நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற “நம்ம குமரி தூய்மையான” குமரி நிகழ்வை நமது தலைமை சேவகர் திரு.கே.அண்ணாமலை அவர்கள் தொடங்கி வைத்து தன்னார்வலர்களோடு இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டார்.
பெருந்திரளாக கலந்து கொண்டு நமது தூய்மை இயக்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
வாருங்கள்! சுத்தமான சூழலை உருவாக்குவோம்! தூய்மையான தமிழகம் உருவாக்க ஒன்றிணைவோம்!
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
குலசேகரப்பட்டினத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு கொடியை ஏற்றி மரக்கன்றுகள் நட்ட அண்ணாமலை அண்ணாவுக்கு அந்த பகுதி பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு .
நமது இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பழக்கத்திற்கு எதிராக, ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரில் இருந்து, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் வரை, 135 கிலோமீட்டர் தொலைவு, விழிப்புணர்வு நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சகோதரர் திரு. அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வெறும் நடைபயணம் அல்ல; லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை காக்கும், சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு. வெயில், களைப்பு என அனைத்துத் தடைகளையும் கடந்து, "போதை இல்லாத தமிழகம்" என்ற உயரிய இலக்கை, மக்களிடம் கொண்டு சென்ற சகோதரர் திரு. அன்பரசு அவர்களின் இந்த முயற்சி அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
நமது சமூகம் போதையிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மற்றும் பொறுப்புள்ள சமூகமாக உருவாக, நாம் அனைவரும் உறுதியேற்போம். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்.
கடல் தாண்டியும் எங்கள் தலைவர் @annamalai_k அவர்களின் புகழ் ஓங்குகிறது
மாறுவோம் மாற்றுவோம்
என்ற மாபெரும் லட்சியத்துடன்
We The Leaders இயக்கத்தில் இணைந்து பயணிப்போம்