A director’s greatest reward is not the opening day—it is when the film continues to be remembered years later. Thank you for carrying #Subramaniyapuram for
18 unforgettable years.
Thank you to every artist, technician, Media and every member of the audience who made this journey immortal 😍
#18YearsOfSubramaniapuram
மணி
சுஜாதாவின் ‘’சேச்சா’’ சிறுகதையை நான் படித்தது ஒரு நாள் இரவு 10 மணிக்கு – அதன் பின், அந்தக் கதையை நினைத்தே, வெகுநேரம் வரை தூங்காமல் இருந்தேன்
இதைப் பற்றி பின்னொரு நாள் என் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நம்ம தெருவில இருந்த வீடுகளுக்கும், ஒவ்வொரு வீட்டிலும் இருந்த டிக்கட்டுகளுக்கும், நடந்த incidentகளுக்கும் இது போல குறைந்தது 5 புத்தகங்கள் எழுதலாம் – என்ன!!! சுஜாதா போல ஒருத்தன் இங்கு இல்லையே என்றான்
அது சரி தான் – இன்று காலை மணி கூப்பிட்டான் – 30வது கல்யாண நாள் என்று
எங்க தெருவில் உள்ள 47 வீடுகளில் (ஒரு பக்கம் 24, மறு பக்கம் 23 – முடிவில் கோவில்) 34ம் நம்பர் வீட்டில் அவன் அம்மாவுடன் குடியிருந்தான்
அவன் பிறந்த 2 மாதங்களில் அவன் அப்பா இறந்து விட்டதாக என்னோட அம்மா எப்போதோ சொல்லியிருக்கிறார் – சொத்து என்று எதுவும் கிடையாது
அவனும், அவன் அம்மாவும் குடியிருந்த வீடு, கல்கத்தா அம்பி அய்யருக்கு சொந்தமானது – பெரிய வீடு – கரண்ட் கிடையாது – சிம்னி விளக்கு தான் – வாடகை இல்லை – வீட்டை பெருக்கி, மெழுகி வைத்துக் கொள்ளவேண்டும்
மணியோட அப்பா வகைச் சொந்தக் காரர்கள் திருச்செந்தூர் பக்கம் இருந்தாலும், யாருமே நான் இருந்தவரை வந்து பார்த்ததில்லை. அம்மா வகையில் சொந்தக்காரர்கள் இல்லை
அவனுடைய அம்மாவிற்கு நாலு வீடுகளில் பத்து, பாத்திரம் தேய்க்கும் வேலை – தோசைக்கு அரைத்துக் கொடுப்பார் (அதற்கு 20 பைசா), தெரு முனையில் இருக்கும் குழாயில் வீடுகளுக்கு, பித்தளைக் குடத்தில் மாங்கு மாங்கென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பார் (15 பைசா கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்) – குழாயடியில் பெரிய சண்டை நடந்தாலும், இவர் சண்டை போடாது, ஒரு ஓரமாக நிற்பதையே பல முறை பார்த்திருக்கிறேன் – அவர் எந்த வேலையும் செய்யாது சும்மா இருந்ததை நான் பார்த்ததேயில்லை
அவர்கள் வீட்டுத் திண்ணை பெரியதாக இருக்கும் – நாங்கள் சுமார் 20 பேர் அங்கு உட்கார்ந்து annual leaveன் போது பல முறை சீட்டு (Ass) விளையாடியிருக்கிறோம் (ஆனால். அது ஓரு நார்மல் விளையாட்டென்றாலும் அவர் அவனை விளையாட விட்டதேயில்லை)
அதுபோலவே, தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருக்கும்போதே, யாரோ ஒருவனால் அது பம்பர சீசனாக மாற்றப்படும் – அதுவரையில் எங்களுடன் கோலி விளையாண்ட மணி, பம்பரம் வந்தவுடன் நின்றுவிடுவான் – பம்பரம் வாங்க காசு கிடையாது
எந்த வீட்டில் திவசம் என்றாலும், விஷ்ணு இலைக்கு அவனையே தெருவில் கூப்பிடுவார்கள் (அவனோட அம்மாவும் ‘’இன்னிக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்’’ என்பார்)
ஏதோ ஒரு நாளில், தெருவில் இருக்கும் பெண்கள் கோலாட்டத்துடன் தாமிரபரணி வரை போவார்கள் – அப்போது நடுவில் ஒரு பையன் ஒரு குடத்துடன் வரவேண்டும் (அந்த குடத்தில் என்ன இருக்கும் என்று எனக்குத் தெரியாது) – மணி தான் அந்தப் பையனாகப் போவான் – சாப்பாடு ஐட்டங்களுடன் ரூ.5 கொடுப்பார்கள் - பெரிய தொகை
ஸ்கூலில் படிக்கும்போது, அவன் 6வது போகிறான் என்றால், அந்த புத்தகங்களை யார் வீட்டிலாவது 7ம் கிளாஸ் போகும் பையனிடம் இருந்து அவனோட அம்மா கேட்டு வாங்கி வந்து விடுவார் – தீபாவளிக்கு யாராவது ஒருவீட்டில் அவனுக்கு புதுத் துணி கிடைத்து விடும்
திருச்சி டெய்லரும் அவனிடம் பைசா வாங்காது தைத்துக் கொடுப்பார் – ஒரு வீட்டில் துணி கொடுத்துவிட்டார்கள் என்றால், அவனோட அம்மா மத்த வீடுகளிலும் துணி கொடுத்துவிட்டதை சொல்லிவிடுவார் – 2 பேர் வீடுகளிலிருந்து அவர் வாங்கியதில்லை (அந்த ஒரு குணத்தை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது)
தோசைக்கு அரைக்கும் வீடுகளில், அவனோட அம்மா, சாப்பாடு-இட்லி என்று ஏதாவது கேட்டு பையனுக்கு வாங்கி விடுவார் – யாருமே அவருக்கு இல்லையென்று சொன்னதில்லை
அவன் பிரமாதமாக படிக்கும் பையன் இல்லையென்றாலும், ஆவரேஜூக்கு மேல்
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் அவனுக்கு சனிக்கிழமையானால், தலை முதல், கால் வரை சொட்டச் சொட்ட எண்ணையை வைத்து தேய் தேய் என்று தேய்த்து, வாய்க்காலுக்கு குளிக்க அனுப்பி வைப்பார்
11வது வந்தான் – பாஸூம் பண்ணினான் – என் வீட்டில் அண்ணன்கள் டைப்பிங் போய் கொண்டிருந்தார்கள் – என்னோட அப்பா, இன்ஸ்டிடியூட்டில் சொல்லி, அவனையும் free ஆகச் சேர்த்து விட்டார்
பாஸ் பண்ணினான், என்னோட அப்பா 1940களில் ஷார்ட் ஹேண்ட் பாஸ் பண்ணியிருந்தார் – அவர் கோர்ட்டில் வேலை பார்த்தபோதும், என்னோட அண்ணன்களுக்கு ஷார்ட் ஹேண்ட் சொல்லிக் கொடுக்கும் போது, இவனையும் வரச் சொல்வார் – எங்களுக்கு நேர் எதிர் வீடு - டிக்டேஷன் கொடுப்பார்
ஆச்சரியப்படும் விதமாக, எல்லோருமே பாஸூம் பண்ணினர் – அண்ணன்களுக்கு நல்ல வேலையும் கிடைத்தது
மணி TNPSC எழுதினான் – முதல் attemptல் பாஸூம் பண்ணினான் – வேலை கிடைத்தது – கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி RDO Post வரை வந்துவிட்டான் – இவன் நல்ல நிலைக்கு வந்தபின், அவனோட அம்மா ஒரு நல்ல பெண்ணை கல்யாணம் செய்து வைத்து, இப்போது ஒரு பெண், ஒரு பையன்
பையன் பாங்கில், பெண் ITல் பூனேயில்
இப்போது நினைத்துப் பார்க்கிறேன் ‘’அவனோட அம்மா ஒவ்வொரு நாளும் என்ன ஒரு மனநிலையில் இருந்திருப்பார் என்று’’
ரொம்ப வருடங்கள் கழித்து அவன் வீட்டுக்குப் போயிருந்தேன் – அவர்கள் நல்ல நிலைக்கு வந்தபின், அவனோட அம்மாவை ஒரு பட்டுப் புடவையில் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது
அவர் என்னுடைய அம்மா-அப்பா, மற்றும் பழைய விஷயங்கள், போன்றவற்றைப் பற்றிப் பேசும் போது அழுதார் – ஊரில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றி ரொம்ப உயர்வாகச் சொன்னார்
மணி: பையன், பெண் இருவரும் வந்திருக்கின்றனர் என்றான்
பையன் ஹாய் என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் Enfield பைக்கில் பறந்தான்
பெண் வெளியில் வந்தாள் – நல்ல அழகு – Branded Jeans/ T-Shirtல்
இவனிடம் கேட்டேன் ‘’இவர்களுக்கு நம்ம சன்னதித் தெருவை என்றாவது காட்டியிருக்கிறாயா - ஏதாவது சொல்லியிருக்கியா’’ என்று
அவன் ‘’நான் – அந்தக் காலத்திலே............ என்று எந்தக் கதையையும் இவர்களிடம் பேசுவதில்லை - அவசியமுமில்லை – அம்மாவிடமும் சொல்லியிருக்கிறேன் – பழைய விஷயங்கள் எதையும் பேசக்கூடாது என்று - அவர்களுக்கு நான் எதையாவது சொன்னால் அது அவர்களுக்கு கதையாகத் தான் இருக்கும்’’ என்றான்
Yes – அவர்கள் சில்வர் ஸ்பூனுடன் பிறக்கவில்லையென்றாலும், atleast எவர்சில்வர் ஸ்பூனுடன் பிறந்திருக்கிறார்கள்
கே.பாக்யராஜ் சார் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட திரை வைரம் – ஆர். பாண்டியராஜன்! 🌾❤️
"ஆண் பாவம்" – சிரிக்க வைத்தபடியே வாழ்க்கையை கற்றுக்கொடுத்த ஒரு காலத்தால் அழியாத காவியம்!
இன்று தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான செலவில் பிரம்மாண்ட படங்கள் உருவாகின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. காட்சிகள் மெருகேறியுள்ளன.
ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான சில படங்கள் மட்டும் காலத்தைக் கடந்தும் மக்களின் மனங்களில் வாழ்கின்றன. அவற்றில் முதன்மையான இடத்தைப் பெறும் திரைப்படம் "ஆண் பாவம்".
அதற்குக் காரணம் அதன் எளிமை... அதன் இயல்புத்தன்மை... அதன் மனிதநேயம்!
இந்தப் படத்தில் நடித்தவர்கள் நடிகர்களாகத் தெரியவில்லை; நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வாழும் மனிதர்களாகவே தோன்றுகிறார்கள்.
இயக்குநர் பாண்டியராஜனுக்கு இது இரண்டாவது படம். நடிகை ரேவதிக்கும் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. ஆனால் திரையில் அவர்கள் காட்டிய முதிர்ச்சி இன்று கூட வியக்க வைக்கிறது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வசனங்கள்.
சிரிக்க வைத்தபடியே சிந்திக்க வைக்கும் வசனங்கள். எளிமையாகச் சொல்லப்பட்டாலும், வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கும் வசனங்கள்.
அவற்றில் மறக்க முடியாத ஒன்று...
கிராம மக்களிடம் விரக்தியுடன் வி.கே. ராமசாமி பேசும் காட்சி:
> "ஒரு கோயில் கட்டினேன்... நீங்க யாரும் சாமி கும்பிட வரல... பள்ளிக்கூடம் கட்டினேன்... படிக்க வரல... குளம் வெட்டினேன்... குளிக்க வரல... ஆனா சினிமா கொட்டகையைக் கட்டினேன்... கொட்டுமேளத்தோட என்னை வரவேற்கறீங்க!"
நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், சமூகத்தின் மனநிலையை மிகத் துல்லியமாகக் குத்திக்காட்டும் வசனம் அது.
பொழுதுபோக்கை நேசிக்கும் மனித இயல்பையும், அத்தியாவசிய விஷயங்களை சில நேரங்களில் புறக்கணிக்கும் சமூக மனப்பான்மையையும் ஒரே வரியில் பதிவு செய்துவிடுகிறது.
அதேபோல், படத்தின் கிளைமாக்ஸ்...
ரேவதி பேச முடியாத நிலைக்கு சென்ற பிறகு, அவரைப் பார்க்க வரும் வி.கே. ராமசாமி கூறும் வார்த்தைகள்:
> "எங்க வீட்டுலேயும் சாமி படங்க இருக்கு... எந்த சாமியும் பேசாது... அதுக்காக அதையெல்லாம் வெளில தூக்கிப் போட்டுட்டோமா?"
இந்த ஒரு வரியில் எவ்வளவு ஆறுதல்! எவ்வளவு அன்பு! எவ்வளவு மனிதநேயம்!
ஒரு பெண்ணின் குறையை காரணம் காட்டி அவளை ஒதுக்காமல், "நீ இப்போதும் எங்களுக்கு மதிப்புமிக்கவள்தான்" என்று சொல்லும் உயர்ந்த மனப்பான்மை அதில் வெளிப்படுகிறது.
அதற்குப் பிறகு வரும் மற்றொரு மறக்க முடியாத வசனம்:
> "இங்காருக்க... எங்க பரம்பரைக்கு இடிக்கும் போது ஒன்னு, பொடைக்கும் போது ஒன்னு பேசமாட்டோம்ங்க... குத்தும் போது என்னவோ, அள்ளும் போதும் அதேதாங்க..."
இது ஒரு குடும்பத்தின் பெருமையை மட்டும் பேசவில்லை.
ஒரு தலைமுறையின் குணாதிசயத்தையே பேசுகிறது.
படிப்பு இல்லாமல் இருக்கலாம்... பணம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் கொடுத்த வாக்கை உயிராகக் காத்த மனிதர்கள் இருந்தார்கள்.
சூழ்நிலை மாறினாலும் நிலைப்பாட்டை மாற்றாதவர்கள் இருந்தார்கள்.
நல்ல நேரத்தில் ஒரு பேச்சு, கெட்ட நேரத்தில் ஒரு பேச்சு பேசாதவர்கள் இருந்தார்கள்.
அந்த தலைமுறையின் வாழ்வியல் மதிப்புகளுக்கு சாட்சியாக நிற்கும் திரைப்படம் தான் "ஆண் பாவம்".
பாண்டியராஜனின் அப்பாவித்தனமான நகைச்சுவை... பாண்டியனின் இயல்பான நடிப்பு... ரேவதியின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு... வி.கே. ராமசாமியின் அற்புதமான கிராமத்து தந்தை கதாபாத்திரம்...
இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படமாக அல்ல, ஒரு வாழ்க்கை அனுபவமாக மாற்றுகின்றன.
இன்றைய Gen Z தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்த்தால், அவர்கள் ஒரு பழைய படத்தைப் பார்ப்பதில்லை.
இன்று தேடித் தேடியும் அரிதாகக் கிடைக்கும் மனிதர்களைப் பார்ப்பார்கள்.
உறவுகளுக்கு மதிப்பு கொடுத்த மனிதர்களை...
வாக்குறுதிகளை உயிராக நினைத்த மனிதர்களை...
குறைகளை விட குணங்களை நேசித்த மனிதர்களை...
"ஆண் பாவம்" ஒரு நகைச்சுவைப் படம் மட்டுமல்ல.
அது தமிழர் கிராமிய வாழ்க்கையின் மண்வாசனை... உறவுகளின் வெப்பம்... மனிதநேயத்தின் ஆழம்... கொடுத்த வாக்கின் மதிப்பு...
இவற்றை காலத்திற்காக பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு உயிருள்ள நினைவகம்.
இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வேண்டுகோள்...
ஒருமுறை "ஆண் பாவம்" படத்தைப் பாருங்கள்.
நீங்கள் ஒரு கதையை மட்டும் பார்க்க மாட்டீர்கள்.
இன்று தேடியும் கிடைக்காத மனிதர்களையும்... உறவுகளையும்... வாழ்க்கை மதிப்புகளையும் பார்த்துவிட்டு வருவீர்கள்.
சில படங்கள் வெற்றி பெறும்... சில படங்கள் காலத்தை வெல்லும்... "ஆண் பாவம்" காலத்தை வென்ற திரைப்படம்! 🌾❤️
இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
“இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
காலை 6:05
ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
“உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
“சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
“மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
“இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
“பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
“2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
“என் மாத சம்பளம் ₹12,000.”
“அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
“₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
“மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
“நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
“என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
“ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
“மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
அவர் பேச்சை முடித்தார்.
அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
அறிவிப்பின் கீழே ஒரு வரி:
“பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
இரவு 10:00
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
“அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
“நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
ராம்கிஷன் புன்னகைத்தார்.
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
-படித்ததில் பிடித்தது
ரிதம் படம் இன்னிக்கும் டிவில போட்டா உட்கார்ந்து பார்ப்பேன் – நடிகர் அர்ஜுன்
நான் தொடர்ந்து ஆக்சன் படங்கள்தான் பண்ணிட்டு இருந்தேன்.ஆனா, ரிதம் மாதிரி ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை இருந்தது.
இயக்குநர் வசந்த் வந்து கதை சொன்னப்போ ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, இந்த படம் பண்ணலாமா வேண்டாமானு ஒரு குழப்பம் இருந்தது.
ஏன்னா, சில நேரங்களில் நல்லா இருக்கும் படங்களே ஓடாம போயிடும் இல்லையா… அதான் அந்த மாதிரி ஒரு தயக்கம்.
ஆனா, படம் ரிலீஸ் ஆன பிறகு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. ஆரம்பத்தில் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லாத மாதிரி தோணிச்சு. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் படம் நல்லா போச்சு.
நான் டைரக்ட் பண்ண படங்களைக்கூட டிவில போட்டா பார்க்க மாட்டேன். ஆனா, ரிதம் படம் போட்டா மட்டும் இன்னிக்கும் உட்கார்ந்து பார்ப்பேன்.
‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல.
பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது.
முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து - ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’.
“நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் - மதம் - பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால் நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை; 7 கோடி இந்துக்கள் வாளேந்தி களத்தில் குதிப்போம்” என்பதே வந்தே மாதரம் பாடலின் கருத்து.
வந்தே மாதரம் பாடலைப் பாடி வைணவ இந்து இளைஞர்கள் முஸ்லிம்களை கொலைசெய்து, முஸ்லிம் பெண்களை ‘பாலுறவு’ வன்முறைக்கு உள்ளாக்கி முற்றாக ஒழித்து விட்டு, காளி தேவி முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
அப்போது கதாநாயகன் சத்யானந்தாவிடம், “நாம் தான் முஸ்லிம்களை அழிந்து ஒழித்து விட்டோமே; இந்து இராஜ்யம் வரவில்லையே; ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு கதையின் நாயகன் சத்யானந்தா, “இப்போது நமக்கு எதிரிகளே இல்லை; ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள்; அவர்கள் தங்கள் அதிகாரங்களை நம்முடைய விஷ்ணு கடவுளுக்குத் தான் காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்று பதில் கூறுகிறார்.
இப்படி இஸ்லாமியர் ஒழிப்பையும் ஆங்கிலேயர் ஆதரவையும் கொண்டாடும் ‘வந்தே மாதரம்’ - மனுதர்ம கூட்டத்துக்கு தேசபக்தி பாடலாகி விட்டது. காந்தி ‘வந்தே மாதரம்’ பாடலை ஏற்பதற்கு மறுத்து விட்டார்.
1937இல் காங்கிரஸ், இப்பாடலில் இடம் பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளை ஏற்க மறுத்து விட்டது. தேசிய கீதமாக்க முடியாது என்று கூறி விட்டது.
2006இல் ‘வந்தே மாதரம்’ பாடலின் நூற்றாண்டாகக் கருதி, இந்தியா முழுதும் பள்ளிகளில் பகல் 11 மணிக்கு பா டலாம். அதில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் எதிர்ப்பு வரிகளைப் பாட வேண்டாம். விருப்பமில்லாத பள்ளிகள் வந்தே மாதரத்தைப் பாடத் தேவையில்லை என்று ஒன்றிய காங்கிரஸ் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
உண்மையில், 1996 - ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நூற்றாண்டே அல்ல; 1870இல் எழுதப்பட்டு, 1882இல் ஆனந்த மடம் நாவலில் சேர்க்கப்பட்ட பாடலுக்கு 1996 எப்படி நூற்றாண்டு ஆக முடியும்?
‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட மறுப்பவர்களை தேச துரோகிகள் என்று அப்போது குற்றம் சாட்டியது பா.ஜ.க.! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இப்பாடலை மதராஸாக்கள் (முஸ்லிம் பள்ளிகள்) உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.
ஆக, ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடல் அல்ல; இஸ்லாமிய வெறுப்பையும் ஆங்கிலேயர் புகழ்ச்சியையும் கொண்டது. பாடலின் முதல் இரண்டு பத்திகள், ‘தாய் மண்ணைப் புகழ்கிறது’ என்பதாலேயே அது தேசபக்திப் பாடலாகி விடாது.
- விடுதலை இராசேந்திரன்
05.07.2021- பெரியார் முழக்கம்.
போருக்கு முன்பு ஹார்முஸ்சை ஈரான் கட்டுப்படுத்தவில்லை ஆனால் இப்போது கட்டுப்படுத்துகிறது.
போருக்கு முன்பு கப்பல்களிடம் 2 மில்லியன் டாலர் சுங்க கட்டணம் வசூலுக்கும் அதிகாரம் ஈரானிடம் இல்லை இப்போது இருக்கிறது..
போருக்கு முன்பு ஈரானின் எண்ணெய்க்கு தடை இருந்தது இப்போது இல்லை.
போருக்கு முன்பு அரபு நாடுகளில் அமெரிக்க ராணுவ தலங்கள் நல்ல நிலையில் இருந்தன இப்போது இல்லை..
போருக்கு முன்பு அமெரிக்காவில் எரிவாயு விலை 4 டாலர் குறைவாக இருந்தது, இப்போது 38% உயர்ந்து இருக்கிறது.
அதே சமயம் ஈரானில் இந்த போருக்கு முன்பு இருந்த அரசே இப்போதும் இருக்கிறது..
போருக்கு முன்பு ஈரானிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட யுரேனியமும் அதனிடமே இருக்கிறது..
உலகின் பெரிய 'வல்லரசு' என்று பெயர் பெற்ற நாடு ஒரு பிஸ்கோத்து என்று உலகம் உணர்ந்து கொண்டது இந்த போரால். இஸ்ரேல் என்பது அமேரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய கிழக்கு ரவுடி என்றும் அதற்கு உண்மையில் எந்த தார்மீகமும் இல்லை என்பதையும் உலகம் தெரிந்து கொண்டது. உலக மக்கள் மொத்தமும் சகோதரத்துவத்தின் பக்கமும், உலக அரசாங்கங்களில் யார் சரியான பக்கத்தில் நிற்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. பிரச்சினை என்று வரும்போது யார் தன் மக்கள் பக்கம் நிற்கிறார்கள் யார் சுயநலமாக இருக்கிறார்கள் என்பதை அவரவர்களே நிரூபித்து விட்டார்கள்.
ஒரு தலைவர் இறப்பதால் எந்த நாடும் வீழாது, தொடர்ந்து அடுத்தடுத்த தலைவர்களையும் மக்களையும் வீரமாக செதுக்கி வைப்பது மூலமே எந்த நாடும் தனது இறையாண்மையை பாதுகாக்க முடியும்.
எவ்வளவு தான் நம் பக்கம் நியாயம் இருந்தாலும், விஞ்ஞானத்தில் முதலீடு செய்து, நவீன போர் கருவிகளையும் எந்திரங்களையும் திடமாக வைத்து கொள்ளவில்லை என்றால், இங்கே நியாய தர்மம் எல்லாம் பேசுவதற்கு நாடே இருக்காது என்பது பாலஸ்தீனத்தீன் மற்றும் ஈரான், இஸ்ரேலை கையாண்ட விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கேஸ், எண்ணை போன்ற அன்றாட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு அந்தந்த நாட்டு மக்களை வைத்திருப்பது என்றாவது ஒரு நாள் நம் முதலுக்கே மோசமாக முடியும் என்பது தெளிவாகி விட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு எண்ணை வளம். நமக்கு வெயில் பலம். நாம் சோலார் குக்கர் முதல், அதிநவீன விறகடுப்பு சோலார் மின்சாரம், வெயிலில் விளையும் விவசாய பொருட்கள், அதை வைத்து பயோ கேஸ் தயாரிப்பு, பயோ டீசல், மின்சார வாகனங்கள், மாடி தோட்டம் உள்ளூர் பொருளாதாரம் என நமது முதுகெலும்பை பலப்படுத்த வேண்டும்.
முதல் முறையாக பாலஸ்தீன் தனது தாக்குதல்களை மிகப்பெரிய அளவில் சோஷியல் மீடியாவில் பரப்பியது இன்றைக்கு உலக மக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நேர்மையற்ற தன்மையை உணர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு முன்பு நடந்த பல போட்டிகளில் நாம் மீடியாக்கள் மூலம் அமெரிக்கா கட்டிய கதைகளையே நம்பி இருந்தோம். சோஷியல் மீடியா மக்களின் குரலாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை தோற்கடித்து நியாயத்தை எடுத்து காட்டியது. ஆக நமது ஒவ்வொரு நியாயத்துக்கும் சோஷியல் மீடியாவை சிறப்பாக பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும்.
உள்ளூர் சாதி ஆதிக்கம் முதற்கொண்டு சர்வதேச ஆதிக்கம் வரை வன்முறை எப்படி அநியாயத்தை பாதுக்காக்க பயன்படுத்தபடுகிறது என்பது தெளிவாகியது.
ஆண்களே ஆண்களால் ஆண்களுக்காக கட்டப்பட்ட அரசியல், உள்ளூர் அரசியலாக இருந்தாலும் சர்வதேச அரசியலாக இருந்தாலும், வாந்தி வரும் தரத்தில் இருக்கிறது. இந்த அரசியலின் முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தனது இடத்தை உடனடியாக பிடித்து அனைவருக்குமான அரசியலாக, உலகமாக உடனடியாக மாற்ற வேண்டும்.
இல்லை என்றால் நாம், மனிதர்களின் இறுதி தலைமுறையாக மாறிவிடுவோம்.
போருக்கு முன்பு புரியாத பல விஷயங்கள் இந்த போரில் நாம் கற்றுக் கொண்டோம். ஒவ்வொருவரும் தீவிர அரசியலில் இறங்கியே ஆக வேண்டும்.