நேற்றையதினம் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இந்த அவையில் RSS இயக்கத்தை சமூக இயக்கம் என்றார் கருணாநிதி" எனக் குறிப்பிட்டார்.
RSS இயக்கத்தை சமூக இயக்கமென்று கருணாநிதி குறிப்பிட்டது உண்மைதான். அதற்கான தரவுகளும் இருக்கின்றன. ஆனால், அதனைக் குறிப்பிட்டது ஆதவ் அர்ஜுனா கூறியதுபோல சட்டமன்றத்தில் அல்ல!
அப்புறம், 'கோத்ரா கலவரம்' என்றார் ஆதவ் அர்ஜுனா. அது கோத்ரா கலவரம் இல்லை; குஜராத் கலவரம். இசுலாமியர்கள் பாதிக்கப்பட்டது கோத்ராவில் இல்லை; குஜராத் கலவரம் எனப்படும் குஜராத் இனப்படுகொலையில்தான் இசுலாமியர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
கொஞ்சம்கூட வாசிப்போ, முன்தயாரிப்போ இல்லாது மாண்புமிக்க சட்டமன்றத்தில் தகவல் பிழைகளை அள்ளிக் கொட்டலாமா அரைவேக்காட்டு அமைச்சரே?
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்
துணிவு எங்கிருந்து உங்களுக்கு
வந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;
காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?
மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை;
காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல்,
அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல்,
அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;
அது எமது மண்ணின் அடையாளம்!
அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;
மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!
(1/2)
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை?
இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
"யார் தொட்டியின் மீன்கள் நாம்? அல்லது, நம் தொட்டியில் யாரெல்லாம் மீன்கள்?" எனத் 'தொட்டி மீன்கள்' கதை வாசிப்பின் முடிவில் உங்களுக்குள் எழுந்த கேள்விகள் கவித்துவமானவை. அவதானம் மிகுந்த அருமையான மதிப்புரை ஐயா! @PayaniDharan
#WATCH | பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக சென்ற தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.
#SunNews | #SanitaryWorkers | #Protest
முந்தைய ஆட்சியில் தூய்மைப்பணியாளர்களைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து, அவர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த விஜய், இப்போது அவர்களைத் தலைமைச்செயலகத்திற்கு அழைத்து, குறைகேட்பதற்கு ஏன் மறுக்கிறார்?