அன்னைக்கு ரகுபதி அடி வாங்கினார் இன்னைக்கு எம் ஆர் கே பன்னீர்செல்வம் சுத்தி சுத்தி அடி வாங்குகிறார்🤣🤣
தரவுகளோட உடனுக்குடன் அடிக்கிற கூட்டம்டா நாங்க💪🏻
வேளாண்துறை அமைச்சர்🔥
#DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் #FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு.@mkstalin தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?
#CauveryIssue-க்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், #MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?
⚠️ பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும்போது கவனம்!
தமிழகத்தில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்யும்போது, பெயரின் முதல் எழுத்து (Initial) மற்றும் பெயர் வரிசையை சரியாகப் பதிவு செய்வது மிகவும் முக்கியம்.
உதாரணமாக:
❌ தவறு: A AGALYA
✅ சரி: AGALYA A
பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்யும்போதே, எதிர்காலத்தில் கல்விச் சான்றிதழ்கள், ஆதார், PAN, வங்கி மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் ஒரே பெயர் வடிவம் தொடரும் வகையில் கவனமாகப் பதிவு செய்யுங்கள்.
ஒரே பெயர் வடிவம் — அனைத்து ஆவணங்களிலும் ஒரே அடையாளம்!
பெயர் பதிவு செய்யும் போது ஏற்படும் சிறிய தவறுகள் எதிர்காலத்தில் ஆவணத் திருத்தம் உள்ளிட்ட சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே பெற்றோர்கள் அனைவரும் கவனமாக செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எந்தத் தாமதமும் இன்றி...
அம்பத்தூர் மக்களின் நலனுக்காக!
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
// 4 லச்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது ஒரு கார் தயாரிக்க என்று பேசும் சீமான், தனது வீட்டில் 3 சொகுசு கார்களை வைத்துள்ளான்(ISUZU, BMW & TOYOTA Fortuner). //
Bathil sollu ga Ntk Guys....
@arun10venkat Ingenthu 39 seats to nearly 60 seats
Oru seat ku 6 assembly apdina 3 and half assembly seat ooda votes oru party ku Venum to get one seat
Now 60 ku poitu na
4 assemble seats for 1 seat. So vote canvas ipo 2.5 assembly votes panna pothum. 1 seat score pannirlam
தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை
ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.
அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும்.
ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.
பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.