🏤பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற இந்த அரசின் அறிவிப்பை எதிர்த்து மீனவ கிராம மக்கள் அவசரக் கூட்டம் கூட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இடத்தில் மிகப்பெரிய அரசுக் கட்டடம் அமைவதால் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே பாதிப்பு ஏற்படும்!
🚌புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள பகுதியில் ஏறக்குறைய 30000 மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயில்கிறார்கள். குறுகலான சாலை வசதிகள் உள்ள இடம் என்பதால் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு உள்ளதா? அவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் செல்வார்களா?
🌊அரசுத் தகவலின் அடிப்படையில் இன்னும் 40 ஆண்டுகளுக்குள் அப்பகுதியில் கடல் நீர் சூழும் அபாயம் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் 50 ஆண்டுகளுக்குக் கூட இக்கட்டிடம் நிலைக்காது என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள்.
☑️மீனவர்கள் பூர்வீகமாக வாழும் பகுதி! அவர்கள் படகுகளை நிறுத்த, மீன்களை உலர்த்த எவ்விதமான தடைகளும் வராது என அரசு உறுதி அளிக்குமா?
2004ஆம் ஆண்டு சுனாமி வந்த இடம்.
🏯Coastal Regulation Zone(CRZ) கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் Zone 2க்குள் இப்பகுதி வருகிறது. இங்கே 20000 சதுர அடியில் கட்டிடம் கட்டுவதே ஆபத்தானது.
கஜானா காலி என்று சொல்லிவிட்டு இவ்வளவு கோடியில் இது தேவையா? அதுவும் விஜய் வீடு அருகில்! அவருக்காக கட்டுகிறாரா?
தலைமைச் செயலகத்துக்காகவே கட்டப்பட்ட கட்டடத்தின் இன்றைய நிலை என்ன?
🏥ஓமந்தூரார் மருத்துவமனையில் எத்தனை Floor பயன்பாட்டில் உள்ளது?
🫧பயன்பாட்டில் இல்லாத பகுதிகள் சுகாதாரமாக பாதுகாக்கப்படுகின்றனவா? சில ஆண்டுகளுக்கு முன்னர் அது பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாக மாறி இருந்தது. பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
✨பெரும்பாலான இடம் அங்கே பயன்பாடில்லாமல் இருக்கிறது. அவ்விடத்தை தலைமைச் செயலகமாக பயன்படுத்த வேண்டும். மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக பட்டினப்பாக்கத்திற்கு மாறாக வேறு இடத்தை, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் தேர்வு செய்ய வேண்டும்.
மதுரையில் 16 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணிக்கிறான். அவன் உடல் குளத்தில் மிதக்கிறது… இது ஆணவப் படுகொலை எனக் குற்றம்சாட்டும் சிறுவனின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்களை செய்து வருகின்றனர்… அப்படி போராடும் ஒரு சகோதரிதான் காவல்துறையின் கால்களுக்குள் கிடக்கிறார்.. மனசாட்சி உள்ளோரை இது உலுக்கும்
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும்,
இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். #Periyar #Anna
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.
வாழ்க அண்ணாவின் புகழ்!
#PerarignarAnna
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின் திருமணத்தை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
இல்வாழ்வில் இணைந்துள்ள இணையர், தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும் - தமிழ்நாடும் போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் – உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@durai944@Anbil_Mahesh@TRBRajaa@Murasoli_tnj@KannaduraiDMK@peraiashok #PalanivelDMK @ilaiyadmk
"தொட மாட்டேன் தொடவிட மாட்டேன் தொட்டவங்கள விட மாட்டேன்" என்று பஞ்ச் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே எப்போது தொடப்போகிறீர் இந்த அமைச்சரை?
#ஊழல்_தவெக
திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @GrahambellDMK அவர்களின் சகோதரர் மகள் திருமிகு. T.பிரிய வதனா சகாயம் - C. கோகுலகண்ணன் இணையரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @AvudaiappanDMK , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மாலை ராஜா, முன்னாள் கயத்தாறு ஒன்றியச் சேர்மன் திரு. மாணிக்கராஜா உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் கட்டியுள்ள புதிய இல்லத்தை இன்று திறந்து வைத்தோம்.
புதிய இல்லத்தில் அவர்களின் வாழ்வு மென்மேலும் செழித்தோங்க வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh@KannaduraiDMK
#PalanivelDMK
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்துக்குச் சொந்தக்காரரான ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாள்.
பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் திகழ்ந்த அப்பெருந்தீரரின் புகழ் அழியாது மக்கள் மனங்களில் வாழும்!
தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் அவர்களே கூறி வருவதால், எங்களுடைய கழகத் தலைவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாகனங்களைப் பெறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம்
22-08-2026
தீர்மானங்கள்
தலைமைச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம் 3:
நகர்ப்புறங்களில் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது மாநகரம் - நகரம் - பேரூர்க் கழகம் என்று இயங்கி வருகின்றன. மாநகர - நகர மற்றும் பேரூர்க் கழகக் கட்டமைப்புகளின் வலிமை மிக்க தூணாக விளங்குபவை வட்டக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும். அதுமட்டுமின்றி, மாநகர - நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது
50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல..
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளோடு எழுந்த திராவிடச் சித்தாந்தத்தின் விளைநிலமும் கூட.
உழைக்கும் மக்களின் வியர்வையில் பூத்த பெருநகரமாம் சென்னைக்கு இன்று 387 வயது.
அனைவருக்கும் வந்தாரை வாழவைக்கும் “இனிய சென்னை தின" வாழ்த்துகள் 💐💐💐
#chennai #hbdchennai
"போராளி ஓய்வதில்லை"
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, முதலமைச்சர் என தான் ஆளுகை செலுத்திய அனைத்துத் துறைகளிலும் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடிய போராளி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு புகழுரையாற்றினோம்.
சென்னை(கி) மாவட்டக் கழகத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தில் கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.
த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.
இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.