@Srinivasan790 சொல்லிட்டே இருங்க
உங்களுக்கு இடைஞ்சல் தருவதே
உங்கள் இந்து போலீஸ் தான்
இந்துக்கள் ஆகிய நீங்கள் ஓட்டு
போட்ட அரசாங்கம் தான்
உங்களுக்கு ஆதரவு கூட தர வேண்டாம்
ஞாயமாக நடந்தாலே போதும்
இபிடி கட்சியை.நீங்கள்...
தேர்ந்தெடுக்க பழகுங்கள்
யோசியுங்கள்
நாடகமே உலகம்!! - இந்துக் கோயில்களும், பக்தர்களும் வெறும் பொம்மலாட்ட பொம்மைகள்தான்!! - பதிவு 1 (நீள்பதிவானதால் 3 பதிவுகளில் பதிக்கப்படுகிறது)
மாற்று மதத்தினரும், அரசியல் வியாபாரிகளும், வட்டங்களும் மாவட்டங்களும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து சுருட்டுவது மிகவும் சுலபம். செயின்ட் ஜான் பள்ளியினர், மற்றும் பல நில வியாபாரிகள் பரவலாக OMR, ECR உட்பட பல இடங்களில் நிலங்களை வாங்கியுள்ளனர். பல திருக்கோயில்களின் நிலங்கள் பல வகையில் பராதீனம் செய்யப்பட்டுள்ளன.
பூந்தமல்லி நெடுஞ்சாலையருகே உள்ள வேணுகோபால சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் பாப்பான்சத்திரம் பதிவு செய்யப்பட்ட நிலங்களை முன்பிருந்த அரசு ஜமீன்தார் ஒழிப்புச்சட்டத்தை தவறுதலாக பிரயோகித்து எடுத்துக்கொண்டது. ஆனாலும் இந்த நிலத்தில் செயின்ட் ஜான்ஸ் பள்ளியும், குயின்ஸ்லாண்ட் கேளிக்கைப்பூங்காவும் (இதைப் பற்றிய விரிவான பதிவு விரைவில்) பல வருடங்களாக இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில்
அரசு பின்புலம் உள்ள கும்பல்களை கோவில் துறையினர் 'வருக வருக என எதிர் கொண்டார்கள் அல்லது நமக்கென்ன வம்பு என வாளாவிருந்தார்கள். இவ்வாறு சுருட்டப்பட்ட திருக்கோயில் நிலங்கள், ஒன்றா இரண்டா என்ன?.
HRCE துறை எவருக்கும் அடங்காத ஓர் கொழுத்த பூதமாகி விட்டது. சராசரி மனிதன் சட்டத்தின் படி ஒரு நாள் தண்டிக்கப்படுவான் என்பதை நாம் காண முடிகிறது. தொடர் குற்றவாளியான அரசு பின்னணி கொண்ட துறை, நீதிபதிகளால் செல்லமாக கடிந்து கொள்ளப்படுவதோடு நின்று விடுகிறது! ஆர்வலர்களால் பெரு முயற்சி எடுத்து போடப்படும் வழக்குகள் கண் துடைப்புக்கான நாடக காட்சிகள் என்பது போலையே ஆகிவிடுகிறது. நீதிமன்றத்தில் தோற்றாலும் வெற்றி எப்போதும் துறைக்குத்தான்.
ஆட்சி அதிகார செல்வாக்கினால் நீதி மறைகிறது. சராசரி
ஹிந்துக்கள் எதையும் கண்டும் காணாதிருப்பதே இதற்கு காரணம். தானாக வந்து தட்டிக்கேட்பதில்லை. கூப்பிட்டாலும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வீதிக்கு வருவதில்லை. கோவில்களை வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் மோசடிகளிலிருந்து விடுவிக்க மத்திய அரசினால் பிரத்தியேக சட்டம் கொண்டு வர வேண்டியது, நாட்டுக்கு மிகவும் தேவையான விஷயமாகிறது.
மாற்றத்தை கொண்டு வருவோம் என சூளுரைத்து ஆட்சியிலமர்ந்திருக்கும் @TVKVijayHQ அரசிடம் இருந்து வருங்காலத்தில் நாம் நியாயத்தை எதிர்பார்க்கலாம் அல்லவா? (கரூர் திருக்கோயில் இனாம் நில விஷயத்தில் அவசரம் காட்டியவாறு இனி நடக்காதென்று நம்புவோம்.)
அறநிலைய அமைச்சர் திரு ரமேஷ் @RameshOffcl அவர்களின் கூற்றின்படி இது சாத்தியமே!
(தொடரும்)
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!