திமுகவினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் மீது ஆணையிட்டு உறுதியேற்போம். தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம்!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#LetterToBrethren
''நான் சொல்லி செய்கிறவன் அல்ல, சொல்லாததையும் செய்பவன்!" கலைஞரின் முழக்கம் என்பது ''சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்.''
எனது பாணி என்பது ''சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்’’ - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#DMK4TN#VoteForDMK
“திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும்! திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது, அனைவரையும் ஒன்று சேர்க்கும்! திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும்! திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது, அரவணைக்கும்! இது ஒரு கட்சியின் அரசல்ல ஓர் இனத்தின் அரசு!’’ - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#DMK4TN #VoteForDMK
“உழைப்பு - உழைப்பு - உழைப்பு
ஓய்வை நான் என்றைக்கும் விரும்பியது கிடையாது. கலைஞர் சொன்னதுபோல உழைப்பு உழைப���பு, உழைப்பு. உங்களுக்காகத் தொடர்ந்து உழைப்பேன், உழைத்துக் கொண்டே இருப்பேன்.”
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
#DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாட்டிலிருந்து இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள 60 பேரில் 56 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயன்பெற்றவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் கூட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பல இளைஞர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று எளிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#StalinWave2026
மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பாஜக!
இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள். தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
வந்தால் நம் அனைவரின் இடஒதுக்��ீடும் காலி!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#NDABetraysTN
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்ச��ர்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசுப்பணி கனவை நம் #திராவிட_மாடல் அரசு தொடர்ந்து நனவாக்கி வருகிறது!
அந்த வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், TNPSC, USRB, TRB, MRB உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம், தமிழ்நாடு அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள சுமார் 9,801 பேர��க்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில் பங்கேற்றோம்.
இந்த விழாவில், நம் முதலமைச்சர் அவர்கள், ரூ.3.38 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி பணியாளர்கள் குடியிருப்புகளைத் திறந்து வைத்து,
அரசுத்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தேர்வுக்களம் Mobile App மற்றும் இணையதளத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்���ு,
ரூ.62.50 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
அரசு பணியில் இணைந்துள்ள அத்தனை இளைஞர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@Subramanian_ma @Anbil_Mahesh @Kayalvizhi_N
மகளிர் மனம் குளிரும் செய்தியை வெளியிட்டார் திராவிட நாயகர்! 🌄
💸 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் முன்பணம் - ரூ. 3,000
💸 கோடைக்காலச் சிறப்பு தொகை - ரூ. 2,000
என மொத்தம் ரூ. 5,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர்களின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
📈 திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிருக்கு ரூ. 2,000 மாக உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பதையே முதன்மை இலட்சியமாக வைத்து செயல்படும் ஒன்றிய பாஜக அரசு நம் மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் செய்த 25 துரோகங்களை பட்டியலிட்டு உள்ளோம்.
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏராளமான தீங்குகளைச் செய்துவிட்டு சதிகாரக் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் ஆவலாக வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியைப் பரிசளிப்பார்கள்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#NDABetraysTN
தி.மு. கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் திராவிடப் பொங்கல் கலை, இலக்கிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்!
சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#திராவிடப்_பொங்கல்