https://t.co/BBAtuuPj2C
நாட்டிலேயே நமக்குதான் அதிக (5617Cr) வெட்டு!
"மோடியின் VB-G Ram G யை எதிர்த்து "விஜய் கட்சி எதுவும் செய்யலையே" னு 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் டிசம்பர���ல் கேட்டேன்.
"வந்தாத்தானே செய்யமுடியும்"என்றார்கள்.
வந்துட்டாருல்ல.. செஞ்சிடுவாரு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிற��ை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்கள���க்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
General Discussion on TN Budget - Day 2 (17/08/2021) | White paper, Fiscal deficit and Public debt
#TN_EBudget_2021#TNBudgetDebate
https://t.co/W8KCO4HZim
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
��ந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இரு��்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் ���ரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த ��மிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன���பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திர��விட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Till now, in politics, I have never addressed my comments at any individual contesting against me or our party in elections, be it 2016, 2019, 2021, 2022 or 2024.
Our approach has always been clear: who we are, what we do, and why people should vote for us.
However, after the continuous parroting of “nothing has been done for Madurai” by those devoid of principles, shifting across parties, lacking understanding of the constituency, unaware of how administration functions at various levels, and empty of data, history or analysis, I believe my primary duty now is to bring light and dispel the ignorance being spread through paid promotion (Among others, @SandhyaRavishan@VinodhArulappan Rahul of @UpdatesChennai – I will name and tag the brokers in due course).
Therefore, from now until the end of my campaign, every rally will serve as an “Introduction to Madurai” lesson for the “Cinema Sangi,” while also unmasking a caste-ist party run solely to provide political protection for one person with a disreputable (to say the least) background.
Chapter:1
இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை.
2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள�� செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.
ஆனால் “மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை” என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எ��்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் — பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது.
அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்���லப்படுத்துவேன்.
அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் “சினிமா சங்கிக்கு“ மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும்.
நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்!
அத்தியாயம் 1
வார்டு 56, பொன்னகரம் – பிராட்வே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை.
தரவுகள் (Data PDF): https://t.co/woqH7oLGOp
COMING SOON💫 BIGGER. BOLDER. REVOLUTIONARY. 🔥
🌌 NEELAM CULTURAL CENTRE’S VAANAM ART FESTIVAL 5th EDITION 🎨
✨ A THUNDEROUS CELEBRATION OF DALIT HISTORY MONTH ✨
Observed every April to honour the birth anniversary of Babasaheb Dr. B.R. Ambedkar, Dalit History Month stands as a time of remembrance, assertion, and cultural awakening.
Marking this historic legacy, Vaanam Art Festival 5th edition is set to ignite India with an unstoppable wave of creativity - bringing together fearless artists, visionary writers, powerful performers, path-breaking cinema, and vibrant cultural voices from across the country.
🔥CULTURAL STORM:
🎭 Electrifying Live Performances
🎨 Revolutionary Art Installations & Exhibitions
📸 Striking Photography Showcases
🖋️ Bold Literary Dialogues & Lit Fest📚
📽️ Politically Charged Film Festival 🎬
💥 This is not just a festival. This is a movement of art, assertion, memory, and future making.
💫 Come witness stories that challenge, celebrate, and transform. Let’s gather under one sky to create, to question, to reclaim.✨🎉
⚡ Stay tuned. The uprising of art is arriving.
JAI BHIM 💙🎉
பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கு���்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்���ிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனை��ரும் 21 வயதிற்குட்பட்டவர்கள்.
நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இரு���்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கு��்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்ட��ருக்கிறார்கள்.
ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாண�� வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக்க���லமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.
1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகள���ல் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்���ா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture
When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India need another country’s approval to secure its own energy needs?
Equally troubling is the sinking of the unarmed Iranian warship IRIS Dena by the United States soon after it participated in the International Fleet Review 2026 naval exercise hosted by India in Visakhapatnam. When a ship that came to India as part of a multinational exercise meets such a fate, India cannot appear silent or passive.
The Union BJP Government looks totally compromised on India’s long standing tradition of strategic autonomy and an independent foreign policy. India’s dignity in the international arena needs to be protected and the nation’s sovereignty and interests need to be defended.
What Happened to Sadhguru's Wife?
Did Sadhguru's wife die from enlightenment, as he claims, or was it foul play?
Must Read: American Journalist Be Scofield’s detailed investigation & analysis
https://t.co/ah9H0KnHca