தமிழகத்தில் எந்தவித சமரசம் இல்லா அரசியல் களமாடும் ஒரே ஆளுமை திரு @annamalai_k அவர்களிடமிருந்து எனது சமூக வலைதள செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! "சிறந்த சமூகஊடக செயல்வீரர் விருது"
#Narendramodi is a national emotion!
#Annamalai is a regional vibration!
100 Grandmasters!♟️
India achieved a historic milestone as #AnujShrivatri became the country’s 100th Chess GM.
India has become the 4th in the world to have 100 MG's, after #Russia:184, the #US:115 & #Germany:103.
#India#Chess
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்��ு அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்க��ில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.
பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத���தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Today, 8th November, is a landmark day. Respected L.K. Advani Ji enters his hundredth year. On this special occasion, my greetings to him.
I’ve written an article in which I’ve highlighted his everlasting contribution to India.
I have recalled his journey, be it experiencing the horrors of Partition and rebuilding life from scratch, strengthening the Jana Sangh and building the BJP, standing up for democracy during the Emergency, leading the Somnath to Ayodhya Rath Yatra or serving the nation in government.
Have also written about other aspects of Advani Ji - the voracious reader, his love for culture and cinema, a prolific writer and more.
English - https://t.co/tc77ZVhRdo
हिंदी - https://t.co/t0JSavOopX
கடந்த ஆறு மாதங்களாக, தமிழகத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள், நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல். அதுவும் ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே உள்ளது.
பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாகவே அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி (IGST) பகிர்வை இதற்கான காரணமாக முன்வைப்ப��ு பொருத்தமானதல்ல. ஏனெனில், ஐஜிஎஸ்டி (IGST) புதிதாகக் கொண்டுவரப்பட்டதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார நடவடிக்கைகள��க் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. இந்த வேறுபாட்டைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என���பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது, அதன் மூலம் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில் நடவடிக்கைகள், வணிகம் என, பல வகையான பொருளாதாரப் பங்களிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்���ியையே பலவீனப்படுத்தும்.
இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் ��ள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added – GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில், தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் பின்னால் இருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருகின்றன.
தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் (Regional Imbalance Reports) மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது என்பதை இதற்கு முன் நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த அறிக்கைகள் மாநிலத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி மட்டுமே. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள��க் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், அரசின் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சமமாகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம்.
வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரின் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் நெருங்கிய தொடர்புடைய சண்முகா நதி ��ழிவுகள் மற்றும் கழிவுநீர் கலந்து, மாசடைந்து தனது இயல்பான தூய்மையை இழந்திருந்த நிலையில் நமது We The Leaders அமைப்பின் தலைவர்களின் தொடர் களப்பணியால் மீண்டும் அதன் புனிதத்தன்மை மீட்கப்பட்டுள்ளது.
இதற்காக உழைத்த நமது தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்
MLC elections in 28 seats across 4 big states - Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka.
Elections held using ballot papers.
Guess how many seats Congress won? 🧐
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், மு��்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அ��்றைய திமுக அ��சு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.