கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது போல் மிகக் கொடிய விஷம் எதுவுமில்லை । எதிர்காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது போல் முட்டாள்தனமும் எதுவுமில்லை ! இந்த நொடி மட்டும் நிஜம். அமைதி!
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது.
ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு @Vairamuthu
‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.
ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன்.
என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் @mammukka அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு.
நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து.
#Mammootty
உங்கள் கவலைகளை யாரிடமாவது சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்! சத்தியமாய் சொல்கிறேன் ! அதைப் பற்றி அவர்களுக்கு துளியும் கவலை கிடையாது. சரி , நான்கு வார்த்தை நன்றாய் சொல்லி விட்டு எப்படியாவது அங்கிருந்து ஓடி விடலாம் என்பதுதான் அவர்கள் குறிக்கோள் !
திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.
அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.
சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான நண்பர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஓர் எளிய பின்னணியில் பிறந்து தமிழ்வழியில் ஐஏஎஸ் தேர்வெழுதி வென்று காட்டியவர். தான் வகித்த பதவிகளில் எல்லாம் சிறந்து துலங்கி தமிழ் முத்திரையை ஆழப் பதித்தவர். ஆய்வுப் பணிகள், பதிப்புப் பணிகள், தமிழ் வளர்ச்சிப் பணிகள் என ஓயாது உழைக்கும் இவர் ‘ஓய்வென்பது ஓய்ந்திருப்பதல்ல’ என்னும் சொற்றொடரின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இன்றைய இளையோர் இவரெழுதிய நூல்களை வாசிப்பதும், இவரது வாழ்விலிருந்து உத்வேகம் பெற்றுக்கொள்வதும் அவசியம் எனக் கருதுகிறேன்.
தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பகுதிகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் பெரும்பணியில் ஆழ்ந்திருக்கும் அன்பிற்கினிய நண்பரின் பிறந்தநாளில் அவருக்கென் வாழ்த்து.
The 1983 moment of Indian Women’s Cricket has arrived!
Your names will live in folklore.
Their legacy will ignite a million dreams.
Congratulations, Team India! 🇮🇳🏆
#CWC2025@BCCIWomen
அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும் .
எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.
என்றென்றும்
உங்கள் நான்.