I knew Mr. Vijay will get sloppy. Now the situation will only get worse from here. Law & Order were taken for a ride since bureaucrats are rather keen to save the job while entire state sunk in domino effect. Taking accountability is a quality of a leader, which Vijay lacks tremendously. Thus inherent behaviour wouldn’t change overnight, unfortunately Tamilnadu economy, administration and people will suffer as a result of incompetent Vijay.
Mr @TVKVijayHQ needs to conduct himself as a CM but his acts are very close to incomprehensibly incompetent leadership. A state economy is facing imminent decline owing to the devastating fiscal policies TVK aiming to achieve. Soon enough the true colour will come out. Why does the CM shying away from responding to the public?.
என்னுடைய நேர்காணல் காணொளியை வெட்டி ஒட்டிப் பரப்பும் அரைவேக்காட்டு ஆச்சரியக்குறிகளுக்கு..
Context:
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமெனும் நோக்கமெல்லாம் விஜய்க்கு இல்லை; அவர் நினைத்திருந்தால் மு��ல் வாரமே கரூருக்குச் சென்று இருக்கலாம். முதல் கையெழுத்தாக அரசு வேலை வழங்குவதைச் செய்திருக்கலாம்.
50 நாட்கள்வரை அதனைச் செய்யாதவர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலகியவுடன், கரூர் இடைத்தேர்தலுக்காக வாக்குகளைப் பொறுக்கவே இதனைச் செய்கிறார் விஜய்.
200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம்
என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவ���ரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் அமைத்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்��ின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே காலநிலை மாற்றம், பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, ��ிளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் க���றைக்கக்கூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் ���ன்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்த��னில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் நடப்பு மாதம் தமிழ��நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவெக அரசு 200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்��ப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 அலகிற்கு மேல் அதிகமானதால், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின்கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணமாகும்.
தவெக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் 200 அலகுகள் ���லவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 அலகுகள் இலவசம் என்றும், அதுவும் 500 அலகுகள்வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்ற��யது போதாதென்று தற்போது, மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தைவிடப் பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் மட்டுமே இதுபோன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பன்மடங்கு தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்த���கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக, ���ர்நாடகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதா? போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரி நதிநீர் ��ரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இப்போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, த��ிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை. காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கா���த் தார்மீக உரிமையை மறுத்து வருகிறது என்பதே மறுக்கவியலா பேருண்மை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை. முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நி��ைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, அதேபோல தற்போது மேகதாதுவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதா��ுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிட���் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா? உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்�����ின்படி, 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் பயனும், தீர்வும் கிடைக்கப்பெறாது திரும்பி வந்ததெல்லாம் முதல்வர் விஜய்க்குத் தெரியாதா? ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுபோல, முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்து, விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி, இச்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது? காவிரி நதிநீர் உரிமைப் பங்கீட்டுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பெற முயற்சி எடுக்காத தவெக அரச���, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி தண்ணீருக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் எவ்வித உறுதிப்பாடுமில்லை. காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீ���ம் தண்ணீர் திறந்து விடும்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும்கூட, அதனை ஏற்க மறுத்து, மேல்முறையீட்டுக்குச் செல்கிறது கர்நாடக அரசு. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? எதற்கு இந்த வறட்டுப்பிடிவாதம்? ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாது ஏமாற்றி, விவசாயிகள��ன் வயிற்றிலடித்த தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர்ச்சிக்கலையும் மிகுந்த மெத்தனப்போக்கோடும், அலட்சியப்போக்கோடும் கையாள்வது ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்��்பதாகக் கூறிக் கொண்டு, அதற்கு நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும். இப்போது சூழல் சரியில்லாததால், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாமென்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் ���ூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.
ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#NewsUpdate | "கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா?
விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்." -சீமான்
@NewsIADN The thing here is, no matter which yard builds boats or systems for @indiannavy, whites get their hand dirty. I mean they dive in and out. Meanwhile @adgpi and @IAF_MCC does the opposite that too sitting on the fence!!!. Navy baked cakes while others bake brains 🧠.
The crowd psychology must have been taken into account when @DelhiPolice unleashed brutality upon people. Even law provides solace to attack on self defence. The injury is a result of mass casualty event created by Delhi police. The justification and cost for the effect will have to be shared by DP for which they are responsible as well.
The misuse of criminal machinery against Ruchika Singh is unacceptable. Profanity does not attract criminal case. 50% of Lok Sabha MPs have criminal cases against them, close to 100 MPs in the BJP. The Police can focus their energy towards them, not a 25-year old! Harassment of the young must STOP immediately!
You may well be informed that your incompetence in handling has led a nationwide uproar, that in turn had cost this government lead by Mr. @narendramodi dearly. Not only that, the blatant violation on service rules by the law enforcement officers will cost the concerned. India is still a democracy, just so that you know.
@PTI_News@sambitswaraj Home minister is responsible for highly sensitive law and order matters. What processes were followed before brutalising fires were made on innocent protestors?. Will home minister be accountable and respond ?.
@DelhiPolice Again, your fact check seem to be fact checked. ✅. All your officers committed crimes and violations of service are hereby on notice. All this involved will be taken to law.