மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், ‘புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்;
கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்,
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#களத்தில்_அஇஅதிமுக
#AIADMK
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை.
உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும்.
ஆனால் திரு. @mkstalin-ன் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்?
தமிழக மக்களே-
உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்…
உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா?
ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று
“இரட்டை இலை” 🌱சின்னத்தில்
உங்கள் வாக்கை செலுத்துவது தான்!
உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி!
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்!
ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ,
மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ,
அதேபோல், உங்கள் தமையனாக இருந்து @AIADMKOfficial அரசு உங்களைக் காக்கும்!
இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்தியவாக்கு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
Warm birthday wishes to the Honourable Chief Minister of #AndhraPradesh,
Thiru. @ncbn Avl. I also had the pleasure of conveying my wishes to you over a telephonic conversation.
What makes this day even more special is your selfless commitment- choosing to campaign for our @AIADMKOfficial-led NDA alliance in #TamilNadu even on your birthday. It truly reflects your dedication to the alliance and to public service. This is a gesture that will be remembered with deep respect and gratitude.
Your gracious presence and support have greatly strengthened our shared vision.
Looking forward to working together as State Governments towards mutual prosperity.
Wishing you good health, long life, and many more years of impactful leadership in service of the nation.
@AndhraPradeshCM
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை @mkstalin-ன் திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.
இன்னும் சில நாட்களில் அமையவுள்ள @AIADMKOfficial அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial
Ariyalur, Tamil Nadu: In the Ariyalur Assembly constituency, former Government Chief Whip Thamarai S. Rajendran is contesting as the AIADMK candidate. Today, he began his election campaign by offering prayers at the Draupadi Amman Temple
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
https://t.co/KGV8J03A96
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
ஏப்ரல் 23 அன்று தப்பித் தவறிக் கூட திமுக-விற்கு வாக்களிக்கும் எண்ணம் இருந்தால், அந்த தவறால் ஏற்படப் போகும் கொடூர விளைவுகளை ஒன்றுக்கு நூறு முறை கூட சிந்தியுங்கள் மக்களே!
பொதுநலன் கருதி உரைப்போர்
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Credits: @BJP4TamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
நங்கவள்ளி ஒன்றியத்தில் அஇஅதிமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் வீடு கட்டி தரப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் திமுக அரசு மூடியுள்ள அம்மா மினி கிளினிக் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் திறக்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026