இந்த மூன்று திரைப்படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இந்த மூன்று திரைப்படங்களும் இட ஒதுக்கீட்டை நேரடியாக திரைப்படத்தில் விமர்சித்தவை.
ஒரே ஒரு கிராமத்திலே படத்தில் கதாநாயகி லட்சுமி ஒரு பிராமண பெண். அவரது தாயாருக்கு அவர் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதிக மதிப்பெண் தேவை என்பதால், அவர்களுக்கு தெரிந்த தாசில்தார் மூலம் தாழ்த்தப்பட்ட பெண் என்று போலி சர்டிபிகேட் வாங்கி கருப்பாயி என்கிற பெயரை வைத்துக் கொண்டு ஐஏஎஸ் பாஸ் செய்வார்.
இதில் என்ன கொடுமை என்றால், இந்த படம் வந்த ஆண்டில் (1987) மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. அந்த இட ஒதுக்கீடானது விபி சிங் ஆட்சி காலத்தில் 1990 ஆம் ஆண்டு தான் அமல்படுத்தப்பட்டது.
அதுவரை மத்திய அரசு வேலை வாய்ப்புகளில்/ படிப்புகளில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18% இட ஒதுக்கீடும், ஒரு சதவிகிதம் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் இருந்தது. மீதி 81% open competition. ஆனால் அதில் கிடைக்கவில்லை என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக கருப்பாயி என்று பெயரை மாற்றிக்கொண்டு போலி சர்டிபிகேட் வாங்கி ஐஏஎஸ் பாஸ் செய்வார் நாயகி. இந்த திரைப்படம் வந்த பொழுது கலைஞர் அவர்கள் நிறைய எதிர்ப்புகளை பதிவு செய்தார். ஆனால் அப்போதைய வெகுஜன பத்திரிகைகள் இந்த படத்தை கொண்டாடத்தான் செய்தன.
இன்னொரு விஷயம் இது வாலி என்கிற புனைபெயர் கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் அவர்கள் எழுதிய காந்திகிராமம் என்கிற கதையை தழுவிய படம்.
அடுத்து கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை. இந்த திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் கௌதம் சுந்தர்ராஜன் ஒரு முதலியார் வீட்டு பையனாக நடித்திருப்பார். நான் முதலியாராக பிறந்ததால், எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று பாரதியாரிடம் போய் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். இதில் நேரடியாகவே இட ஒதுக்கீட்டை விமர்சித்து வசனங்கள் இருக்கும்.
அடுத்தது பாலகுமாரன் வசனத்தில் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன். இந்தத் திரைப்படத்தில் ஒரு பிராமண பையன் வினித் தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை தன்னைவிட குறைவான மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவனூக்கு கிடைத்திருக்கிறது என்று தற்கொலை செய்து கொள்வார். இந்த படமும் நேரடியாக இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்தது
இட ஒதுக்கீட்டையும் திராவிட அரசியலையும் தொடர்ந்து விமர்சனம் செய்தவர்களின் லிஸ்ட் எடுத்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் விசு அவர்கள் 1967 க்கு பின்னர் நான் பேன்ட் போடுவதையே நிறுத்தி விட்டேன் என்று சொல்வார். அவரது படங்களிலும் சமூக நீதி இட ஒதுக்கீடு போன்றவற்றை குத்தலாக கேலி செய்யும் காட்சிகள் இருக்கும். முக்கியமாக திராவிட அரசியல்வாதிகளை.
ஷங்கர் திரைப்படங்களில் முக்கியமாக முதல்வன் திரைப்படம். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியைப் போற்றி, ராஜாஜி மாதிரி முதல்வராக நீ வரவேண்டும் என்கிற வசனம் இருக்கும். அந்தத் திரைப்படத்தின் வசனகர்த்தா சுஜாதா என்கிற புனைபெயர் கொண்ட இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜன்
அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போக்கு திரைப்படங்களில் வந்த காலகட்டத்தை பார்த்தால் அவை எல்லாமே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அதிகமாக இருக்கும். அதற்கு முந்தைய திரைப்படங்களில் அரசியல்வாதி என்றாலே ஒரு உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் & ஒரு பெரிய மனிதர் அவரை விமர்சிக்கும் காட்சிகளோடு நிறுத்திக் கொள்வார்கள்.
இப்படி தொடர்ச்சியாக திரைப்படங்களின் மூலம் விதைக்கப்படும் hate என்றாவது பலன் கொடுக்கும் என்று நினைத்தார்கள். பலன் கிடைத்தது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். தேய்ந்தது.
#மீள்பதிவு
நீட் விவகாரத்தில் தொடர்ந்து பரப்பப்படும் பொய்களை அடித்து நொறுக்கிய @SuriyaKML
ஏன் தமிழ்நாடு மட்டும் எதிர்க்கிறதுன்னு கேட்கிறார்கள். ஏன்னா தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் திராணி இருக்கு. தெளிவு இருக்கு.. சொந்தமா மூளை இருக்கு.. அதனால் நாங்கள் எதிர்க்கிறோம்.. இனியும் எதிர்ப்போம்.
#BanNEET
Must read...📍
ரங்கராஜ் மாதிரி ஆளுங்க நமக்கு முன்னாடி பொறந்து அதுவும் தன்னோட caste privilege வெச்சுக்கிட்டு தன்ன அறிவாளியா காட்டிக்க தான் முயற்சி பண்ணிட்டு இருப்பாங்க... நான் பல தடவ சொல்லிட்டேன் கேள்வி கேட்கறப்போ இல்ல, பதில் சொல்றப்ப தான் ஒருத்தன் கிட்ட விசயம் இருக்கா, அவன் அறிவாளியானு தெரியும்... இத்தன நாள் கேள்வி கேக்குற வேலைய மட்டும் பாத்துட்டு இருந்த ரங்கராஜ் இப்போ பதில் சொல்றப்ப தான் உங்களுக்கு ஒரு விவரம் தெரியாத முட்டாள்னு உண்மை புரியும்.
நீட் மசோதா தாக்கல் ஆச்சுனு சொன்னாருல காங்கிரஸ் ஆட்சில, அது வடிகட்டடின பொய்... இந்திய மெடிக்கல் கவுன்சில் (MCI) 2010'ல ஒரு gazette notification அ விட்டுச்சு அதுல நீட் தேர்வு பத்தி இருந்தது உண்மை தான் ஆனா, தமிழ்நாட்டுக்கு அந்த தேர்வுல இருந்து விலக்கு இருந்துச்சு, திரும்பவும் 2012'லயும் MCI ஒரு gazette notification குடுத்துச்சு. ரெண்டுமே gazette notification தானே தவிர, நீட் தொடர்மா எந்த மசோதாவும் காங்கிரஸ் ஆட்சில தாக்கல் செய்யப்படவே இல்ல, திமுக'வும் ஆதரவு தெரிவிக்கல... அது இந்த சங்கி ரங்கராஜோட அப்பட்டமான பொய்.
13 வருசமா தேர்வு நடக்குதுனு சொல்றாருல அங்க தான் இருக்கு இந்த பார்ப்பனீய அரசியல்... 2013-ல நீதிமன்றம் நீட் தேர்வ ரத்து பண்ணிருச்சு ரத்து பண்ற வரைக்கும் தமிழ்நாட்டுக்கு தேர்வுல இருந்து விலக்கு இருந்துச்சு, திரும்பவும் சங்கி பாஜக ஆட்சிக்கு வந்ததும் 2016'ல வழக்கு போட்டு அந்த தீர்ப்ப ரத்து பண்ண வெச்சு மறுபடியும் நீட் தேர்வ கொண்டு வந்துச்சு பாஜக அதுவும் அவசர சட்டம் மூலமா... ஆனா இந்த முறை தமிழ்நாட்டுக்கு விலக்கு இல்ல.
2014-2015 ஏன் நீட் தேர்வு நடக்கல 2016'ல ஏன் நீட் மறுபடியும் கொண்டு வந்தாங்க?, யார் கொண்டு வந்தது? இந்த கேள்விய சங்கி ரங்கராஜ் கிட்ட கேளுங்க பதில் வராது. அப்றம் அவர் சொன்ன அந்த திமுக எம்பி கொண்டு வந்த Bill , அது 2021'ல திமுக எம்பி திரு.வில்சன் கொண்டு வந்த தனிநபர் bill அதுவும் எதுக்கு தெரியுமா? நீட் தேர்வுல மாநிலங்களுக்கு விலக்கு வேணும்னு கேட்டு.
பார்பனீய சங்கி எப்பவும் பொய்ய உண்மை மாதிரி தான் பேசுவாங்க, அப்படி பேசி பேசி தான் இத்தன காலமும் அந்த கூட்டம் வயிறு வளத்தது.
திருந்துங்க ரங்கராஜ்.🤦♂️ @RangarajPandeyR
2010, MCI notification : MCI-31(1)/2010-Med/49068
2012, MCI notification : MCI-31(1)/2010-Med/62051
Just to Show what @arivalayam@mkstalin has done so far நீட் எதிர்ப்பு: திமுகவின் போராட்டப் பயணம் (காலவரிசை)
21.08.2010
│
▼
அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி,
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்
மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதி,
தமிழ்நாட்டில் நீட் ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
│
▼
21.12.2010
│
NEET-க்கு மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியீடு.
திமுக தொடர்ந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை வலியுறுத்தியது. [oai_citation:0‡News9live](https://t.co/67D1n1MOm9)
│
▼
27.07.2017
│
திமுக சார்பில் தமிழகம் முழுவதும்
மனிதச் சங்கிலி போராட்டம்.
│
▼
01.09.2017
│
அனிதா உயிரிழப்புக்குப் பிறகு,
நீட் ரத்து கோரி திமுக போராட்டங்களை
தீவிரப்படுத்தியது.
│
▼
10.06.2021
│
நீட்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய
நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவை
திமுக அரசு அமைத்தது.
│
▼
13.09.2021
│
தமிழ்நாடு சட்டப்பேரவையில்
நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
│
▼
08.02.2022
│
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை,
சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
│
▼
2022–2026
│
• சட்டப்பேரவை தீர்மானங்கள்
• நாடாளுமன்ற போராட்டங்கள்
• உண்ணாவிரதங்கள்
• ஒன்றிய அரசிடம் தொடர் கோரிக்கைகள்
│
▼
தொடர்ந்து:
தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு
அல்லது நீட் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை திமுக தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
@TRBRajaa@TimonTheFire
நடிகர் ஆவலோடு எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் திரைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அது ஒரு நீண்ட, (நடிகருக்கு) ஏமாற்றம் நிறைந்த உச்சக்கட்டம். A prolonged but disappointing climax. ஏனெனில் அது பக்கத்துத் திரையில், பொது வெளியில், அவரில்லாமல், யாருக்கோ இயற்கையாகவே நடந்தேறுகிறது.
காத்திருந்து, காக்கவைத்து பொய்களைச் சொல்லி, போலியான நெருக்கடியைக் கட்டமைத்து (ஷபீர், மணி, பெருமாள் மணி, புதிய தலைமுறை, நியூஸ் 7 போன்றோர் ஆதரவுடன்), திமுக வெறுப்பை வளர்த்து, தள்ளிவைத்து, உண்மையை மறைத்து மூடி வைத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று வெளிடப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிகழும் போது தமிழக இளைஞர்கள் - நடிகரின் கவர்ச்சிக்குப் பின்னால் நிற்காமல் - நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஜனநாயகன் படத்தில் நாயகனின் சாகசத்திற்காகப் பொங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இளைஞர்கள் உண்மையான அரசியல் போராட்டத்தைத் தெருவில், தன்னெழுச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
திரை நாயகன் தமக்காகப் போராடுவார் என்று ஏமாறுவார்கள் என கருதப்பட்டோர் தங்களையே நாயகர்களாக வெளிப்படுத்துகிறார்கள்.
இது நடிகருக்கு, அவரது அகங்காரத்திற்கு, எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும் என்று இறுமாப்பு கொண்ட ஆலோசகர்களுக்குக் கிடைத்த பெருந்தோல்வி.
இது தவெகவிற்கு எதிராகப் போய்விடக்கூடாது என்று நினைக்கும் பா ரஞ்சித், தமது நீலம் பண்பாட்டு மையம் மூலம் தமது ஆதரவாளர்களின் மயக்கத்தைத் தொடர, தமது பங்கிற்கு ஒரு சம்பிரதாய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்.
ஆனால் தமிழ்நாடு இந்த குறுகிய அரசியலுக்குள் சிக்காமல் திமிறி எழுகிறது.
இது நடிகரோ, பா ரஞ்சித்தோ, ஆதவ் அர்ஜூனாவோ விவரிக்க முடியாத, அடக்க முடியாத வெகுமக்கள் அரசியல்.
வடக்கில் பொது மக்கள் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டுக்காகப் போராடும் போது தமிழ்நாடு வழக்கம் போல இன்னும் ஒரு படி மேலே போய் நீட் தேர்வே வேண்டாம் என்று போராடுகிறது.
இது தவெக நடிகர் எதிர்பாராத திருப்பம்.
அவர்களை கைது செய்து அடைப்பதைத் தவிர நடிகருக்கு வேறு வழி தெரியவில்ல.
இவ்வளவு விரைவில் தவெகவின் அரசியல் போதாமை வெளிப்படும் என்று நான் நினைக்கவில்லை.
இயற்கையும் உண்மையும் இந்த சதிகாரக் கூட்டத்தின் பிடியில் எப்போதும் சிக்காது.
Written by Director Amudhan
இந்திய நாட்டின் பொது சுகாதார எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் NEET தான் Anti National, ஒரு அமைச்சரின் பதிவியைக் காக்க இத்தனை மாணவர்களை தாக்கும் நீங்கள் தான் Anti National!
- திமுக மருத்துவரணிச் செயலாளர் திரு. @Dr_Ezhilan அவர்கள்
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails
(விஜய் ரசிகர்கள் நேரே கடைசி வரியைப் படிக்கலாம்.)
முதன்முதலில் நீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தபோது “இது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும்” என கலைஞர் கண்டித்ததால் “நீட் நடத்துவதும் நடத்தாததும் மாநிலங்களின் உரிமை” என பணிந்து சட்டத்தை மாற்றியது காங்கிரஸ்.
பின்னர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது நீட்டை ஏற்றுக் கையெழுத்திட்டார், அப்போது அதிமுகவில் உளவாளியாக இருந்த RSS கைக்கூலி மாஃபாய் பாண்டியராஜன்,
பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தபோதே நீட் என்பது மாபெரும் அநீதி என போராட்டத்தை ஆரம்பித்தார் MKS. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்ப இப்படிச் செய்கிறார் என வழக்கம்போல் நம்மூர் திருடர்கள் இட்டுக்கட்டினார்கள். மாடு பிடிப்பதில் ஜெயித்துவிட்டு, படிப்பதில் தோற்றோம்.
பிறகு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக பாஜகவை நீட்டை ஒழிக்கச் சொல்லி நிர்பந்திக்கவே இல்லை. ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை வேறு வாங்கியது பாஜக.
பின்னர் திமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விஷச்செடியாக இருந்த நீட் இப்போது நன்றாக வேர்விட்டு, பல ஏழை, கிராமப்புற, நடுத்தர வர்க, BC, MBC, SC, ST மாணவர்களின் உயிரைக் குடித்து வளர்ந்து விஷ ஆலமரமாக நின்றிருந்தது. சட்டப்படி அதை முற்றிலும் ஒழிப்பதற்காக ஏ.கே.ராஜன் கமிட்டி அமைத்து அதை ஒழிக்கச் சட்டமும் இயற்றி அனுப்பியது திமுக அரசு. அதுதான் உதயநிதி சொன்ன ரகசியம். அதுதான் மந்திரம். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ரகசியம் வேலை செய்யும். இந்த மந்திரம் பலிக்கும். ஆனால் பாஜகவின் இந்தியாதான் ஜனநாயகமே இல்லையே! ஜனநாயகத்துக்குப் புறம்பாக கவர்னரையும் ஜனாதிபதியையும் வைத்து இன்றளவும் அதை ஒழிக்கவிடாமல் ஒரு பச்சையான அயோக்கியத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது பாஜக. ஆனால் இப்போதும் பாருங்கள் “நீட்டை ஒழிக்கிறேன்னு திமுக சொல்லுச்சே.. ரகசியம் இருக்குனு உதயநிதி சொன்னாரே... ஒழிச்சுச்சா.. கிகிபிகி” என திமுகவைக் கிண்டல் செய்யும் எவனும், அயோக்கியத்தனமாக சட்டத்தை வளைத்த பாஜகவைக் கேள்வி கேட்க மாட்டான். இதில் நீட்டை ஆதரிப்பவனும் அடக்கம், (திமுகவைச் சேராத) எதிர்ப்பவனும் அடக்கம்! அதுதான் தமிழ்நாட்டின் விசித்திர டிசைன்!
வழக்கம்போல், எப்படி திமுகவின் இந்தித்திணிப்பு எதிர்ப்பை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, எப்படி திமுகவின் இட ஒதுக்கீட்டு ஆதரவை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, திமுகவின் மாநில உரிமைக்கான குரலை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ அதேபோல் திமுகவின் நீட் எதிர்ப்பை இப்போது ஏனைய இந்தியா லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கிறது. இதோ மாணவர் போராட்டம்.
மாணவர்களை, குறிப்பாகப் பெண்களை அசிங்கமாகத் தொடுவதும், மார்பகங்களைப் பிடிப்பதும், பின்புறம் லத்தியால் அசிங்கமான செய்கைகளைச் செய்வதும் என பாஜக போலீஸ் அயோக்கியத்தனம் செய்துகொண்டிருக்கும்போது, திமுக ஆ.ராசாவை அனுப்பி மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கும்போது, உதயநிதி மாணவர்களுக்காக தன் ஆதரவையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கும்போது, ஒரு காலத்தில் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்ற தமிழ்நாட்டு அரசு வாயை மூடிக்கொண்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமே எதிர்த்த ஒரு அநீதியை இன்று இந்தியாவே எதிர்க்கும்போது உடன் நிற்க தமிழ்நாட்டுக்கு இன்று தெம்பில்லை. அதன் முதுகெலும்பு சினிமா மோக ஆசிட்டில் கரைந்துவிட்டது. அதன் வீரம் ரீல்ஸ்களின் பொய்களில் செத்துவிட்டது.
விலைபோனவர்களின் வார்த்தைகளுக்கும், ரீல்ஸ்களுக்கும், பொய்க்கும் மூளையை அடகு வைத்தவர்களே... ஏன் திமுக? ஏன் திமுக? ஏன் திமுக? என கேட்டுக்கொண்டே இருப்பீர்களே... இதற்காகத்தான் திமுக! நம்மை மானத்தோடு வைத்திருக்கத்தான் திமுக. தமிழ்நாடுக்கு வந்த ஆபத்தை மட்டுமல்ல, வரப்போகும் ஆபத்தைக் கூட எதிர்க்கத்தான் திமுக. தடுப்பூசியைத் தூக்கி எறிந்துவிட்டு உயிர்க்கொல்லிக் கிருமியிடம் உடலை ஒப்படைத்திருக்கிறீர்களே, உங்களைத் தற்குறி என்றால் சொல்லுவது? தற்கொலைக் காதலர்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்!
நம்மை நிஜ ஹீரோவாக வைத்திருந்தது திமுக. இதோ உங்கள் நிழல் ஹீரோ நம்மை பரிதாபமான நிஜக் கோமாளியாக்கி இருக்கிறார். வடக்கன், பீகார், பீடா வாயன் என கிண்டல் அடித்துச் சிரிப்போமே. அவனெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான், வாயால் அல்ல! ஏன் என்றால் நாம் செய்திருக்கும் காரியம் அப்படி!
மக்கள் கூட பொய்க்குப் பலியான பலியாடுகள். ஆனால் எல்லாம் தெரிந்தும், எல்லாம் அறிந்தும், தவெக என்பது பாஜகவின் ட்ரோஜன் ஹார்ஸ் என்பது தெரிந்தும் தமிழ்நாட்டின் இந்த வரலாறுகாணா அவமானத்திற்கும், அசிங்கத்திற்கும், வீழ்ச்சிக்கும் துணைநின்று ஒத்து ஊதும் திருமாவளவன், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ்... நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
சாத்தான் உங்களுக்கு அதிகாரத்தில் மட்டும் பங்கு தரவில்லை. பாவத்திலும் தந்திருக்கிறான். தமிழ்நாட்டு வரலாறு உங்களுககன சோஃபா செட்டுகளை வட்டியும் முதலுமாய் கொடுக்கும். வட்டியும் முதலுமாய் கொடுக்கும்.
(கடைசி வரி: பதிவு ரொம்ப பெருசா இருந்தா படிக்க மாட்டீங்கள்ல. உங்களுக்குப் புடிச்ச மாதிரி ஷார்ட்டா சொல்றேன். “திமுக தோத்தா திமுக கூப்புக்கு போகாதுடா... நம்மளும் நம்ம வருங்காலமும்தான் கூப்புக்கு போகும். போ... போய் க்யூட் சி.எம்னு கமண்ட் போடு...”
-டான் அசோக்
21-07-2026