சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை. - #மேதகு#பிரபாகரன் ❤️
ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு தேசத்தை என்று அடைகிறதோ, அன்று தான் முழுமையான விடுதலை அடையும்.
தமிழர்களின் தாகம் தனித்தமிழ்த் தாயகம்
வாழ்க #தமிழ்
வளர்க #தமிழர்நாடு
Why on earth were TVK MLAs clapping while Minister Aadhav Arjuna was discussing the horrific sexual abuse of a two-year-old girl?
They seemed to have no clue about the gravity of the allegations the minister was making. People should have enough common sense to know when to applaud and when to stay quiet.
The assembly is not a cinema hall. It's a place for serious business. This is why it's important to elect the right people to office.
I really appreciate the speaker for handling the situation in a sensible manner.
ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத���தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகம��?
What Bro? @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டுக்குள் உள் நுழைவு அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கான நேரமும் கட்டாயமும் வந்துவிட்டதாக கருதுகிறேன். வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்படி சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு அந்த அனுமதி அளிக்கப்படுகிறதோ அதேபோல தமிழ்நாடு உள்ளிட்ட அதை விரும்பக் கூடிய அத்தனை மாநிலங்களுக்கும் அதனை வழங்கி உள் நுழைவு அனுமதிச்சீட்டை பெறுவது கட்டாயம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
பாரதிராஜா
இயக்குநர் இமயம் மட்டுமல்ல
தமிழர் உரிமைப் போராளியும் ஆவார்!
===========================================
பெ. மணியரசன், த��ைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===========================================
தமிழ்த் திரை உலகத்தைத் தமிழர் மரபோடு இணைத்துப் புதுமைகள் செய்து, புதுத்திருப்பம் உண்டாக்கியவர் தமிழ்த் தாயின் இனிய மகனாகிய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள்! உறவோடு – உரிமையோடு, “என் இனிய தமிழ் மக்களே” என்று அவர் விளித்துப் பேசுவது செவியில் இனிக்கும்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று (10.06.2026) காலை காலாமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். வயது மூப்பின் முடிவுதான் என்றாலும் மனம் ஆறுதல் கொள்ள மறுக்கிறது.
தமிழ்த் திரைத்துறையை தமிழ்நாடு திரைத்துறை என்று கூடச் சொல்ல முடியாது; தென்னிந்திய திரைத்துறை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற நிலை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. அண்டை அயல் மாநிலங்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது – இன்றும் பறக்கிறது.
இத்திரைத் துறையில்தான் தமிழர் மரபு வாழ்வு – தமிழ் மண் சார்ந்த கதைகள் – சித்தரிப்புகள் – கலை வடிவங்கள் என்று தமிழ்ப் புரட்சி செய்தவர்.
இயக்குநர் பாரதிராஜா திரைத்துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயர்நிலை விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றவர்! இவருடன் இசை இமயம் இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து என்ற மூன்று தனித்திறன் ஆளுமைகளும் தமிழ்த்திரையுலகை தமிழர் மரபு நோக்கி – தமிழர் வாழ்வியல் நோக்கித் திருப்பினர்.
தமிழ்நாட்டின் மண்வாசனையோடு திரைப்படங்கள் எடுத்திட பாரதிராஜாவின் கலைவாரிசுகளாக பல இளம�� இயக்குநர்கள் உருவானார்கள்!
கலைத்துறையோடு ஒதுங்கி கொண்டவர் அல்லர் பாரதிராஜா! தமிழ் ஈழவிடுதலை ஆதரவு, ஏழு தமிழர் உயிர்காப்பு, காவிரி உரிமை மீட்பு எனக் களப் போராட்டங்களிலும் பங்கேற்றவர் பாரதிராஜா!
காவிரி உரிமை மீட்புக்காக – இயக்குநர் பாரதிராஜா ஒருங்கிணைப்பில் போராட்டங்கள் நடத்திய அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. நானும் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும் அவற்றில் கலந்து கொ���்டோம்.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பை செயல்படுத்தித் தராத இந்திய அரசைக் கண்ட���த்து எமது காவிரி உரிமை மீட்புக்குழுவும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மறியல் செய்து போராடிக் கைதானோம். இயக்குநர் களஞ்சியம் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபபட்டார் மற்றும் சில இளைஞர்களும் காவல் துறையினரால் தாக்கப்பட்னர். அப்போராட்டத்தில் பாரதிராஜா, சீமான், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ராம் உட்பட கைதானார்கள் நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் அதில் கைதானோம்.
அடுத்து காவிரி உரிமைக்காக மீனம் பாக்கம் வானூர்தி நிலையத்தில் தலைமை அமைச்சர் மோடிக்குக் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தி இயக்குநர் பாரதிராஜா அவர்களுடன் நாங்களும் கைதானோம்.
பின்னர் – கல்லணையில் பார��ிராஜா அவர்களுடன் நாங்கள் இணைந்து கூட்டம் நடத்தி – காவிரி உரிமை மீட்பைக் கோரினோம்.
தமிழீழ இனப்படுகொலையைக் கண்டித்து பாரதிராஜா தலைமயில் இராமேசுவரத்தில் திரைத்துறையினர் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதில்தான் சீமானும் அமீரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தமிழ்த்திரைத் துறையில் மட்டுமல்ல – தமிழர் உரிமை மீட்பு��் துறையிலும் போராடி முன்னோடிப் பாத்திரம் வகித்தவர் பாரதிராஜா!
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கட்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம்! வீரவணக்கம்!!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9840848594
புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
=============================
எண்ணற்ற இயக்குனர் உருவாக பாதை அமைத்து தந்த எங்கள் பிதாமகன்.. அலங்கரிக்கப்பட்ட முகங்களையும் அலங்கார வாழ்க்கைகளையும் அடையாளமாக கொண்ட தமிழ் சினிமாவில் எதார்த்த முகங்களையும் இயல்பான மக்களின் வாழ்க்கையும் பதிவு செய்து தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றிய போராளி, படைப்பாளி, ஆசான், அய்யா, அப்பா, ஆளுமை, இமயம் உறைந்தது. பாரதிராஜா அவர்களின் தடையமின்றி தமிழ் சினிமா கிடையாது.. எதிர்காலத்திலும் ஒவ���வொரு தமிழ்சினிமாவின் படைப்புகளிலும் எங்கள் அய்யனின் ஆன்மா வாழும்..
#RIPTheGreatBharathiraaja
TVK government suspended operations of 18 stone quarries in Tenkasi, 2 in Kanniyakumari & 23 in Virudhunagar.
Waiting for action against Tirunelveli quarries, the mother of all quarry violators.
Also, we hope names of these quarries & violations committed by them will be transparently disclosed to the public, unlike during the DMK regime, when quarries that were briefly suspended were silently reopened despite allegations of mining beyond the permitted level.
@drtkprabhu_TVK@CMOTamilnadu
சுற்றுலாத்துறை அமைச்சரா? சுற்றுச்சூழல் துறை அமைச்சரா?
தான் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றே தெரியாதவர்களை எல்லாம் அமைச்சராகக் கொண்டிருக்கும் கேலிக்கூத்தை தமிழ்நாடு முதன்முறையாகக் காண்கிறது.
உபயம்: @TVKVijayHQ
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தி��் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆ��்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக ��ுணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
History was made in Sydney last week.
Australia's Tamil community unveiled a genocide memorial - a permanent monument to the tens of thousands of Tamils massacred by the Sri Lankan state. Hundreds gathered for the ceremony, where flowers were laid and speeches were given, with politicians standing alongside Australian Tamils to mark the occasion.
The memorial is shaped in the form of the Karthigaipoo, the national flower of Tamil Eelam.
For a people that has spent 17 years fighting to have their genocide recognised, this is significant.
The Tamil homeland may be thousands of miles away. But the memory has found a permanent home in Sydney.
Read more at the @tamilguardian
கரூர் சம்பவத்துல அரசு அனுமதி குடுக்கல, பார்க்க விடல, தடுக்குறாங்க ன்னு சொன்னார்,
இப்போ நீங்கதானே @TVKVijayHQ CM,
பாதிக்கப்பட்ட மக்களை போயி பார்க்கவும், ஆறுதல் சொல்லவும் விடாம யார் சார் உங்களை தடுக்குறாங்க?!