நண்பர் ஒருவர் தன் குழந்தைகளின் பிறந்த நாளின் போது அருகில் இருக்கும் எளியவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வார். எங்கள் ஏரியாவிற்கு அருகில் மணிப்பூர் கலவரங்களால் இடம்பெய���்ந்து வந்திருக்கும் இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு கோதுமை போன்ற ஏதாவது வாங்கி கொடுத்தால் சில மாதங்களுக்கு எளிதாக இருக்குமே என்று நினைத்து போய் கேட்டோம். அவர்கள் நாங்கள் அரிசி தான் பழக்கம். அதுவும் சிறிய ரக விலை உயர்ந்த அரிசி வேண்டாம் நல்ல பெரிய ரக அரிசி (விலை குறைந்த இட்லி அரிசி) வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டார்கள���.
இரண்டே வேளை மட்டும் தான் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கும் தக்காளியும் தான் அவர்கள் சமையலில் பிரதானமாக இருக்கிறது. காலை 7 மணி அளவில் சோறு பொங்கி, உருளைக்கிழங்கு தக்காளி வைத்து ஒரு மசாலா போல் செய்து அதை பிசைந்து சாப்பிடுகிறார்கள். பின்னர் வேலைக்குப் போய் வந்ததும் சாயங்காலம் ஆறரை மணி அளவில் அதே போல் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
எனவே இட்லி அரிசி, நிறைய உருளைக்கிழங்குகள் மற���றும் குழந்தைகளுக்கு கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட்கள் வாங்கி, பொருட்களை எடுத்துச் சென்று ��வர்கள் இருக்கும் இடத்திற்கு சற்று அருகே சென்று, அவரிடம் கொடுத்து விட்டோம். நீங்கள் வாங்கியதாகவே உங்கள் குழந்தைகளிடம் சொல்லி, கொடுங்கள் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம்.
இரண்டு குடும்பத்திற்கும் சேர்த்து நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கும் வேலைக்கு சரியான அளவு சம்பளம் அவர்களை வேலைக்கு வைத்திருப்போர் தருகிறார்கள். அவர்கள் வாழ்க்கை ஓடிவிடும். ஆனால் அந்த குழந்தைகளை நினைத்தால் மனது கஷ்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்கள் நன்கு வளர்ந்து ஒரு வேலைக்குப் போக கூடும். சுயதொழில் கூட செய்யக்கூடும். ஆனால் அவர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வியை எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை.
இன்னொரு நாள் அவரை கூப்பிட்டு பேசினோம். அங்கே கலவரங்கள் ஓய்ந்து விட்டால் நீங்கள் திரும்பி சென்று விடுவீர்களா? இந்த குழந்தைகளின் படிப்பு என்று க��ட்டோம்? அவர்களுக்கும் ஏதும் தெளிவில்லை. எப்படி காட்சிகள் மாறும் என்று.
இப்படி வரும் குழந்தைகளை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. தற்போதைக்கு ஏரியாவில் இருக்கும் ��ல்லூரி மாணவர்களிடம் பேசி, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் விளையாட செல்லும் போது, ஒரு மணி நேரம் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது அடிப்படைக் கல்வி எண்கள், ஆங்கில எழுத்துக்கள் அதன் மூலம் ஏதாவது வாசிப்பு சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறோம். ஆனால் அது எந்த அளவுக்கு மெட்டீரியலைஸ் ஆகும் என்று தெரியவில்லை.
மதுரையில் தொழில் செய்யும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள் எல்லாம் பள்ளிகளில் படி��்து வருகின்றார்கள். ஆனால் இதுபோல புலம்பெயர்ந்து வருபவர்கள், கட்டிட வேலை போன்ற வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளின் கல்வி ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Rahmanullah Gurbaz silently gave money to the needy people on the streets of Ahmedabad so they could celebrate Diwali.
- A beautiful gesture by Gurbaz.