தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் @CTR_Nirmalkumar
அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பற்றியும் ,���ன் தந்தையார் பெரியசாமி அவர்களை பற்றியும் என்னைப் பற்றியும்,முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றியும் அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மழை வெள்ள நேரத்தில் தூத்துக்குடியில் யாருமே களத்துக்கு வரவில்லை என வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார்.
எம்எல்ஏ என்கிற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். அன்றைய துணை முதல்வர், தொகுதியின் எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினர்.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி பார்க்காமல் புறமுதுகை காட்டி ஓடிய நீங்கள் இதை பேசலாமா?
தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும்,நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் கும���ர் பேசியுள்ளார்.அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை. வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிருபிக்க முடியுமா?
முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
வாய் இருக்கிறது… அதிகாரம் இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிடுங்கள்...
பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல் குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
#tvkfails
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட���டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக���கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் முன்னாள் அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்கள். தற்போதைய அரசு இனியாவது விரைந்து செயல்பட்டு அன்னாரின் பூத உடலை அவரது கொண்டுவரும் நடவடிக்கையை விரைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.@geethajeevandmk
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே ��ருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM SIR!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். பரிதாபம்...
#TVKFails
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சு��ையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்���ு சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்கள��ம் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவ��்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்��ட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ஏப்ரல் 27: நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள்.
மாநகராட்சி மன்றத் தலைமைப் பொற���ப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர்.
பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் #DravidianModel. அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!
மீண்டும் திராவிட மாட��் 2.0 ஆட்சி...
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பெருமக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல��வோம்_ஒன்றாக !
திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பணாமங்கலம் பகுதியில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @kalaivanandmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
மக்கள் நலன் காக்கும் தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக இருக்கிறது.
#VoteForDMK
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க முற்படும் பாசிச சக்திகளையும் அதன் அடிமைகளையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS