஆன்லைனில் தனியாகவோ செலுத்த வேண்டிய அலைச்சல்கள் இனி முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், காலதாமதத்திற்கான மின்கட்டண அபராதத்தையும் 100 சதவீதம் தவிர்க்க முடியும் என மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்