ஈழத்தமிழர் முட்டாள்கள் அல்ல. நாம்தமிழர் கட்சியால் மட்டுமல்ல, எந்தத் தமிழ்நாட்டு முதலமைச்சராலும் எமக்கு தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரமுடியாது . ஆனால் நாம் தமிழர் கட்சி அதிகப்படியான ஆசனங்களைத் தமிழக சட்டமன்றிலும் இந்தியப் பாராளமன்றிலும் பெறும்போது பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கும் சக்தியாக, வலுவாக (pressure force / key player) அது உருவெடுக்கும். அதன்மூலம்
சிங்கள- இந்திய உறவில் அழுத்தங்களைக் கொடுக்க முடியும்.
தமிழகத்தில் எமக்கான குரல், நாம் தமிழர் உறவுகளிடமிருந்து எப்போதும் எழுகிறது. குறிப்பாக ஈழத்தமிழர் விரோத நடவடிக்கைகளை நாம் தமிழர் கண்டிப்பது வழமை. எமக்கெதிரான திரைப்படங்கள் / ஆக்கங்கள் நாம் தமிழரால் நிறுத்தப்பட்டன. தலைவரையும் எமது போராட்டத்தையும் தடைசெய்த இந்திய மண்ணிலும் சமூக வலைத்தளங்களிலும் தலைவரின் படமும், தமிழீழத் தேசியக்கொடியும் பட்டொளி வீசி நாம்தமிழரால் காட்சிப்படுத்தப்படுகிறது.
நாம் தமிழர் என்பது தமிழ்நாட்டு தமிழீழ நலன்சார்ந்து போராடும் அரசியல் இயக்கம். அதை அரசியற்கட்சியாக பார்ப்பவர்களுக்குத்தான் தேர்தல் அரசியலில் “நாம் தமிழர்” தோல்வியடைந்ததாக இருக்கும். அது அரசியல் இயக்கம். ஒரு தேசத்தின் விடுதலையில் சராசரியாக அந்த மக்கள் தொகையின் 6% மக்களே பங்குபற்றுவர். நாம்தமிழரின் வாக்கு வீதமும் 4%-8% மட்டுமே, அதைவைத்து பல போராட்டங்களில் ஈடுபட்டு நாம்தமிழர் வெற்றி பெற்றுள்ளனர்.
பலஸ்தீனத்திற்காக மதத்தின் அடிப்படையில் முஸ்லீம் நாடுகள் குரல்கொடுப்பது போல் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஒரே தமிழ் மொழியின் அடிப்படையில் குரல்கொடுக்க நாம்தமிழர் போன்ற சமரசமில்லாத இயக்கங்கள் தமிழ்நாட்டில் தேவை.
நாம்தமிழரை பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் ஆதரிப்பது உண்மை, ஆனால் எதிர்ப்பவர்களில் பெரும்பான்மையினர் சிங்கள இந்திய ஒத்தோடிகளாக இருக்கின்றனர். அண்மையில் அர்ச்சுனாவிற்கு எதிரான எதிர்ப்பலையில் இதைப்பார்த்திருக்கலாம்.!
#Eelam
#நாம்தமிழர்
எனக்கு அப்போது அந்தத்
தீவிர உணர்வு இருந்தது. என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது. காலங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு பெரிய வீரர்கள் அந்த இளைஞர்கள். பெண் புலிகளைப் பார்த்து வியந்துபோயிருக்கிறேன்.
அவர்களைப்போல் போராளிகளைப் பார்ப்பது அரிது.
இங்கிருந்துகொண்டு, நாம் தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுகிறோம். ஆனால், இனம், மொழி, நிலம், குறித்துப் பேச கூடுதல் உரிமை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள்தான்.
ஈழப்பிரச்னை குறித்து படம் ஒன்றை இயக்கித் தரச் சொல்லி பிரபாகரன் கேட்டிருந்தார். உண்மையில், பிரபாகரனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது"
-இயக்குனர் இமயம் பாரதிராஜா-
🙏🏻ஆழ்ந்த இரங்கல்🙏🏻
எல்லோருக்கும் நீங்கள் இயக்குனர் இமயம்
ஆனால் எங்களுக்கு (ஈழத் தமிழர்களுக்கு)
எங்களை நேசித்த
எங்களுக்காக குரல் கொடுத்த
ஒரு உன்னதமான இன உணர்வாளர்.
சென்று வாருங்கள்
என்றும் நன்றியுடன் உங்களை நினைவு கூர்வோம்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழீழ தாயகத்தில் அத்துமீறி நுழையும் எதிரியின் உலங்கு வானூர்தியை அழித்தொழிக்கும் மேஜர் சுவர்ணன்.!

29.05.2000 அன்று மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன் ஆகிய மாவீரரின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது ‘சில்லறைச் சண்டைகள்’ மூண்டு தணிந்து கொண்டிருந்தன.
ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.
1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.
“டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.
“சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.
“டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.
சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.
“சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.
இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.
தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு பெருமகன்!
தொடக்கத்தில் ரெலோவின் முன்னணி உறுப்பினராகச் செயற்பட்ட சிவாஜிலிங்கம் அவர்கள், பின்னாளில் தேசியத் தலைவரையும் போராட்டத்தையும் முனைப்புடன் ஆதரித்து வந்தார். தேசியத் தலைவரின் முதிர்ந்த பெற்றோரைப் பொறுப்பேற்று, பல இடையூறுகளுக்கிடையிலும் இறுதிவரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பேணிக் காத்தமையே அவரது முதன்மையான பங்களிப்பாகும். ஏனையோர் தயங்கியபோதும், அவர்களுக்காகச் சிவாஜிலிங்கம் அவர்கள் துணிந்து நின்றார். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, மேலதிக மருத்துவத்திற்காகப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டதுடன், அயல்நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிருந்தார். அவர்கள் இயற்கை எய்தியபோது, அவர்களின் ஈமக்கடன்களை அவரே முன்னின்று நடத்தினார். டென்மார்க்கில் உள்ள மனோகரன் தன் கடமைகளைச் செய்ய முன்வராமல் புறக்கணித்தபோதும், சிவாஜிலிங்கம் அவர்கள் அப்பெற்றோருக்கான கடமைகளைச் செவ்வனே செய்து முடித்தார்.
அன்னார் ஆற்றிய கைம்மாறு கருதாப் பேருதவியையும், தன்னலமற்ற ஈகத்தையும் இத்தமிழ்ச் சமூகம் தன் நெஞ்சத்து நிறுத்தி, செய்நன்றி மறவாது போற்றுவதே தலையாய அறமாகும். பெருமதிப்பிற்குரிய சிவாஜிலிங்கம் அவர்களுக்கு உற்ற அரணாக நின்று உதவுவதென்பது அறநெறி, செய்நன்றி மற்றும் மாசற்ற மனிதநேயம் ஆகிய சீரிய மாண்புகளின் அடிப்படையில் நாம் ஆற்றவேண்டிய இன்றைய ஈடில்லாக் கடமையாகும். அதுமட்டுமன்றி, இது தமிழ்த் தேசியத் தலைவரையும், தாயகக் கனவான தமிழீழத்தையும் நெஞ்சிலேந்திப் பற்றுறுதியோடு ஆதரிக்கும் ஒவ்வொருவரதும் முதன்மையானதும் இன்றியமையாததுமான கடமையாகவும் முன்னிற்கின்றது.
-பிரதி பதிவு
என் தோழர்களுக்கு! -கேணல் கிட்டு.
நீண்ட காலமாக சிங்கள இனவாதப் பிடிக்குள் சிக்கி அல்லல் உற்றுக் கொண்டிருக்கும் எனது மக்களுக்கு, என்னால் முடிந்தவரை சேவை செய்ய விரும்புகின்றேன். ஆதரவற்று தினம் தினம் மடிந்து கொண்டிருக்கும் எனது மக்களுக்கு ஒரு தோழனாக, தந்தையாக, சகோதரனாக, நண்பனாக இருக்க விரும்புகின்றேன்.
🔺இயக்கம் என்பது அவர்களைப் பாதுகாக்கும் வெறும் இராணுவ அமைப்பு மட்டுமல்ல; அவர்களுக்கு நல்வழிகாட்டி; வாழ்வை வளப்படுத்தும் அமைப்பும் கூட.
🔺இயக்கம் என்பது மக்களுக்கு அமைதியையும், வாழ்வையும், வாழ்க்கையில் நம்பிக்கையையும் கொடுக்கின்ற. ஒரு அமைப்பாக விளங்க வேண்டும். எந்தக் கட்டத்திலும் மக்களுடைய சுதந்திரத்திற்கோ, வாழ்வுக்கோ இடையூறாக அமைந்துவிடக்கூடாது.
🔺நாம் ஆயுதங்களை ஏந்தியிருப்பது மக்களுக்கு ஓர் சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே. அதே ஆயுதங்கள் எமது மக்களுக்கே அச்சுறுத்தலாக ஒருபோதும் மாறிவிடக்கூடாது.
🔺விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் ஒவ்வொரு இளைஞனும் தான்
யாருக்காக போராடுகின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக உணர்ந்து கொள்ள
வேண்டும்.
🔺ஆயுதம் ஏந்துகின்ற ஒவ்வொரு இளைஞனும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு உள்ளானா என்பதை இயக்கம் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சில சமூக விரோத சக்திகள் ஊடுருவச் செய்வார்கள். இவ்விடயத்தில் இயக்கம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
🔺மக்களுடைய சுதந்திரத்திற்காகப் போராடும் இயக்கம் இயல்பாகவே மக்களை வழிநடத்திச் செல்லும்
தலைமையையும், அதிகாரத்தையும் பெற்றுக் கொள்கின்றது.
🔺அவ்வதிகாரமானது ஒரு குடும்பத் தலைவனுக்குரிய பொறுப்பையும், கடமையையும், தலைமையையும் கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, மக்களுக்கு எஜமானர்களாக மாறிவிடக்கூடாது.
🔺பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்துப் பழகும்போது அது ஒரு வகையில் சர்வாதிகாரத் தன்மைக்கும் இட்டுச் செல்லும். ஆனால் மக்களை நேசித்து, மக்களுடனேயே வாழும், மக்களின் அடிப்படைத் தேவையைப் புரிந்து கொள்ளும் ஒரு இயக்கம் சர்வாதிகாரத் தன்மைக்கு செல்ல முடியாது.
🔺இயக்கத்தில் தலைவர்களாக உள்ளவர்கள் மக்களில் சகல தரப்பினருடனும் ………… தொடர்புடையவர்களாகவும், சகலருடைய கருத்துக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
🔺எல்லோரையும் எமது மக்களாகக் கருதுபவர்களாகவும், எல்லோருடைய நல்வாழ்வுக்காகவும் தான் போராடுகின்றோம் என்பதை உணர்பவர்களாகவும் இருக்க வேண்டும்
-கிட்டு
23/06/1991
-எரிமலை,மாசி 1993.
#இதுவோரு_காலக்கடமை🙏🏾
ஐயா சிவாஜிலிங்கத்தின் சிகிச்சைக்கு எனது பங்களிப்பை மகிழ்ச்சியோடு நேற்று ரூபா ஒரு லட்சம் / 100 000 அனுப்பி விட்டேன்.
2024ம் ஆண்டு ஐயாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ரூபா 24 874 மகிழ்ச்சியாக அனுப்பினேன்.
இது விளம்பரம் தேடும் பதிவில்லை மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் பதிவு.
புலத்தில் இருந்து பணம் அனுப்புவார்கள் account number முன்பு நான்கு பூஜ்யம் போட வேண்டும்.
வல்வெட்டித்துறையில் தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தார். வழமை போல் அவரை இம்முறையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரித்திருந்தனர்.
அவரிடம் பின்வரும் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.
கேள்வி -
ஏன் அவர் உங்களுக்கு சொந்தக்காரர் என்றா கேக் வெட்டினீர்கள்?
பதில் -
அவர் சொந்தம் தான்,
ஆனால் நான் அதற்காக வெட்டவில்லை
கேள்வி -
அப்போ ஏன் வெட்டினீர்கள்?
பதில் -
அவர் தமிழின தலைவர்.
அதற்காகவே கேக் வெட்டினேன்.
கேள்வி -
அவரை தமிழின தலைவர் என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள்?
பதில் -
ரணில் விக்கிரமசிங்க சமாதான ஒப்பந்தத்தை பிரபாகரனுடன் தான் செய்தார்,
சிவாஜிலிங்கத்தோடு அல்ல.
இந்தப் பதிலைக் கேட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரே சிறிது நேரம் அதிர்ச்சியாகி நின்றார்களாம்.
அதுதான் சிவாஜி ஐயா...
#shivajilingam #sivajilingam #tamilpolitician
-பிரதி